உள்ளடக்கத்துக்குச் செல்

பேசிக் நாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேசிக் அல்லது பேசிக் நாடுகள் (BASIC Coutries) எனப்படுவது மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளான பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். 28 நவம்பர், 2009 ஆம் ஆண்டு கோப்பன்ஹேகனில் நடைபெற்ற பருவநிலை உச்சி மாநாட்டில் இந்த நான்கு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டன. மேலும் தங்களுடைய குறைந்தபட்ச நிலைப்பாட்டையேனும் வளர்ந்த நாடுகள் ஏற்கவில்லை எனில் மாநாட்டில் இருந்து வெளியேறுவது என்றும் முடிவு செய்தன.[1] யை துவக்கி முன்னெடுத்துச் சென்ற சீனா, கோப்பன்ஹேகன் உடன்பாடு குறித்து அமெரிக்காவுடன் விவாதிக்கும் தூதுவராகச் செயல்பட்டது. இதையடுத்து, பசுமைக்குடில் வாயுக்களைக் குறைப்பது மற்றும் பருவநிலை நிதியுதவி ஆகியவை குறித்து இந்த பேசிக் நாடுகள் ஆராய்ந்தன. பின்னர் கோப்பன்ஹேகன் உடன்பாட்டில் கையெழுத்திடுமாறு மற்ற உறுப்பு நாடுகளை வலியுறுத்தின.[2]

இருந்தபோதிலும், இந்த உடன்பாடானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வாதிடுவது போல சட்டப்படியான உடன்பாடு அல்ல என்றும் அது வெறும் அரசியல் உடன்பாடு மட்டுமே என்றும் பேசிக் நாடுகள் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெளிவுபடுத்தின. கோப்பன்ஹேகன் மாநாட்டில் ஒத்துக் கொண்டபடி பசுமை வாயுக்களை குறைப்பது குறித்த தங்களுடைய திட்டத்தை 2010 ஆம் ஆண்டு ஜனவரி 31க்குள் அறிவிப்பதாகத் தெரிவித்தன.

மேலும், ஜி-77 நாடுகள் கூட்டமைப்பில் உள்ள ஏழை நாடுகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி அளிப்பது குறித்த சாத்தியக்கூறுகளை பேசிக் நாடுகள் அப்போது ஆலோசித்தன. இதன் விவரம் ஏப்ரல் மாதம் 2010ம் ஆண்டு கேப் டவுனில் நடைபெறும் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த அரசியல் நகர்வானது, ஏழை நாடுகளின் பருவநிலை மாறுபாட்டைக் குறைப்பதற்காக பணக்கார நாடுகள் அளிக்கும் குறைவான நிதி குறித்து அவர்களுக்கே வெட்கத்தை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்டதாகும்.[3]

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேசிக்_நாடுகள்&oldid=3793152" இலிருந்து மீள்விக்கப்பட்டது