பேச்சு:அரசியலமைப்புச் சட்டம்
ஆ.வி: A constitution is a set of fundamental principles or established precedents according to which a state or other organization is governed. ஆகவே, யாப்பு என்பதே மிகப் பொருத்தமானது. அல்லது வேறு பொருத்தமான சொல் வழங்கலாம். constitution அரசு அல்லது அரசாங்கத்திற்கு மட்டும் உரியதல்ல. அது நிறுவனங்களுக்கும் உள்ளது. அரசியலமைப்பு என்ற பதம் அரசுக்கும், யாப்பு என்ற பதம் அரசுக்கும் நிறுவனங்களுக்கும் பொருத்தமாக அமையக்கூடியது. --AntanO 17:49, 11 செப்டம்பர் 2015 (UTC)
- ஒரு நிறுவனத்தின் எழுதப்பட்ட சட்டதிட்டங்களை (constitution) எவ்வாறு அழைப்பது? பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை constitution என்பது இடத்திற்கேற்ப அரசியலமைப்புச் சட்டம் என்றோ யாப்பு என்றோ அழைக்கப்படும். --AntanO 02:23, 9 மே 2017 (UTC)
- @Mayooranathan: இந்தக் கட்டுரையின் தலைப்பு மாற்றம்பற்றிய உங்கள் கருத்தையும் தயவுசெய்து தெரிவியுங்கள். நன்றி?--கலை (பேச்சு) 17:29, 11 மே 2017 (UTC)
- ஆங்கிலத்தில் constitution என்றாலே அது அரசு அல்லது அரசு அல்லாத பிற நிறுவனங்கள் அனைத்துக்கும் பொருந்தும். ஆனால் தமிழில் இவை இரண்டையும் பொதுவாக ஒரே சொல்லால் குறிப்பதில்லை. தெளிவாக வேறுபடுத்தியே பயன்படுத்துகிறோம். அரசு தொடர்பில் "அரசியலமைப்புச் சட்டம்", "அரசமைப்புச் சட்டம்", "அரசியல் யாப்பு" போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏனைய நிறுவனங்களைப் பொறுத்தவரை வெறுமனே "யாப்பு" என்ற பயன்பாடு உள்ளது. இங்குள்ள கட்டுரையில் "அரசியலமைப்புச் சட்டம்" மட்டுமே கையாளப்படுவதால் தலைப்பை மாற்ற வேண்டியதில்லை. "யாப்பு" என்ற தலைப்பில் இன்னொரு கட்டுரை எழுதிக்கொள்ளலாம். ---மயூரநாதன் (பேச்சு) 02:25, 12 மே 2017 (UTC)
இலங்கைப் பாடத்திட்டங்களில் யாப்பு என்ற பதமே பயன்பாட்டில் உள்ளது. சோல்பரி யாப்பு அல்லது சோல்பரி அரசியல் யாப்பு என்பதனை விளங்கிக் கொள்வது இலகுவானது. இலங்கையை வழக்கைப் பொருத்தவரை, இலங்கையின் முதலாவது அரசியலமைப்புச் சட்டம் என்பதைவிட இலங்கையின் முதலாவது யாப்பு என்பது விளங்கிக் கொள்ள இலகுவானது. இன்றுவரை இலங்கைப் பல்கலைக்கழகங்கள் வரை இந்த வழக்கே உள்ளது. எ.கா: Political Science(2010) - க.பொ.த உ.த பாடத்திட்டம். தலைப்பை மாற்றாத்தேவையில்லை என்றால், விக்கித்தரவு இணைப்பை நீக்கி, யாப்பு என்பதற்கு இணைத்துவிடலாம். --AntanO 03:01, 12 மே 2017 (UTC)
- அன்ரன் ஆம், யாப்பு பொருந்துகின்றது. ஆனால் விக்கித்தரவில் மாற்றம் செய்யவேன்டாம். மேல்விக்கிப்பட்டியலில் குழப்பங்கள் நேரும். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:38, 12 மே 2017 (UTC)