பெல் பஜோ
பெல் பஜாவோ (Bell Bajao தமிழ்:மணியினை அடியுங்கள்) என்பது குடும்ப வன்முறை எதிர்ப்பு பிரச்சாரமாகும், இது எளிய செயல்கள் மூலம் குடும்ப வன்முறைகளில் ஈடுபடுவோரை தடுப்பதனை நோக்கமாகக் கொண்டதாகும் . குடியிருப்பாளர்கள், குறிப்பாக ஆண்கள், ஒரு பெண்ணுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடும் போது, அவர்கள் அண்டை வீட்டாரின் அழைப்பு மணியினை ஒலிக்கச் செய்து தேநீர் கடன் வாங்குவது, தொலைபேசியைப் பயன்படுத்துவது அல்லது தண்ணீர் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர். இதன் மூலம் மற்றவர்கள் அந்த குடும்ப வன்முறையினை தடுக்கும் வகையில் செயல்படுவார் என்பதையும் இது உணர்த்துவதாகும்.
இந்த பிரச்சாரம் குடும்ப வன்முறைக்கு எதிரான தனிப்பட்ட நடவடிக்கையை ஊக்குவிக்கிறது. இந்த பிரச்சாரத்தில் விருது பெற்ற பொது சேவை அறிவிப்புகள் மற்றும் ஊடகங்கள் மற்றும் பயிற்சி கருவிகள் இடம்பெற்றன. இந்த பிரச்சாரம் சிறுவர்களையும் ஆண்களையும் மையமாக வைத்து நடைபெறுகிறது . அவர்கள் குடும்ப வன்முறையைக் கண்டால் அதில் தலையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பிரச்சாரத்தின் ஒரு முக்கிய அம்சம் ஆண்கள் குடும்ப வன்முறைகளை ஏற்படுத்துபவர்களாக அல்லது அதனை முடிவிற்கு கொண்டு வருபவர்களாக மாற்ற வேண்டும் என்பதாகும்.
இந்தப் பிரச்சாரம் ஆகஸ்ட் 20, 2008 அன்று இந்தியாவில் தொடங்கப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் அமைச்சகத்துடன் இணைந்து , UNIFEM மற்றும் ஐ.நா. அறக்கட்டளை நிதியமும் பணியாற்றியது . ரிங் தி பெல் என்று ஆங்கிலத்தில் அறியப்படும் உலகளாவிய பிரச்சாரம் கிளின்டன் குளோபல் முன்முயற்சியில் தொடங்கப்பட்டது.[1]ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பான் கீ மூன் இந்தப் பிரச்சாரத்தில் இணைந்தார்.
திருப்புமுனை
[தொகு]பெல் பஜாவோ 2008 ஆம் ஆண்டில் ஒரு அமைப்பினால் அமைப்பால் உருவாக்கப்பட்ட பிரச்சாரம் ஆகும். இது குடும்ப வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தீவிர விழுப்புணர்வு பிரச்சாரமாகப் பார்க்கப்பட்டது. [2] இந்தியா முழுவதும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் கூடுதலாக தொலைக்காட்சி, வானொலி மற்றும் அச்சு விளம்பரங்களின் உதவியுடன், பெல் பஜாவோ! 130 மில்லியனுக்கும் அதிகமான மக்களை சென்றடைந்துள்ளது. [3] இந்த பிரச்சாரத்தில் இந்தியாவில் உள்ள மூன்று மாநிலங்களுக்கு பயணம் செய்த நகரும் நிகழ்பட வையம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது . கர்நாடக, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநில அனைத்து முக்கிய தொலைக்காட்சி வரிசைகளிலும் இது தொடர்பான விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டன [3] இந்த நகரும் நிகழ்பட வையத்தின் செயல்பாடுகள் கர்நாடகத்தின் நான்கு மாவட்டங்களில் 5.5 மில்லியன் மக்களை சென்றடைய உதவியது. [3] பிரச்சாரம் முக்கியமாக ஆண்கள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டது மற்றும் வீட்டு வன்முறை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான நிதியுதவி யுஎன் வுமன் அளித்தது. அதனை பிரேக் துரூ எனும் அமைப்பு செயல்படுத்தியது. [3]
நகரும் வைய வாகனம் மூலமாக 103 மற்றும் 1298 ஆகிய உதவி எண்கள் மக்களைச் சென்றடைய உதவின. மேலும் கண்கவர் காட்சிகளாஇக் கொண்ட நிகழ்படங்கள் , ம்மக்களிடையே பரவலாக அறியப்பட்ட பிரபலமானவர்களின் ஆதரவான உரைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலமாக இந்த பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.[3]
மேற்கண்ட முன்முயற்சிகளுடன், 575 ஊழியர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், CBO, கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசத்தில் நேர்மறையான சிந்தனை கொண்ட மக்கள் குழு உறுப்பினர்களுடன் இணைந்து சுமார் 23 பட்டறைகள் மற்றும் பொதுக் கல்வி நடவடிக்கை பிரச்சாரங்கள் நடத்தப்பட்டது. [3]
சான்றுகள்
[தொகு]- ↑ Allen, Jane E. "How Rape Prevention, Cooking Stoves Can Save the World". abcnews. பார்க்கப்பட்ட நாள் 28 May 2013.
- ↑ "A campaign to end domestic violence" (in en). mint. https://www.livemint.com/Politics/YBTkmK3gQtnxzfS2ZnhW0O/A-campaign-to-end-domestic-violence.html.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Bell Bajao Ringing the bell to stop violence in India". https://asiapacific.unwomen.org/en/news-and-events/stories/2011/4/bell-bajao-ringing-the-bell-to-stop-violence-in-india. பார்த்த நாள்: 2 March 2021."Bell Bajao Ringing the bell to stop violence in India". UN Women | Asia and the Pacific. 20 April 2011. Retrieved 2 March 2021.