பேச்சு:ஆப்பிரிக்கச் சிறுமான்
Appearance
சிறுநவ்வி என்ற பெயரை நான் கேள்விப்பட்டதில்லை. இப்பெயர் எவ்வாறு பெறப்பட்டது என அறிய ஆவல். மேலும் பெயருக்கான மேற்கோள் இணைத்தல் நன்று.--சிவக்குமார் \பேச்சு 15:23, 16 மே 2012 (UTC)
- நவ்வி என்பது Gazelleஐக் குறிக்கும். இம்பாலா என்பது சுலு மொழியில் Gazelle என்பதையே குறிக்கிறது. ஆயினும் Gazelleஐ விட இது சிறியதாக இருப்பதாலும் Gazelleஇலிருந்து வேறுபடுத்துவதற்காகவும் சிறுநவ்வி எனும் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தளத்தில் சிறுநவ்வி எனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 12:49, 17 மே 2012 (UTC)
- நவ்வி எனுஞ்சொல்லின் பயன்பாட்டினைக் கலிங்கத்துப்பரணியில் காணுங்கள். --மதனாகரன் (பேச்சு) 12:55, 17 மே 2012 (UTC)
- விளக்கத்துக்கு நன்றி, மதனாகரன். மேலுள்ள கலிங்கத்துப் பரணி பாடலில் நவ்வி என்பதற்கு மான் என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே சிறுமான் என்பதும் சிறுநவ்வி என்பதன் ஒரு பொருள் தருகிறது. மேலும் இது பொதுவான பெயராக இருப்பதால் இக்குறிப்பிட்ட இனத்தைக் குறிக்க ஆப்பிரிக்க சிறுமான் (அ) ஆப்பிரிக்க சிறுநவ்வி என்றோ அல்லது இம்பாலா என்றோ குறிக்கலாம். (நாட்டின் பெயர்களை உள்வாங்கிக் கொள்வதைப் போல சில விலங்குகளின் பெயர்களையும் தேவைப்பட்டால் உள்வாங்கிக் கொள்ளலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து) --சிவக்குமார் \பேச்சு 15:20, 17 மே 2012 (UTC)
அப்படியானால் ஆபிரிக்கச் சிறுநவ்வி (Africa = ஆபிரிக்கா) அல்லது ஆபிரிக்கச் சிறுமான் எனப் பெயரிடலாம். ஆப்பிரிக்காக் கட்டுரையில் இடம்பெற்ற உரையாடலை அவதானித்தேன். ஆப்பிரிக்கச் சிறுநவ்வி, ஆபிரிக்கச் சிறுநவ்வி, ஆப்பிரிக்கச் சிறுமான், ஆபிரிக்கச் சிறுமான்-இவற்றுள் ஏதேனும் ஒரு தலைப்பைப் பயன்படுத்தலாம் (இலங்கை வழக்கு அல்லது தமிழக வழக்கு). --மதனாகரன் (பேச்சு) 15:22, 17 மே 2012 (UTC)
- ஆப்பிரிக்கச் சிறுமான் என்ற தலைப்பிற்கு நகர்த்தலாம். (African gazelle என்ற ஒன்று இல்லாத நிலையில்)--சிவக்குமார் \பேச்சு 15:31, 17 மே 2012 (UTC)