உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இலங்கைத் தமிழர் வரலாற்றுக் காலக்கோடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குளக்கோட்டன் பற்றிய தகவலை எங்கு இடுவது. இவன் 1223 - 1260 காலப் பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவன் ஒரு சோழ ஆடியாளன் போல தெரிகிறது. --Natkeeran (பேச்சு) 00:04, 8 சூலை 2012 (UTC)[பதிலளி]

சற்று வேலைப்பளு என்பதால் பல தகவல்களை இணைக்க முடியவில்லை. இதனையும் இணைத்துவிடுவேன்.--Anton (பேச்சு) 02:04, 8 சூலை 2012 (UTC)[பதிலளி]


இந்தக் காலக் கோட்டில் இணைக்கப்பட்டு இருக்கும் ஓவியம் என்னத்தை கூறுகிறது என்று தெரியவில்லை. இராவணன் என்பது ஒரு கட்டுக் கதை, அதை வரலாறு என்று இங்கு தருவது சற்றும் பொருந்தவில்லை. மேலும் மனிதக் கூர்ப்பு படி இங்கு முதலில் தரப்பட்டு இருக்கும் தகவல்கள் தவறானவை. ஆகவே அவற்றை நீக்க வேண்டுகிறேன். இராமயணத்துக்கு காலம்?? எழுதப்பட்ட காலத்தையா குறிப்பிடுகிறீர்கள். இராமயணம் நடந்தது மாதிரி எல்லவா இங்கு வரலாற்றுக் காலக்கோடு தரப்படுகிறது?? இது கலைக்களஞ்சியம் என்பதை நினைவில் கொள்ளவும். --Natkeeran (பேச்சு) 00:09, 8 சூலை 2012 (UTC)[பதிலளி]

நாகர் என்பவர்கள் இலங்கைப் பழங்குடிகளில் ஒரு பிரிவினரா. அவர்கள் தமிழ் பேசினார்களா? இதற்கு தகுந்த சான்றுகள் தேவை. --Natkeeran (பேச்சு) 00:11, 8 சூலை 2012 (UTC)[பதிலளி]
தனிப்பட்ட ரீதியில் புராணம் போன்ற கதைகளில் எனக்கு நம்பிக்கையில்லை. தகவல்களை சேர்ப்பது என்ற வகையில் அவற்றைச் சேர்த்தேன். பொருத்தமற்றவை எனக் கருதுபவற்றை நீக்கிவிடுங்கள்.
மனிதக் கூர்ப்புபடி இங்கு முதலில் தரப்பட்டு இருக்கும் தகவல்கள் படு பொய் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். அவை எவையெனக் குறிப்பிட முடியுமா?

--Anton (பேச்சு) 02:04, 8 சூலை 2012 (UTC)[பதிலளி]

மேலே நற்கீரன் குறிப்பிடும் கருத்தை வழிமொழிகிறேன். யாராவது எதையேனும் எழுதிவிட்டால் அது ஆதாரமாகிவிடாது. கண்ட கண்டவற்றையெல்லாம் ஆதாரமாகக் கொண்டால், கலைக்களஞ்சியத்தின் நம்பகத் தன்மை இல்லாமலாகிவிடும். நாகர் தமிழ்ப் பேசினரென்பது நிறுவப்பட்ட உண்மையல்ல. அவ்வாறே இராவணன் என்பது வெறும் கட்டுக்கதை. நிறுவப்பட்ட உண்மைகளை மாத்திரமே கலைக்களஞ்சியம் ஆதாரங்களாகக் கொள்ள வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 01:11, 8 சூலை 2012 (UTC)[பதிலளி]

கண்ட கண்டவற்றையெல்லாம் என நீங்கள் கருதுவதென்ன? இராவணன் என்பது வெறும் கட்டுக்கதை என்று நீங்களும் நானும் ஒத்துக் கொள்ளலாம். ஆனால் வெறும் கட்டுக்கதை என்பதை தீர்மானிப்பவர்களாக இருக்கக்கூடாது. ஏனென்றால் பலருக்கு அது கதை. நிறுவப்பட்ட உண்மைகள் என நீங்கள் குறிப்பிடுவது என்ன? அதை எப்படி உண்மையென்று ஒத்துக் கொள்ள முடியும். எது பிழையோ அதைச் சரியாக சுட்டிக் காட்டி நீக்கிவிடுங்கள். அதைவிட்டு ஒட்மொத்த கட்டுரையும் பிழையென்று குறிப்பிடுவதுபோல் உள்ளது உங்கள் கருத்து. --Anton (பேச்சு) 02:04, 8 சூலை 2012 (UTC)[பதிலளி]


