பெலீஸ் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரை | நாட்டிற்கு முன்னேற்றத்தை அளிப்பது கல்வி (Education Empowers A Nation) |
---|---|
வகை | தேசியப் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | ஆகஸ்டு 1, 2000 |
கல்வி பணியாளர் | 400 |
பட்ட மாணவர்கள் | 4,000 |
அமைவிடம் | , |
வளாகம் |
|
நிறங்கள் | கத்தரி நீலம் & தங்கம் |
தடகள விளையாட்டுகள் | யூபீ பிளாக் ஜாகுவார்ஸ் |
சுருக்கப் பெயர் | UB |
நற்பேறு சின்னம் | தி பிளாக் ஜாகுவார் |
இணையதளம் | www.ub.edu.bz |
பெலீஸ் பல்கலைக்கழகம் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பெலீஸ் நாட்டில் உள்ளது. இங்கு இள நிலை, முது நிலை ஆகிய பிரிவுகளில் பட்டங்களை வழங்குகின்றனர்.[1] இதன் மத்திய வளாகம் பெலீஸ் நாட்டின் பெல்மோப்பான் நகரில் அமைந்துள்ளது. இங்கு சூரிய ஆற்றல் திட்டத்தை செயல்படுத்துகின்றனர். இதன் மூலம் மின்சாரத் தேவைகளில் தன்னிறைவு அடைய முடியும்.
வளாகங்கள்
[தொகு]முற்காலத்தில், தனித் தனி கல்லூரிகளாக செயல்பட்டவற்றை ஒன்றிணைத்து பெலீஸ் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கல்லூரியும் பல்கலைக்கழகத்தின் வளாகங்களாக அறிவிக்கப்பட்டன.
- பெல்மோப்பான் மத்திய வளாகம்
இந்த வளாகத்தில் பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான அலுவலகங்கள் அமைந்துள்ளன. இங்கு உள்ளூர் மொழிகளுக்கான கல்வி மையம் அமைந்துள்ளது. இங்கு ஆங்கிலம், தகவல் தொழில் நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளைக் கற்கின்றனர். இங்கு அறிவியல் ஆய்வகங்களும் அமைந்துள்ளன.
- வேளாண்மை வளாகம்
இங்கு வேளாண்மை, இயற்கை வளங்கள் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் இரண்டாண்டு கல்வித் திட்டங்கள் உள்ளன.
- பெலீஸ் நகர வளாகங்கள்
- மேலாண்மை, சமூகவியல் வளாகம்
- இங்கு வணிகம் தொடர்பான பாடப்பிரிவுகளில் கல்வி கற்பிக்கின்றனர்.
- கலை, கல்வி வளாகம்
- இங்கு கலை, செவிலியர் பயிற்சி, உடல் நலக் கல்வி, சமூக சேவை உள்ளிட்ட
பாடப்பிரிவுகளில் பாடங்களைக் கற்பிக்கின்றனர்.
- அறிவியல், தொழில் நுட்ப வளாகம்
- புண்டா கோர்தா வளாகம் [2]
விளையாட்டு
[தொகு]இங்கு கைப்பந்தாட்டம், கால்பந்தாட்டம், மென்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், கராத்தே, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது .[3]
சான்றுகள்
[தொகு]- ↑ "University's Goals". University of Belize. Archived from the original on 2012-04-26. பார்க்கப்பட்ட நாள் 2012-04-12.
- ↑ "Campus Locations". University of Belize. Archived from the original on 2012-04-18. பார்க்கப்பட்ட நாள் 2012-04-12.
- ↑ "Recreation and Sports". Archived from the original on 2014-08-10. பார்க்கப்பட்ட நாள் 2014-07-10.
இணைப்புகள்
[தொகு]