உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அஃப்ளாடாக்சின்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஃப்ளாடாக்சின் என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Aflatoxin என்பது Mycotoxinகளில் (பூஞ்சை நஞ்சுகளில்) ஒரு வகை மட்டுமே. இங்கே பாருங்கள். எனவே இந்தக் கட்டுரையின் தலைப்பை அஃப்ளாடாக்சின் என்றோ அல்லது வேறு பொருத்தமான தலைப்புக்கோ மாற்றலாமா? மாற்றிய பின்னர், வேண்டுமானால் பூஞ்சை நஞ்சு என்ற தலைப்பில் (Mycotoxin) ஒரு கட்டுரையை எழுதி விடலாம். --கலை 21:34, 10 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

அப்படியே மாற்றி விடுங்கள் கலை. முன்பக்கத்திலும் மாற்றம் தேவை.--Kanags \உரையாடுக 21:40, 10 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
கட்டுரையை உருவாக்கிய Nan இன் பேச்சுப் பக்கத்திலும் இது தொடர்பில் கேட்டு எழுதினேன். இப்போதுதான் உங்கள் பதிலைப் பார்த்தேன். அவரின் கருத்தையும் பார்த்துவிட்டு மாற்றுவோமா?--கலை 21:48, 10 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
இந்த Aflatoxin என்னும் சொல்லின் வரலாறாக ஆக்ஃசுபோர்டு அகராதி, "Etymology: < A. fla(vus (see def.) + toxin n." என்கின்றது. அதில் உள்ள "A" என்பது Aspergillus flavus என்னும் வகைப் பூஞ்சனம் (mould) என்பதில் இருந்து வருவது. ஆசுப்பெரச்சிலசு (Aspergillus) பிளேவசு என்பதை ஆசுப்பூஞ்சன நஞ்சு என்றும் மாற்றலாம். ஆசு என்றாலும் குற்றம், பற்று, என்று தமிழில் பொருள் உண்டு. ஆனால், இங்கே ஆசு என்பது ஆசுப்பெர்ச்சிலசு பிளேவசு (மற்றும் ஆசுப்பெர்ச்சிலசு பரசிட்டிக்கசு (Aspergillus parasiticus)போன்றவற்றில் இருந்து பெற்றது என்பதைக் குறிப்பதகாகக் கொள்ளலாம். இந்த ஆசுப்பெர்ச்சிலசு பிளேவசு என்பதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதிவிட்டால் விளக்கம் பெறும்.இந்த --செல்வா 01:28, 11 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

திருத்தங்கள் பற்றி

[தொகு]

அட்டவணையில் "மற்றும்" என்று வரும் இடங்களைச் சற்று திருத்தி உள்ளேன். சரி பார்க்கவும். மிக அதிகமாக "மற்றும்" என்னும் சொல் வந்தால் புரிந்துகொள்வது கடினமாக இருப்பினும், இயல்பாகவும் இல்லை. ஆங்கிலத்தில் கடைசியில் and சேர்ப்பது போல் நான் சேர்ப்பது மிகவும் செயற்கையாக இருக்கின்றது என்று நினைக்கின்றேன். பால் மற்றும் தேன் என்பதை விட பாலும் தேனும் என்று உம் சேர்த்து எழுதுவது இயல்பாக உள்ளது. 3, 4 சொற்கள் வந்தாலும் ஒன்று காற்புள்ளி இட்டு எழுதலாம் அலல்து உம் சேர்த்து எழுதலாம். சில இடங்களில் நேரிடும் சிக்கலையும் அறிவேன் (வேற்றுமைகளோடு சேர்ந்து வரும்பொழுது). --செல்வா 13:24, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]

stress எனும் சொல்லுக்கு தகைவு எனும் பொருள் என்பது இங்கே சரியா? தகைவு என்பது இயற்பியல் கலைச்சொல். உளைச்சல் என்ற சொல்லும் பொருந்தவில்லை. பேராசிரியர் உதவி தேவைப்படுகிறது.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 14:05, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]
"வறட்சியினால் உண்டான தகைவுறு சுற்றுச்சூழல்களுக்கோ பயிர்கள் உட்படும்போது" என்று வரும் இடத்தில் அந்த தகைவுறு என்னும் சொல்லை முற்றிலுமாக விட்டுவிடலாம். வறட்சி போன்ற சொற்களே தாக்கத்தை உணர்த்தும். பொதுவாக stress என்பதற்கு தகைவுறு என்பதோடு அழுத்தம், தாக்கம், நெருக்குறும், நெருக்கடிக்குள்ளாகும் என்று இடம்சார்ந்து (சிறிது விரித்தும்) எழுதலாம். தாக்கத்தால் ஏற்படுவது தகைவு. --செல்வா 14:31, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]

அப்படியே செய்யலாம். இந்த உரையாடலினால் தகைவு கட்டுரையை உரைதிருத்த முடிந்தது.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 18:02, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]

நன்றி மரு. கார்த்திகேயன்.--செல்வா 18:30, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அஃப்ளாடாக்சின்&oldid=1013622" இலிருந்து மீள்விக்கப்பட்டது