பேச்சு:அடிலெயிட் ஸ்ரைக்கர்ஸ்
அடிலெயிட் ஸ்ரைக்கர்ஸ் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
பக்கத் தலைப்பு
[தொகு]Adelaide Strikers என்பதை அடிலெயிட் ஸ்டிரைக்கர்ஸ் என்று தானே எழுத்துப்பெயர்ப்பு செய்ய வேண்டும்... ஸ்ரைக்கர்ஸ் என்று எழுத்துப்பெயர்ப்பு செய்தால் உச்சரிப்பு மாறுகிறது அல்லவா.. எனவே இப்பக்கத்தின் பெயரை அடிலெயிட் ஸ்டிரைக்கர்ஸ் என்றே மாற்றலாமே.--Vishwa Sundar (பேச்சு) 17:34, 5 பெப்ரவரி 2022 (UTC)
- ஸ்ட்ரைக்கர்ஸ் - ஸ்டிரைக்கர்சு: இவை சரியான ஒலிப்பு. இசுட்ரைக்கர்சு என எழுதலாம். இவற்றை எழுதுவதில் என்ன இலக்கணப் பிழை உள்ளது?--Kanags \உரையாடுக 22:21, 5 பெப்ரவரி 2022 (UTC)
அடிலெயிடு இசுற்றைக்கர்சு என்பதே சரியான எழுத்துப் பெயர்ப்பு. அடிலெயிட் என்றெழுதுவது பிழை. அங்ஙனமே ஸ்டிரைக்கர்ஸ் என்றெழுதுவதும் இசுட்ரைக்கர்சு என்றெழுதுவதும் ஸ்டிரைக்கர்சு என்றெழுதுவதும் தவறு. அவையெல்லாம் இலக்கணப் பிழைகள்.--பாஹிம் (பேச்சு) 03:48, 8 பெப்ரவரி 2022 (UTC)
- ædəleɪd/ என்று தானே உச்சரிப்பு இருக்கிறது. அதை எப்படி அடிலெயிடு எண்டு கூறலாம் , ஐயா ..Vishwa Sundar (பேச்சு) 17:51, 9 பெப்ரவரி 2022 (UTC)
விசுவா சுந்தர், நீங்கள் சுட்டிக் காட்டும் æ என்பது அகரத்துக்கும் எகரத்துக்கும் இடைப்பட்ட ஓசை. அது தமிழில் மொழிமுதலில் வருவதில்லை. அங்ஙனமே மதகு, உறவு, தகவு போன்ற சொற்களில் வரும் த, ற, க ஆகிய எழுத்துக்களின் ஓசை அகரத்துக்கும் எகரத்துக்கும் இடைப்பட்டதாயினும் அவற்றைத் தமிழில் வழங்க அகர ஓசையின் எழுத்து மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அவ்வழக்கத்தைப் பின்பற்றியே பிறமொழிச் சொற்கள் அவ்வாறு அகரத்துக்கும் எகரத்துக்கும் இடைப்பட்ட ஓசையில் ஒலிக்கும் போது அவற்றைத் தமிழில் அகர எழுத்தில் எழுதுவதே முறை. இதற்கு மாறான ஏற்கத்தக்க எம்முறையும் தமிழ் வழக்கத்தில் கிடையாது.--பாஹிம் (பேச்சு) 04:45, 10 பெப்ரவரி 2022 (UTC)
அடுத்ததாக, நீங்களே அடிலெயிட் என்று தான் மேலே எழுதியிருக்கிறீர்கள். இலக்கண முறைப்படி டகர மெய்யாக மாறும் (மக்கள் + தொகை = மக்கட்டொகை என்பது போன்ற) சொற்களைத் தவிர தமிழ் முறைப்படி டகர மெய்யில் எச்சொல்லும் முடிதலாகாது. அவ்வாறு எழுதுவது குற்றம்.--பாஹிம் (பேச்சு) 04:49, 10 பெப்ரவரி 2022 (UTC)