வணக்கம் அன்ரன். நான் கருத்துக் கூறிய முறை மிகப் பொருத்தமன்று. எனினும் எனது கருத்தின் சாரத்தை வலுயுறுத்த விரும்புகிறேன். நாம் தொல்பொருளிய நோக்கில், ஆதாரபூர்வ நோக்கில், வரலாற்றியல் நோக்கில் நிறுவப்பட்ட தகவல்களை இங்கு தர வேண்டும். இராமாயணம் என்ற தொன்மைத்தின் உள்ளடக்கத்தை வரலாற்று மேற்கோள்களாகக் கொள்ள முடியாது. அனுமான் இலங்கைக்கு வந்தார். அவர் தென்னிந்தியாவைச் சார்ந்தவர். ஆகவே அவரும் தமிழர் என்ற போக்கில் எழுதுவது கலைக்களஞ்சியமாக அமையாது. உலகம் 7000 ஆண்டுகள் முன் தோன்றியது, மனிதம் முழுமையாகப் படைக்கப்பட்டான், வேற்றினவாசிகள் எம்மை ஆளுகிறார்கள் என்று சில நம்பக்கூடும். ஆனால் அவை ஆதாரபூர்வமாக தகவல்கள் ஆகாது. --Natkeeran (பேச்சு) 03:15, 8 சூலை 2012 (UTC)[பதிலளி]

உசாத்துணைக்காக

[தொகு]

நற்கீரன், உசாத்துணைக்காக:

ஆகிய கட்டுரைகளையும் பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 00:52, 8 சூலை 2012 (UTC)[பதிலளி]

கடும் சொற்கள்

[தொகு]

இராவணன் என்பது ஒரு கட்டுக் கதை, தகவல்கள் படு பொய், யாராவது எதையேனும், கண்ட கண்டவற்றையெல்லாம், இராவணன் என்பது வெறும் கட்டுக்கதை போன்ற பதங்களை பாவித்திருப்பதை நான் எதிர்க்கிறேன். நீங்கள் எதையாவது மறுத்துச் சொல் விரும்பினால், தாராளமாகக் குறிப்பிடுங்கள். அதற்காக மற்றவரை தாக்கும் விதமாக சொற்கள் பாவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இராவணன் சிலருக்கு கதாநாயகன், இன்னும் சிலருக்கு கடவுள், சிலருக்கு வரலாறு. நீங்கள் இப்பதங்களைப் பாவித்த காரணம் சரியாயிருப்பினும், எங்கோ உள்ள சிலரின் நம்பிக்கையை கேலி செய்வதாகவே நான் உணர்கிறேன். இது என்னுடைய சொந்த ஆதங்கம் அல்ல. எதிர்க்கருத்து தெரிவிக்க முடியாத சில சமூகத்திற்கான, பழங்குடியினருக்கான குரல். நான் என்னுடைய தனிப்பட்ட கொள்கையை இங்கு வெளிப்படுத்தினால், பாதிக்கு மேற்பட்ட கட்டுரைகளைக் கேலிசெய்யவும், எதிர்க்கேள்வி எழுப்பவும் வேண்டியிருக்கும். ஏனென்றால் அவை எனக்கு கட்டுக் கதைகள். கலைக்களஞ்சியம் என்ற கருத்துக்கு மதிப்பளித்து, என் கொள்கைகளை பிரதிபலிக்கவில்லை. --Anton (பேச்சு) 03:09, 8 சூலை 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் அன்ரன். கருத்துத் தெரிவிக்கப்பட்ட விதம் தொடர்பான உங்கள் குற்றச்சாட்டை ஏற்கிறேன். அது என் தவறே. மன்னிக்க. ஆனால் நம்பிக்கைகளை அறிவியலாகவோ, வரலாறகவோ தர முடியாது. அதில் தெளிவு வேண்டும். இராவணன் என்ற கட்டுரையில் அது சிலரால் கொண்டிருக்கப்படும் நம்பிக்கைகள் என்பதைத் தெரிவிக்கலாம். ஆனால் அது வரலாற்றுக் காலக் கோட்டுக்குள் உண்மை போன்று வரக் கூடாது. நம்பிக்கைகளைப் பற்றி கட்டுரைகள் எழுதலாம். எ.கா சமயக் கட்டுரைகள். இது என்னுடைய தனிப்பட்ட கொள்கை கிடையாது. புறவய நோக்கில், நிறுவப்பட்ட மேற்கோள்களை ஆதாரமாக வைத்து கட்டுரைகள் எழுதுவது என்பது விக்கிப்பீடியாவின் கொள்கை ஆகும். இல்லாவிடின் en:Age of the universe, படிவளர்ச்சிக் கொள்கை, en:Extraterrestrial life போன்ற கட்டுரைகளில் நம்பிக்கைகளே அதிகம் வந்துவிடும். அறிவியல் வரமாட்டாது. இங்கு நம்பிக்கைகள் தரப்படவில்லை. நம்பிக்கைகள் தரப்படுவதென்றால் en:List of conspiracy theories நியாமான விளக்கங்கள் என்று தகுந்த இடம் கொடுக்க வேண்டி இருக்கும். இவற்றில் சில உண்மைக் கூறுகள் இருக்கலாம். ஆனால் அவ்வாறு நிறுவப்படும் போது அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.
  • "Anatomically modern humans appear from about 200,000 years ago." என்று அறிவியல் கூறும் போது நாம் "1,510,000 ஆண்டுகளுக்கு முன்பே" தமிழர்கள் வரலாறு தொடங்கிறது என்று கூறுவது மிகவும் தவறு. அப்படி என்றால் நாம் உயிரினங்களின் தொடக்கத்துக்கே போகலாம். ஆனால் அது நகைச்சுவையாக அமைந்துவிடும்.
  • ~ கிமு 8 - கிபி 1 ? எழுதப்பட்ட இராமயணக் காப்பியத்தில் அமையும் அரக்கனான இராவணன் என்ற கதாபாத்திரம் ஒரு தமிழன் என்று சிலரால் தற்காலத்தில் நம்பப்படுகிறது என்ற வாறு எழுதலாம். ஆனால் அதற்கு மேல் போய் "அப்படியாயின் இராவணனது காலம் அல்லது இராமாயண காலம் கி.மு.6000 முதல் கி.மு.800க்கு" என்று கூறுவது பொருத்தமன்று.
  • இவ்வாறே நாகர்கள் என்பவர்கள் இருந்தார்கள், அவர்கள் தமிழ் பேசினார்கள் என்பதற்கு தகுந்த cross checking ஆதாரங்கள் வேண்டும்.
எங்கு புறவய நோக்கில், ஆதார அடிப்படையில் கட்டுரைகள் எழுதப்படவில்லையோ. அங்கு நிச்சியம் நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டுகிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 16:00, 8 சூலை 2012 (UTC)[பதிலளி]


