உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இந்து சமயம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்து சமயம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்து சமயம் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்து சமயம் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்து சமயம் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்து சமயம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தோற்றம்

[தொகு]

இந்த கட்டுரையில் பின் வருமாறு குறிபிடபட்டுள்ளது,

" பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனை நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்."

சரி அவ்வரே எவரும் இந்து சமயத்தை தோற்றிவிக்கவில்லை என்றால், இந்த கட்டுரையில் பின் வருமாறு குறிபிடபட்டுள்ளது சரியா?

ஆகக் குறைந்தது, கி.மு 1500 ஆண்டுக்கு அணித்தான வேத காலப் பண்பாட்டில் தோற்றம் பெற்றது."

இந்த கட்டுரையில் இவ்வாறு குறிபிடபட்டுள்ளது சரியா?

உண்மை இந்து மதத்தை தோற்றிவைத்தவர்கள் பிராமணர்கள் தான்.

இந்து சமயம் எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

கவனிக்க: இக்கட்டுரை துப்பரவு செய்யப்பட வேண்டும், மேம்படுத்தப்பட வேண்டும். --Natkeeran 20:28, 16 மே 2006 (UTC)[பதிலளி]

ஆம். நேரம் கிடைக்கும்போது செய்கிறேன். -- Sundar \பேச்சு 04:13, 17 மே 2006 (UTC)[பதிலளி]


இந்த கட்டுரையில் பின் வருமாறு குறிபிடபட்டுள்ளது,

" பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனை நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்."

சரி அவ்வரே எவரும் இந்து சமயத்தை தோற்றிவிக்கவில்லை என்றால், இந்த கட்டுரையில் பின் வருமாறு குறிபிடபட்டுள்ளது சரியா?

ஆகக் குறைந்தது, கி.மு 1500 ஆண்டுக்கு அணித்தான வேத காலப் பண்பாட்டில் தோற்றம் பெற்றது."

இந்த கட்டுரையில் இவ்வாறு குறிபிடபட்டுள்ளது சரியா?

உண்மை இந்து மதத்தை தோற்றிவைத்தது பிராமணர்கள் தான்.



இந்து சமயத்தின் அடிப்படைகள் எவை? யாராவது விளக்க முடியுமா?

[தொகு]

இந்து என்ற முடிச்சுக்குள் பல வித தத்துவங்களை போட்டு வெளி உலகம் விளங்கிகொண்டாலும், அதன் முரண்பாடான கூறுகளை சற்று நுணுக்கமா அறிய சந்தர்ப்பம் வாய்ந்த நாமும் அப்படியே செய்வது அவ்வளவு பொருத்தமாக அமையாது. --Natkeeran 23:42, 28 ஜூலை 2006 (UTC)

இதை விட மிகப்பெரிய கேள்வி இருக்குமா என்று தெரியவில்லை. உங்களுடைய இந்தக் கேள்வியை விளக்குவதற்கு வரலாறு நோக்கி ஓடவேண்டியிருக்கிறது. வேதங்கள் இந்து மதம் என்ற ஒன்றை சுட்டவில்லை. வேதங்களின் நோக்கமெல்லாம் மக்களின் நல்வாழ்விற்கு என்பதாலும், பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு நபர்களால் கொண்டுவரப்பட்ட காரணத்தாலும், எழுத்து வடிவம் இல்லாது செவி வழியாகவே கடத்தப்பட்டதால் வேதங்களில் பல்வேறு முறன்கள் உள்ளன. அவற்றை தத்துவங்கள் என்று உலகம் கூறுகிறது. வேதங்களோடு இவை நின்றுவிடவில்லை. புராணங்கள், உபநிடதங்கள், மக்கள் உருவாக்கிய சிறுவழிபாடுகள் என்று எல்லா தத்தவங்களும் ஏதேனும் நோக்கில் மக்களுக்கு நன்மை தருவதற்காகவே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றிக்கு வேதாந்தம், சித்தாந்தம், அத்வைதம் என ஏராளமான பெயர்களும் அதற்கு கோட்பாடுகளும் இருந்திருக்கின்றன. அதன் பின் வந்த அன்னிய படையெடுப்புகள் பாரதத்திலிருந்து வழக்கங்களுக்கு இந்து என்று சிந்து நதியின் பெயரை வைத்துவிட்டன. ஒன்றுக்கு ஒன்று முறன்பட்ட பல்வேறு தத்துவங்கள் இன்று ஒரே நிழலின் கீழ் உள்ளன. இவற்றில் இறையை நம்பும் வழக்கம் முதல் இறை மறுப்பு வரை உள்ளன. நாத்திகம் என்ற இறைமறுப்பும் சட்ட ரீதியாக இந்து மதத்திற்குளாகவே வருகிறது. நாத்திகர்களுக்கு இயற்றப்படும் சட்டங்கள் இந்து சட்டப்பிரிவின் கீழே இயற்றப்படுகின்ற என்பது கூடுதல் தகவல். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:17, 10 செப்டம்பர் 2013 (UTC)

