பேச்சு:இலக்குமி
திருமகள் என தலைப்புமாற்றம்
[தொகு]விட்னுவை திருமால் என்று மாற்றியது போல இலக்குமியை திருமகள் என்று மாற்றலாம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:17, 28 மே 2013 (UTC)
திருமகள் என்பது தமிழ்ச் சொல்லாக இருந்தாலும் பொதுவாக லட்சுமி என்ற பெயரே பரவலாக அறியப்படுகிறது. தமிழ் தவிர மற்ற அனைத்து மொழி விக்கி பக்கங்களும் லட்சுமி என்ற பெயரிலேயே உள்ளது. வடமொழி எழுத்துக்களைத் தமிழ்ப்படுத்தலாம் (லக்ஷ்மி-லட்சுமி). ஆகவே இப்பக்கத்தை லட்சுமி (இந்துக் கடவுள்) என்ற பக்கத்திற்கு நகர்த்துமாறு பரிந்துரைக்கிறேன்.Jamil2K (பேச்சு) 04:04, 12 சூலை 2018 (UTC)
லட்சுமி (இந்துக் கடவுள்) என்று தலைப்புமாற்றம்
[தொகு]திருமகள் (ஸ்ரீதேவி) என்பது லட்சுமி தேவியின் சிறப்புப் பெயர்களில் ஒன்றாகும். விக்கி கட்டுரைகளில் ஒரு பக்கத்தின் தலைப்பாக சிறப்புப் பெயர்களை வைப்பது முறையன்று. எடுத்துக்காட்டாக சிவனுக்கு ஈசன் என்று தமிழில் சிறப்புப் பெயர் இருந்தாலும் அப்பெயரை அக்கட்டுரைக்கு தலைப்பாக வைக்க இயலாது. ஆகவே லட்சுமி என்ற பெயரே இக்கட்டுரைக்கு பொதுவான தலைப்பாக இருக்கும் என்பதால் இந்தப் பக்கத்தை லட்சுமி (இந்துக் கடவுள்) என்ற தலைப்பிற்கு நகர்த்துகிறேன். நன்றி.Jamil2K (பேச்சு) 07:42, 15 சூலை 2018 (UTC)