உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அனுராதபுரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தக் கட்டுரைக்கு புவியியல் என்ற பகுப்புத் தேவையற்றது. ஆனால் அதனை அகற்ற முடியவில்லையே? ஏன்? --கோபி 16:45, 2 ஜூலை 2006 (UTC)

கோபி, அப்பகுப்பு வார்ப்புரு:புவியியல் அமைவு என்ற வார்ப்புருவின் மூலம் இணைக்கப்பட்டிருந்தது. நீங்கள் விரும்பிய மாற்றத்தை செயற்படுத்த அவ்வார்ப்புருவைத் தான் தொகுக்க வேண்டும். நான் தற்போது சரி செய்துள்ளேன்.--ரவி 07:51, 3 ஜூலை 2006 (UTC)

சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவு

அனுராதபுரத்தில் சுவாமி விவேகானந்தர் இந்துக்களிடையே பொது மைதானத்தில் நடத்திய சொற்பொழிவு புத்த மதத்தைச் சார்ந்த பிட்சுக்கள் மற்றும் புத்த மதத்தைச் சார்ந்தோரால் தம்பட்டங்கள் ஜால்ராக்கள் தட்டி எதிர்க்கப்பட்டு ரத்தக் களரி ஏற்படும் சூழ்நிலையில் நாமாவது சிறிது அகிம்சையைக் கடைபிடிப்போம் என்று இந்துக்கள் சுவாமி விவேகானந்தரால் சமாதானப்படுத்தப்பட்டு அமைதியாக முடிக்கப்பட்டது.[1]

என்ற பதிவு புத்த சமயத்தினரை இழிவுபடுத்தும் கருத்து நீக்கம் என்ற விமர்சனத்துடன் நீக்கப்பட்டுள்ளது.

மதத்தின் பெயரில் நடைபெறும் அரசியலுக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை, ஓர் இடம் சார்ந்த தகவல்களைத் திரட்டும் போது அதை ஏன் புத்தமத்திற்கு இழுக்கு என்று நினைக்கிறீர்கள்? சுவாமி விவேகானந்தர் புத்தமதத்தை இழிவுபடுத்தியவரும் இல்லை, புத்தரை நேசிக்காதவரும் இல்லை. ஒரு வரலாற்றுப் பிரயாணியின் தகவல்கள் அவ்விடம் சார்ந்த மனோபாவங்களையும் அரசியலையும் புரிந்து கொள்ள அவசியம். அப்படியில்லை எனில் இந்தியாவிற்கு பிரயாணம் வந்த ஆங்கிலேய, சீன பிரயாணிகளின் நாட்குறிப்பு கொண்டு இந்தியாவைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சிவப்பிந்தியரின் வரலாற்று நிகழ்வை அமெரிக்கரின் வார்த்தை மூலம் அறிய வேண்டியது இல்லை. எல்லா தரவுகளும் திரட்டப்பட்டு அதன் அடிப்படையிலேயே ஒரு வரலாற்றைப் புரிந்து கொள்ளமுடியும் என்பது என் கருத்து.

இவ்வாறு நீக்கப்படுவது தகும் எனில் தெரியப்படுத்தவும், இதே அடிப்படையில் துப்புரவு செய்யப்பட வேண்டிய கருத்துகள் மற்ற தலைப்பிலும் உள்ளன. ராமாயணத்தில் கீமாயண விமர்சனங்களையும் துப்புரவு செய்வோம். பகவத் கீதை விமர்சனங்களையும் நீக்குவோம்.

--Kuzhali.india (பேச்சு) 16:16, 3 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

நீங்கள் கூறிய கருத்துகள் கலைக்களஞ்சிய நடையில் இல்லை. அதனால் நீக்கப்பட்டது. அதை கீழ்க்கண்டவாறு எளிமையாக எழுதியிருக்க வேண்டும்.

