உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்புரோமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்புரோமேட்டு அயனியின் மாதிரி

பெர்புரோமேட்டு (Perbromate) அயனி BrO4. என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஓர் எதிர்மின் அயனியாகும். புரோமின் தனிமத்தின் ஆக்சி எதிர்மின் அயனியாகக் கருதப்படும் இது பெர்புரோமிக் அமிலத்தினுடைய இணை காரமாகவும் கருதப்படுகிறது. +7 என்ற ஆக்சிசனேற்ற நிலையை புரோமின் இதில் வெளிப்படுத்துகிறது [1]. இதனுடைய குளோரின் மற்றும் அயோடின் ஒத்த பெர்குளோரேட்டு, பெர் அயோடேட்டு தயாரிப்பது போல இதனை தயாரிப்பது எளிதன்று [2]. இந்த அயனி நான்முகி மூலக்கூற்று வடிவத்தை ஏற்றுள்ளது [3]. BrO−4 எதிர்மின் அயனியை அல்லது –OBrO3 என்ற வேதிவினைக் குழுவைக் கொண்டுள்ள சேர்மம் பெர்புரோமேட்டு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. பெர்புரோமேட்டு ஒரு வலிமையான ஆக்சிசனேற்றும் முகவராகும் [2]. BrO−4/Br− இணையின் குறைப்பு மின்னழுத்தம் pH 14 இல் +0.68 வோல்ட்டு ஆகும். இந்த அளவு செலீனைட்டின் குறைப்பு மின்னழுத்தத்துடன் ஒப்பிட்டு நோக்கத் தக்கது ஆகும்.

தயாரிப்பு[தொகு]

பெர்புரோமேட்டைத் தயாரிக்க 1968 இல் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதுவும் வெற்றியடையவில்லை.கடைசியாக செலீனேட்டு உப்பிலுள்ள செலீனியம்-83 இன் பீட்ட சிதைவு மூலமே இதைத் தயாரித்தார்கள்[4][5]

83
SeO2−
4
83
BrO
4
+ β.

இம்முறையைத் தொடர்ந்து LiBrO3 சேர்மத்தை மின்னாற்பகுப்பு செய்தும் பெர்புரோமேட்டு அயனியைத் தயாரித்தனர். இம்முறையில் குறைந்த அளவிலேயே விளைபொருளாக பெர்புரோமேட்டு கிடைக்கிறது [5][6] பிற்காலத்தில் புரோமேட்டுடன் செனான் டைபுளோரைடு சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்து பெர்புரோமேட்டு தயாரிக்கப்பட்டது [3][7]. ஒருமுறை பெர்புரோமேட்டைத் தயாரித்து விட்டால் இதை புரோட்டானேற்றம் செய்து பெர்புரோமிக் அமிலத்தைத் தயாரிக்க இயலும் [2]. கார நிபந்தனைகளின் உதவியோடு புரோமேட்டை புளோரினுடன் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்யும் முறையில் பெர்புரோமேட்டு தயாரிப்பது ஒரு சரியான வழிமுறையாகக் கருதப்படுகிறது :[2][8]

BrO
3
+ F
2
+ 2 OH
BrO
4
+ 2 F
+ H
2
O
.

செனான் டைபுளோரைடு சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்து தயாரிக்கும் வழிமுறையைக் காட்டிலும் இம்முறை பெர்புரோமேட்டை பெருமளவில் தயாரிப்பதற்கு உகந்ததாக உள்ளது [8]. 2011 ஆம் ஆண்டில் பெர்புரோமேட்டைத் தயாரிப்பதற்கான ஒரு நவீன முறை கண்டறியப்பட்டது கார சோடியம் ஐப்போ புரோமைட்டு கரைசலில் ஐப்போபுரோமைட்டுடன் புரோமேட்டு அயனிகளைச் சேர்த்து வினைபுரியச் செய்வது இம்முறையாகும் [9]. காரக் கரைசலிலுள்ள டைபெர் அயோடேட்டோ நிக்கலேட்டு எதிர்மின் அயனிகள் புரோமேட்டை பெர்புரோமேட்டுகளாக ஆக்சிசனேற்றமடையச் செய்கின்றன. இம்முறை மிகவும் சிக்கனமான முறையாகவும் புளோரின் கலப்பில்லாத முறையாகவும் கருதப்படுகிறது [10].

மேற்கோள்கள்[தொகு]

  1. பாண்டியர் செப்பேடுகள் பத்துEgon Wiberg; Nils Wiberg; Arnold Frederick Holleman (2001). Inorganic chemistry. Academic Press. p. 439. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
  2. 2.0 2.1 2.2 2.3 பாண்டியர் செப்பேடுகள் பத்துW. Henderson (2000). Main group chemistry (Volume 3 of Tutorial chemistry texts). Royal Society of Chemistry. pp. 136–137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85404-617-8.
  3. 3.0 3.1 பாண்டியர் செப்பேடுகள் பத்துKurt H. Stern (2001). High temperature properties and thermal decomposition of inorganic salts with oxyanions. CRC Press. p. 224. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0256-0.
  4. Appelman, E. H. (1973). "Nonexistent compounds. Two case histories". Accounts of Chemical Research 6 (4): 113–117. doi:10.1021/ar50064a001. 
  5. 5.0 5.1 Appelman, E. H. (1968). "Synthesis of perbromates". Journal of the American Chemical Society 90 (7): 1900–1901. doi:10.1021/ja01009a040. 
  6. பாண்டியர் செப்பேடுகள் பத்துKenneth Malcolm Mackay; W. Henderson (2002). Rosemary Ann Mackay (ed.). Introduction to modern inorganic chemistry (6th ed.). CRC Press. p. 488. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7487-6420-8.
  7. பாண்டியர் செப்பேடுகள் பத்துEgon Wiberg; Nils Wiberg; Arnold Frederick Holleman (2001). Inorganic chemistry. Academic Press. p. 395. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
  8. 8.0 8.1 Appelman, E. H. (1969). "Perbromic acid and perbromates: synthesis and some properties". Inorg. Chem. 8 (2): 223–227. doi:10.1021/ic50072a008. 
  9. Pisarenko, Aleksey N.; Young, Robert; Quiñones, Oscar; J. Vanderford, Brett; B. Mawhinney, Douglas (2011). "Two New Methods of Synthesis for the Perbromate Ion: Chemistry and Determination by LC-MS/MS". Inorg. Chem. 50 (18): 8691–8693. doi:10.1021/ic201329q. பப்மெட்:21780765. 
  10. Bilehal, Dinesh C.; Kulkarni, Raviraj M.; Nandibewoor, Sharanappa T. (January 2002). "Kinetics and Mechanism of Oxidation of Bromate by Diperiodatonickelate(IV) in Aqueous Alkaline Medium--A Simple Method for Formation of Perbromate". Inorganic Reaction Mechanisms 4 (1–2): 103–109. doi:10.1080/1028662021000020244. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்புரோமேட்டு&oldid=3739700" இலிருந்து மீள்விக்கப்பட்டது