எழுதப்பட வேண்டிய உபதலைப்புகள்

[தொகு]
===வாழ்வின் நான்கு நிdaலைகள்===da

==தோற்றம், பெயர் மற்றும் சமூகம்==
===தோற்றமும் சமூகத்தின் அம்சங்களும்===

===இந்து சமயம் சட்டபூர்வ வரைவிலக்கணம்===
===தற்காலப் புவியியல் பரம்பல்===
===மரபு வழாத இந்து சமூகத்தில் தர்மம்: சாதி===

==இந்து தத்துவஞானம்: ஆறு Vedic schools சிந்தனைகள்==
===பூர்வ மீமாம்சை===
===யோகம்===
===உத்தர மீமாம்சை: மூன்று வேதாந்த இயக்கங்கள்===
====அத்வைத வேதாந்தம்====
====விஷிஷ்டாத்துவைத வேதாந்தம்====
====துவைத வேதாந்தம்====

==வழிபாட்டு முறைக் கலாச்சாரங்கள்==
===பக்தி இயக்கங்கள்===

===தந்திர வாதம்===

==இந்து சமயத்தில் முக்கிய குறியீடுகளும், themeகளும்==
===அஹிம்சையும், பசுவும்===
===இந்து symbolism===
===வழிபாட்டு வடிவங்கள்: மூர்த்திகளும், மந்திரங்களும்===
===மந்திரங்கள்===

==இந்து சமய நூல்கள்==

Jagadeeswarann99 தகவல் பிழைகள்

[தொகு]
  • இந்து சமயம் உலகின் பெரிய சமயம் இல்லை
  • இந்தியாவில் உள்ள நம்பிக்கைகள்/சமயங்கள் எல்லாம் இந்து என்று அறியப்படுவதில்லை.
  • அவதாரம், திராவிட சமயம் என்று கட்டுரையை உருவாக்கலாம். இந்து சமயம் என்ற அறிமுகக் கட்டுரையில் தனிப் பிரிவு பொருத்தமற்றது.
  • இறை தொண்டு பிரிவு பொருத்தமானது.

--Natkeeran 00:52, 29 ஜூன் 2010 (UTC)

2010ல் ஏதோ நான் கேள்வியுற்றவைகளை இணைத்திருந்தேன். தற்போது உலகில் மூன்றாவது பெரிய சமயம் என்பதற்கு ஆதாரங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்து சமயம் என்பதன் தோற்றம் வேதத்தினை சார்ந்தது. வேதத்தில் அனைத்தும் உள்ளமையால் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலிருக்கும் அனைத்து தத்துவங்களையும் இதற்குள் அடக்கிட இயலும். ஆனால் இந்து என்ற சொல்லின் தோற்றம் பாரதத்தின் நம்பிக்கைகள் அனைத்தையுமே குறிப்பதாகவே கருதப்பட்டு ஏற்படுத்தப்பட்டது. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:21, 10 செப்டம்பர் 2013 (UTC)

நடுநிலையற்ற தன்மைகள்

[தொகு]

கட்டுரையில் பெரும்பாலும் ஆதாரமற்ற தன்மையே காணப்படுகிறது.