வணக்கம், நீங்கள் கூறிய கருத்துக்களுடன் உடன்படுகிறேன். அறிவியலுக்குப் பொருத்தமற்றவை எனக் கருதப்படுபவற்றை நீக்கிவிடுகிறேன். பொருத்தமற்றவை என ஏதாவது பகுதிகள் இருப்பின் யாராவது முன் வந்து பேச்சுப் பக்கத்தில் தெரிவித்துவிட்டு, நீக்கிவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். --Anton (பேச்சு) 16:39, 8 சூலை 2012 (UTC)[பதிலளி]

நன்றி. வேண்டின் கிமு 8- கிபி 1எழுதப்பட்ட இராமாயணத் தொன்மத்தில் வரும் இராவணன் என்ற கதாபாத்திரம் இலங்கைய ஆண்ட ஒரு தமிழன் என்று சிலரால் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடலாம். --Natkeeran (பேச்சு) 16:48, 8 சூலை 2012 (UTC)[பதிலளி]
கட்டுரையின் கீழ்ப்பகுதியில் பிற்குறிப்பு என ஒரு பகுதியில் இராவணன், நாகர் போன்ற நீரூபிக்கப்படாத விடயங்களை குறித்துவிடலாமா? --Anton (பேச்சு) 16:56, 8 சூலை 2012 (UTC)[பதிலளி]
அவ்வாறும் செய்யலாம். அவ்வாறு குறிக்கும் போது நாம் இயன்றவரை புறவநோக்கில் செய்வது நன்று. நன்றி. --Natkeeran (பேச்சு) 16:57, 8 சூலை 2012 (UTC)[பதிலளி]

இங்கே இதனையும் பார்க்கவும்

[தொகு]

இன்று இலங்கையில் சிங்களவர் எனும் அடையாளத்துடன் வாழும் ஒரு பிரிவினரான கறவா எனும் இனம் குறித்தும், அவர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இடம்பெயர்ந்தது தொடர்பான விபரங்கள் இங்கே உள்ளன. (Except for the aboriginal Veddahs all other communities living in Sri Lanka have migrated to the island at some time in the past) பார்க்க [1]