//அனுராதபுரத்தில் சுவாமி விவேகானந்தர் இந்துக்களிடையே சொற்பொழிவை நடத்தினார். புத்த மதத்தவர்களிடம் பலத்த எதிர்ப்பு எழுந்ததால் உரையை முடித்துக் கொண்டார்// இந்த உரைக்கும் உங்களுடைய உரைக்கும் வேறுபாடு தெரிகிறதா? மற்ற கட்டுரைகளில் சீன, ஆங்கில பயணிகள் கூறிய கருத்தைப் பாருங்கள். விமர்சனங்கள் தகுந்த முறையில் கட்டுரைகளில் இருக்க வேண்டும். சரியான முறையில் எழுதப்பட்டவற்றை நீங்கள் நீக்கினால் அவை மீளமைக்கப்படும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:22, 3 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

கலைக்களஞ்சிய நடையில் இல்லாவிடில் தாங்களே மாற்றியமைக்கலாமே? அதை விடுத்து நீக்குவதும் உரையாடுவதும் நேரவிரயம்.

தொடர்புள்ள ஆங்கில இணைப்பும் ஆங்கிலத் தகவலும் இங்கே உள்ளன.

http://www.advaitaashrama.org/cw/volume_7/translation_of_writings/memoirs_of_european_travel_i.htm

I had heard that the Buddhists were very quiet people and equally tolerant of all religions. Buddhist preachers come to Calcutta and abuse us with choice epithets, although we offer them enough respect. Once I was preaching at Anuradhapuram among the Hindus — not Buddhists — and that in an open maidan, not on anybody's property — when a whole host of Buddhist monks and laymen, men and women, came out beating drums and cymbals and set up an awful uproar. The lecture had to stop, of course, and there was the imminent risk of bloodshed. With great difficulty I had to persuade the Hindus that we at any rate might practise a bit of non-injury, if they did not. Then the matter ended peacefully.

இது இழிவுபடுத்தும் கருத்தல்ல அவரது அனுபவம். தகவல்கள் சேகரிப்பு தேவையில்லை என்று அனைவரும் கருதும் பட்சம் நீக்கலாம். தகவல் இழப்பு என்னவோ நமக்குத்தான். சுவாமி விவேகானந்தருக்கல்ல.

இனவழிப்பு நடந்த ஓரிடம் குறித்த முந்தைய பிந்தைய பிரயாணிகளின் அனுபவங்களை சேமிப்பது வரலாற்று ரீதியில் அவசியம் என்பது என் கருத்து. -- −முன்நிற்கும் கருத்து Kuzhali.india (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

வரலாற்று ரீதியிலான கருத்துகள் பதியப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. //அனைவரும் கருதினால் நீக்கலாம்// அனைவரும் கருதுகின்றனர் என்பதால் தகவலை கட்டுரையில் இருந்து நீக்கமுடியாது. பொருத்தமானதா, கலைக்களஞ்சியத்திற்கு ஏற்றதா என்ற அடிப்படையிலேயே நீக்குவதா வேண்டாமா என முடிவு செய்ய வேண்டும். தகவலை தகுந்த முறையில் சேர்த்திருந்தால் நீக்கப்பட்டிருக்காது. சரியான முறையில் உரையை திருத்தி, கட்டுரைக்கு ஏற்ப சுருக்கியோ, விரிவாக்கியோ இன்னொரு முறை சேர்க்க முயலுங்கள். உங்கள் உரைகளில் கலைக்களஞ்சிய நடை இல்லாததால் நீக்க வேண்டியதாயிற்று. தேவையான இடங்களில் உரையாட வேண்டியிருக்கிறது. இந்த உரையாடலை பார்க்கும் மற்றவர்கள் தகுந்த மாற்றங்களை செய்ய முன்வருவார்கள். இது தான் உரையாடலின் நோக்கம். ஒரு எடுத்துக்காட்டாக உரையை திருத்தி காண்பித்தேன். எனக்கு தெரிந்திருந்தால் நானே திருத்தியிருப்பேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:23, 5 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
  1. எனது பயணம்; சுவாமி விவேகானந்தர்; இலங்கையும் புத்தமதமும்; பக்கம் 63,64;
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அனுராதபுரம்&oldid=1702158" இலிருந்து மீள்விக்கப்பட்டது