\\அனைத்தும் இந்து சமயம் என்கின்ற ஒரே சமுத்திரத்திலே சங்கமமாகின்றன.\\ சமுத்தரம் என்று மிகப்படுத்தப்பட்டு சொல்லப்பட்டுள்ளது. நடுநிலை தன்மையை மீறுகிற செயல்இது,

\\இல்லாத/இயலாத மக்களுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், நோய்க்கு மருந்து, கல்விச்செல்வம் ஆகியனவற்றை அளிப்பதும் ஆகும்.\\

இவற்றை இந்துகளில் யார் செய்கிறார்கள். இது நடுநிலையற்ற தன்மையாகும்.

Sivane (பேச்சு) 06:42, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

இந்துக்களில் எவர் நல்லறத்தைச் செய்தால் உமக்கென்ன? இந்து சமயங்களின் மூலக் கோட்பாடுகளில் எதையேனும் குறித்திருந்தால் அதைப் பற்றிக் குறிப்பிடலாமே தவிர, நீங்கள் கற்பனை செய்து கொண்டு இந்துக்களெல்லாம் நல்லவர்களா என்ற வகையிற் கேள்வியெழுப்புவதும் அதற்கு அச்சமயத்தாரின் பதில்களைப் புறந்தள்ள நினைப்பதும் சுத்தக் கயமை.--பாஹிம் (பேச்சு) 08:18, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

மனு

[தொகு]

மனு நூல் பற்றி இந்து சமய கட்டுரைகளில் நி்ச்சயம் கூற வேண்டும். அது வலுவாக கடைபிடிக்கப்பட்ட காலக் கட்டத்தில் நிகழ்ந்த கொடூரங்களையும் விவரிக்க வேண்டும். இது இங்கு மட்டுமல்ல. எல்லா இந்து சமய கட்டுரைகளிலும் நிகழ வேண்டும்.

அதுவே நடுநிலை தன்மையாகும்.

Sivane (பேச்சு) 06:45, 21 செப்டெம்பர் 2012 (

வணக்கம் சிவனே. உங்கள் கருத்து சரியானவை என்பது என்னுடைய கருத்து. ஆனால் விக்கியில் நடு நிலை என்பது ஒரு தனிப்பட்ட பயனர்களின் கையில் மட்டும் உள்ளதனால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கின்றன. அதனால் நானே பொறியியல் சார் கட்டுரைகைளை மேன்படுத்துவதர்காக படிப்படியாக வரையலாம் என்று இருந்தேன் ஆனால் அவை தேவை அற்றது என்று இப்போது புரிந்து கொண்டேன். ஆதாரங்கள் பல உண்டு ஆனால் இங்கு அதை இணைக்க விரும்பவில்லை.விக்கியில் நடு நிலை இல்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டேன்.--சிவம் 07:44, 21 செப்டெம்பர் 2012 (UTC)

நடுநிலை என்பது நீங்கள் இடக்குமுடக்காகக் கேள்வி கேட்டுவிட்டு அதனை அப்படியே விட்டுவிடுவதல்ல. கேள்வி இருந்தால், அது தொடர்பானவர்கள் அளிக்கும் பதிலையும் இணைத்தாக வேண்டும். அப்போதுதானே நடுநிலை? மாறாக, நீங்கள் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பீர்களாம்; மற்றவர்கள் பதிலளித்தால் அதனைப் பற்றிச் சிறிதும் கணக்கெடுக்க மாட்டீர்களாம். இதுதானா நடுநிலைமை?--பாஹிம் (பேச்சு) 08:20, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

