உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்சீவியரன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்சீவியரன்சு தரையுளவி
Perseverance Rover
செவ்வாய் 2020-இன் ஒரு பகுதி
பெர்சீவியரன்சு செவ்வாயின் மாதிரிகளை சேகரித்தல் (ஓவியம்)
வேறு பெயர்(கள்)
  • செவ்வாய் 2020 தரையுளவி
  • பெர்சி
வகைசெவ்வாய் (தரையுளவி)
தயாரிப்பாளர்ஜெட் புரொபல்சன் ஆய்வுகூடம்
தொழினுட்பத் தகவல்கள்
நீளம்2 மீ
விட்டம்2.7 மீ
உயரம்2.2 மீ
ஏவுகலன் எடை1,025 கிகி
வலு110 W
பறப்பு வரலாறு
ஏவல் நாள்30 சூலை 2020, 11:50 ஒசநே[1]
ஏவல் இடம்கேப் கேனவரல்
இறங்கிய நாள்19 பெப்ரவரி 2021, 20:55 ஒசநே[2]
இறங்கிய இடம்ஜெசிரோ குழி
மொத்த நேரம்தரையிறங்கியது முதல் 35956 மணித்தியாலங்கள்[2]
நாசா செவ்வாய்த் தோரணங்கள்

பெர்சீவியரன்சு (Perseverance), சுருக்கமாக பெர்சி (Percy) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் செவ்வாய் 2020-திட்டத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க் கோளின் ஜெசிரோ குழியை ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தரையுளவி அல்லது ஆய்வூர்தி (Rover) ஆகும். இது ஜெட் புரொப்பல்சன் ஆய்வுகூடத்தினால் தயாரிக்கப்பட்டு 2020 சூலை 30 11:50 ஒ.ச.நே மணிக்கு செவ்வாயை நோக்கி ஏவப்பட்டது.[1] இக்கலம் செவ்வாயில் தரையிறங்கியது 2021 பெப்ரவரி 18 20:55 ஒ.ச.நே அளவில் உறுதிப்படுத்தப்பட்டது.[2]

பெர்சீவியரன்சு தன்னுடன் 19 ஒளிப்படக்கருவிகள், இரண்டு ஒலிவாங்கிகள் உட்பட ஏழு புதிய அறிவியல் கருவிகளை எடுத்துச் சென்றுள்ளது.[3] இஞ்சினுவிட்டி என்ற ஒரு சிறிய உலங்கு வானூர்தியையும் பெர்சீவியரன்சு எடுத்துச் சென்றுள்ளது. இவ்வுலங்குவானூர்தி வேறொரு கோளில் இயக்கப்படும் முதலாவது சோதனை-முறையிலான விண்கலமாகும்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Launch Windows". mars.nasa.gov. NASA. Retrieved 28 July 2020.
  2. 2.0 2.1 2.2 mars.nasa.gov. "Touchdown! NASA's Mars Perseverance Rover Safely Lands on Red Planet". NASA. Retrieved 18 February 2021.
  3. "Mars 2020 Landing Press Kit" (PDF). Jet Propulsion Laboratory. NASA. Retrieved 17 February 2021. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்சீவியரன்சு&oldid=3993378" இலிருந்து மீள்விக்கப்பட்டது