உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பயனுள்ள கட்டுரை, செந்தி. இவ்வாறு அமிலம் மேலெழும்புவதை வழக்கில் எ(று|ரு)க்கலித்தல் என்று சொல்லிக் கேட்டுள்ளேன். நெஞ்செரிச்சல் ஏற்படும்போது சுக்குநீர் அல்லது ஓமநீரைக் குடிப்பதின் அறிவியல் அடிப்படை அறியப்பட்டுள்ளதா? -- சுந்தர் \பேச்சு 11:11, 20 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி சுந்தர், எங்கேனும் அகரமுதலியில் அவ்வார்த்தை சுட்டப்பட்டுள்ளதா? இருப்பின் நாமும் அவ்வாறே பயன்படுத்தலாம் அல்லவா?

//சுக்குநீர் அல்லது ஓமநீரைக்//

நான் அறிந்தவரையில் கேள்விப்படவில்லை, ஆனால் அமிலம் - காரம் நடுநிலையாக்கம் காரணமாக இருக்கலாம்.அதாவது அமில எதிர்ப்பி (antacid) போன்று தொழிற்படக்கூடும்--சி. செந்தி 14:17, 20 ஏப்ரல் 2011 (UTC)
தமிழ் விக்சனரியில் எதிர்க்களிப்பு என்று தந்துள்ளனர். நான் பயன்படுத்துவது அதன் மரூஉ போலும். நெஞ்சுகரித்தல் என்றும் எங்கள் வீட்டில் சொல்வதுண்டு. அமிலம்-காரம் நிலைப்படுத்தம் பற்றிய தகவலுக்கு நன்றி, செந்தி. -- சுந்தர் \பேச்சு 07:17, 21 ஏப்ரல் 2011 (UTC)
இப்படம் பற்றி ஆலமரத்தடியிலும், பயனர் பேச்சு:தகவலுழவன்#படமாற்றம் உரையாடப்பட்டது.-- உழவன் +உரை.. 07:57, 29 சூலை 2012 (UTC)[பதிலளி]

Thank you,very useful details.

S.RAKESH