உண்மையை சொல்வதென்றால், ஆங்கில விக்கியில் இருக்கும் பிழையான கட்டுரைகளை தமிழாக்கம் செய்வது நடு நிலையா?? அதேவேளை ஆங்கில விக்கியில் திருத்தம் செய்யபட்ட பின்னும் அந்த பிழை திருத்தாமல் தமிழ் விக்கியில் தொடர்வது நடு நிலையா?? விமர்சனங்கள் வைப்பது தவறு என்று சொல்வது நடிநிலையா?? தேவை அற்ற பிரச்சனைகளை தேவைக்கு ஏற்றால் போல் உருவாக்குவது நடுநிலையா?? அதிகாரம் கையில் இருக்கின்றன என்பதனால் அதிகார துர்பிரயோகம் செய்வது நடு நிலையா?? பிழையான கருத்துகளை முன்வைத்து தமிழ் மக்களை முட்டாள் ஆக்குவது தமிழ் விக்கியின் நடுநிலையா?? என்னை நாளைய தினமே விக்கியில் இருந்து நீக்குவது நடு நிலையா?? எது நடு நிலை?? நடு நிலை என்பது பயனர்களை மட்டும் இல்லை அந்த கட்டுரையை வாசிக்கும் நேயர்களின் கருத்தை இணைத்துத்தான் நடு நிலையை பெற முடியும்!! அதிகாரத்தை வைத்து நடு நிலையை பெற முடியாது!!! --சிவம் 09:01, 21 செப்டெம்பர் 2012 (UTC)

சமயம்

[தொகு]

சைவ சமயம் , வைணவம் போன்றவை இந்து சமயத்தினை உட்பிரிவுகள் தானே? இல்லை இவை இந்து சமயத்தில் சேராதவையா? நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:59, 1 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

சைவம், வைணவம், காணதிபத்தியம், சௌரம், சாக்தம், கௌமாரம், சீக்கியம், பௌத்தம், நாத்திகம் என அனைத்துமே இந்து சமயத்திற்குள் அடங்குபவையே. தங்களுக்கு எதனால் இச்சந்தேகம் வந்தது என தெரிவித்தால் அதன் பொருட்டான விளக்கம் அளிக்க இயலும். மேலும் சிறு தகவல் இந்து மதம் என்ற சொல்லாடல் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் தான் அங்கிகாரம் செய்யப்பட்டது. அது வரை இந்தியாவில் நிலவி வந்த கிறிஸ்துவம், இசுலாம் தவிற அனைத்தையும் இந்து மதம் என்று அங்கிகரித்தார்கள். அதனால் தனித்தே வழங்கி வந்த சைவம், வைணவம், பௌத்தம், சீக்கியம் என அனைத்தையுமே இந்து மதமாக கருதுகிறார்கள். மொத்தத்தில் இந்து மதம் என்பது சரியான வரையரை செய்யப்படாமல் இருக்கும் பொது சொல்லாடல் ஆகும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:16, 1 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

சமயம் என்ற கட்டுரையில் இந்து மதம் என்று தனியாக குறிப்படப்பட்டிருந்தது.அதாவது அதுவும் ஒரு தனி மதம் போல் குறிப்பிடப்பட்டிருந்தது.அதனால் எழுந்ததே இவ்வையம்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:26, 1 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

நடைமுறையில் இந்து மதம் என்பதே அங்கரிக்கப்பட்டு விட்டதால், கட்டுரையில் உள்ளது சரியானதே. என்னுடைய சிறுவிளக்கம் உங்களுடைய ஐயங்களை தீர்த்திருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 13:37, 1 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

தீர்த்துவிட்டது சகோதரரே. நன்றி--நந்தினிகந்தசாமி (பேச்சு) 13:47, 1 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

மனிதனால் தோற்றுவிக்கப்படாத மதமா

[தொகு]

இந்து மதத்தைக் குருக்கள் தோற்றுவித்தனர் என்று இருந்தது, இந்து மதத்தைத் தோற்றுவித்தவர் இல்லை என்று திருத்தப்பட்டுள்ளது. ஆயின் இதனை மனிதன் தோற்றுவிக்கவில்லையா? --Sengai Podhuvan (பேச்சு) 20:05, 12 சனவரி 2016 (UTC)[பதிலளி]

சமக்கிருதம், சமஸ்கிருதம்

[தொகு]

சமக்கிருதம் - தமிழாக ஆக்கப்பட்ட வடசொல்
சமஸ்கிருதம் - வடமொழி ஒலியுடன் கிரந்த எழுத்து சேர்த்து எழுதப்பபட்ட சொல்
இத்தகைய சொற்களைத் தெளிவுக்காக அடைப்புக் குறியில் எழுதிக் காட்டலாம் --Sengai Podhuvan (பேச்சு) 11:33, 13 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இந்து_சமயம்&oldid=3747855" இலிருந்து மீள்விக்கப்பட்டது