உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இசுலாமியத் தீவிரவாதம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுலாமியத் தீவிரவாதம் என்னும் கட்டுரை இசுலாம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இசுலாம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தவறான விளக்கம்[தொகு]

இஸ்லாம் என்றால் என்னவென்று இஸ்லாத்துக்கு எதிரானவர்கள் குறிப்பிடுபவற்றை இஸ்லாம் கூறுவது போன்று குறிப்பிடப்பட்டுள்ளது தவறு. கட்டுரையில் உலகம் முழுவதையும் இஸ்லாமியச் சட்ட ஆட்சியின் கீழ் கொண்டுவர வரம்பற்ற தாக்குதல்களை நடத்தலாம் என்பதே ஜிகாத் ஆகும் என பெர்னார்ட் லீவிஸ் (Bernard Lewis) கூறுகிறார். மேலும் அவர் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இஸ்லாமியர் அல்லாத மக்கள் அடிமை வரி செலுத்த வேண்டும் என்றனர் என்கிறார் என்ற வசனங்களின் மூலம் இஸ்லாத்தைப் பற்றித் தவறான கருத்து முன் வைக்கப்படுகிறது. இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டு வரவென வரம்பற்ற தாக்குதல்களை நடத்தலாமென்று இஸ்லாம் எங்கேயும் குறிப்பிடவில்லை. மாறாக, இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் இல்லை (அல்-பகறா:256) என்றே திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. மேலும், பூமியில் குழப்பம் ஏதுமற்ற நிலையில் அநியாயமாக ஒருவரை கொலை செய்பவர் (இறந்தவர் மீது கொலைப் பழி இல்லாத நிலையில்) மனித குலம் முழுவதையுமே கொன்றவர் போன்றவராவார் (அல்-மாஇதா:32) என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. அடுத்தது, இஸ்லாத்தில் அடிமை வரி என்று எதுவுமில்லை. மாறாக, ஜிஸ்யா என்பது முஸ்லிமல்லாதோர் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய பாதுகாப்பு வரியாகும். அவர்கள் இஸ்லாமியப் படையிற் சேர்ந்து செயற்பட்டால், அவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. எனினும், முஸ்லிம்கள் படையிற் சேர்ந்து செயற்பட்டாக வேண்டிய அதே வேளை, ஸக்காத் வரி செலுத்தியாக வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளனர்.--பாஹிம் (பேச்சு) 07:45, 23 சூன் 2014 (UTC)[பதிலளி]

பெரும்பாலான பகுதி செய்தித் தொகுப்பாக அமைகிறதே தவிர தீவிரவாதக் குழுக்கள் உருவாவதற்கான காரணங்கள், அவற்றை ஆதரித்து உருவாக்கும் அரசியல் கொள்கைகள் என்பது குறித்து தகவல்கள் இல்லை. மதத்தைக் காரணம் காட்டும் பகுதிகள் உள்ளனவே தவிர தவிர மதத் தலைவர்களின் கொள்கையுடன் முரண்படுகின்ற தகவல்கள் இல்லை. பெரும்பாலான தகவல்களைத் "தீவிரவாதம்" எனும் பொதுத் தலைப்பிற்கு நகர்த்தலாம். --Kuzhali.india (பேச்சு) 10:59, 5 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

மத நம்பிக்கையை புன் புண்படுத்தும் விதமான கட்டுரை[தொகு]

இஸ்லாமிய தீவிரவாதம் என்பது ஒன்று இருக்கிறதா என்ற கேள்வி குறியாக உள்ளது? இஸ்லாமிய தீவிரவாதம் என்பது என்பது கட்டுரையின் தலைப்பு ஆனால் ஆனால் இஸ்லாமோ குர் ஆன் அல்லது நபிகள் அவருடைய வழியோ தீவிரவாத செயல்களை ஒரு போதும் ஆதரிக்கவும் இல்லை இங்கு இருக்கக்கூடிய ஒரு சில குர்ஆன் வசனங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது என்கின்ற கோணம் உருவாகிறது இந்த தலைப்பின் இஸ்லாமிய தீவிரவாதம் என்பது இஸ்லாத்தின் பெயரால் சில சமூக விரோதிகள் செய்யும் தீவிரவாத செயல்கள் தானே ஒழிய இஸ்லாம் ஒருபோதும் இதை வலியுத்தவில்லை


இசுலாமியத் தீவிரவாதம் என்ற இந்த கட்டுரை மத நம்பிக்கையை புன் படுத்தும் விதமாகவும் விக்கி பீடியா தளத்தின் விதிகளுக்கு எதிராகவும் உள்ளது

இந்த கட்டுரை வீக்கிப்பீடியாவின் விதிகளுக்கு எதிரான வகையில் உள்ளது இசுலாம் என்ற மதத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும் மத வெறுப்பு பிரச்சாரம் செய்யும் நபரின் ஒரு மதத்தின் மீதுள்ள வெறுப்பை இந்த கட்டுரையில் வெளிப்படுத்தும்.விதமாக உள்ளது .

இந்த கட்டுரை இந்த தளத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் Muthaliftntj (பேச்சு) 03:20, 6 பெப்ரவரி 2022 (UTC)

en:Islamic terrorism - இக்கட்டுரையை நீக்கிவிட்டுச் சொல்லுங்கள். --AntanO (பேச்சு) 04:48, 6 பெப்ரவரி 2022 (UTC)