உள்ளடக்கத்துக்குச் செல்

பெலிசிட்டி கெண்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெலிசிட்டி கெண்டல்
2016 இல் பெலிசிட்டி கெண்டல்
பிறப்பு25 செப்டம்பர் 1946 (1946-09-25) (அகவை 78)
ஆல்ட்டன், வார்விக்சயர், இங்கிலாந்து
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1947–தற்போது வரை
துணைவர்டாம் ஸ்டாப்பார்டு (1991–1998)
மைக்கேல் ருத்மேன்n (1998; இறப்பு. 2023)[1]
வாழ்க்கைத்
துணை
  • திரோவ் என்லி
    (தி. 1968; ம.மு. 1979)
  • மைக்கேல் ருத்மேன்
    (தி. 1983; ம.மு. 1990)
பிள்ளைகள்2
உறவினர்கள்ஜெனிபர் கெண்டல் (சகோதரி)

பெலிசிட்டி ஆன் கெண்டல் ( Felicity Kendal ) (பிறப்பு 25 செப்டம்பர் 1946) ஓர் ஆங்கில நடிகையாவார். இவர் முக்கியமாக தொலைக்காட்சி மற்றும் நாடகங்களில் பணிபுரிகிறார். 70 ஆண்டுகளுக்கும் மேலான வாழ்க்கையில் பல மேடை மற்றும் திரை வேடங்களில் தோன்றினார். 1975 ஆம் ஆண்டு ஒளிபரப்பான தி குட் லைஃப் என்ற தொலைக்காட்சித் தொடரில் பார்பரா குட் என்ற வேடத்தில் நடித்தது இவருக்கு புகழைப் பெற்று தந்தது.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

பெலிசிட்டி கெண்டல் இங்கிலாந்தின் ஓல்டனில் இல் பிறந்தார். இவர் நடிகரும் மேலாளருமான லாரா லிடெல் மற்றும் ஜெஃப்ரி கெண்டலின் இளைய மகள்.[2][3] இவரது மூத்த சகோதரி ஜெனிபர் கெண்டலும் ஒரு நடிகை.

பர்மிங்காமில் வளர்ந்த கெண்டல் தனது ஏழு வயதில் குடும்பத்துடன் இந்தியா வந்தார்.[3] இவரது தந்தை ஒரு ஆங்கில நடிகர்-மேலாளராக இருந்தார். அவர் இந்திய சுற்றுப்பயணங்களில் தனது சொந்த நாடக நிறுவனத்தை வழிநடத்தினார். இவர்கள் சேக்சுபியரின் நாட்கத்தை செல்வந்தர்களிடையேயும், அடுத்த நாள் கிராமப்புற கிராமங்களிலும் நிகழ்த்தும். பார்வையாளர்கள் பல பள்ளி மாணவர்களை உள்ளடக்கியிருந்தனர்.[4] குடும்பம் பயணம் செய்யும் போது, கெண்டல் இந்தியாவில் உள்ள ஆறு வெவ்வேறு லொரேட்டோ கல்லூரியின் பள்ளிகளில் பயின்றார்.[5] மேலும் வயதில் கொல்கத்தாவில் இருக்கும்போது குடற்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

த குட் லைப்

[தொகு]

1975 இல், கெண்டல் தொலைக்காட்சிக்காக பிபிசி சிட்காம் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியான தி குட் லைஃப் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். இவரும் ரிச்சர்ட் பிரையர்சு ஆகிய இருவரும் வாழ்வதற்கான போராட்டத்திலிருந்து வெளியேறி ஒரு நல்ல வாழ்க்கை வாழும் ஒரு நடுத்தர தம்பதியினரான பார்பரா மற்றும் டாம் குட் ஆக நடித்தனர். கெண்டல் அனைத்து 30 அத்தியாயங்களிலும் தோன்றினார். இது 1975 முதல் 1978 வரை நான்கு தொடர்களாக ஒளிபரப்பப்பட்டது.

மேடை நாடகம்

[தொகு]

கெண்டல், ஒன்பது மாதக் குழந்தையாக இருக்கும்போது மேடையில் அறிமுகமானார். இவர் எ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம் என்ற நாடகத்தில் ஒரு மாற்றுத் திறனாளி பையனாக மேடையில் தோன்றினார்.

மைனர் மர்டர் (1967) என்ற நாடகத்தில் இலண்டன் மேடையில் அறிமுகமானார். 1980கள் மற்றும் 1990களில் இவர் டாம் ஸ்டாப்பர்டு என்பவருடன் சேர்ந்து தொழில்முறை சங்கத்தை உருவாக்கி, தி ரியல் திங் (1982), ஹாப்குட் (1988), ஆர்காடியா (1993), மை (1995) மற்றும் இந்தியன் உட்பட பல நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்தியன் முதலில் ஒரு வானொலி நாடகமாகத் தயாரிக்கப்பாட்டது. அதில் இவருக்காகவே ஒரு பாத்திரம் எழுதப்பட்டது.

பிற பணிகள்

[தொகு]

1995 ஆம் ஆண்டில், ஆங்கிலக் கவிஞரான எட்வர்ட் லியரின் முட்டாள்தனமான பாடல்களின் தொகுப்பைக் கொண்டு, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு ஒலிநாடாவில் கவிதைகளைப் படித்தவர்களில் இவரும் ஒருவர்.[6]

சொந்த வாழ்க்கை

[தொகு]

திரோவ் என்லி என்பவருடான (1968-1979) முதல் திருமணமும் மற்றும் மைக்கேல் ருத்மேன் என்பவருடனான (1983-94) இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. என்லியுடனான திருமணம் மூலம் சார்லி மற்றும் ருட்மேனுடனான திருமணத்திலிருந்து ஜேக்கப் என இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 1991 இல், இவர் ருத்மேனை விட்டு வெளியேறினாலும், பின்னர், இவர்கள் 1998 இல் மீண்டும் இணைந்தனர்

கெண்டல் 1995 புத்தாண்டு மரியாதையில் நாடகத்திற்கான சேவைகளுக்காக பிரித்தானியப் பேரரசின் தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் முன்பு பெண்கள் அரச கழக தன்னார்வ சேவை என்ற தொண்டு நிறுவனத்தின் தூதராக உள்ளார். [7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nikkhah, Roya (2015). "Felicity Kendal: I'm happy with my ex-husband — but won't marry him again", The Telegraph (London), 3 April 2015. Retrieved 11 April 2019.
  2. "Felicity Kendal". Strictly Come Dancing. BBC Online. 2000. பார்க்கப்பட்ட நாள் 14 December 2012.
  3. 3.0 3.1 "Shakespeare Wallah". Merchant Ivory Productions. பார்க்கப்பட்ட நாள் 15 December 2012.
  4. Kendal 1998.
  5. "BBC Radio 4 Extra – Desert Island Discs Revisited, The Good Life, Felicity Kendal". BBC. பார்க்கப்பட்ட நாள் 15 November 2014.
  6. Nonsense songs (Audiobook on CD, 1995) [WorldCat.org]. Libcat.calacademy.org. 4 January 2019. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781898608219. Archived from the original on 15 பிப்ரவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 16 March 2021. {{cite book}}: Check date values in: |archive-date= (help)
  7. "Our Ambassadors: Felicity Kendal CBE" பரணிடப்பட்டது 2019-04-12 at the வந்தவழி இயந்திரம், Royal Voluntary Service, Cardiff.

கூடுதல் ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலிசிட்டி_கெண்டல்&oldid=4108344" இலிருந்து மீள்விக்கப்பட்டது