பெருபாலம் கடற்கரை
பெருபாலம் கடற்கரை | |
---|---|
வகை | கடற்கரை |
அமைவிடம் | பெருபாலம் , மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
பெருபாலம் கடற்கரை (Perupalem Beach) என்பது இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கடற்கரை மாநில சுற்றுலா வாரியமான ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சி கழகம் கடற்கரை சுற்றுலாவுக்காக உருவாக்கப்பட்டு வருகிறது.[1][2]
அமைவிடம்[தொகு]
ஆந்திரப் பிரதேசத்தில் மேற்கு கோதாவரி பகுதியில் உள்ள நரசபுரம் நகரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் பெரும்பாலம் கடற்கரை அமைந்துள்ளது.
கடற்கரை திருவிழா[தொகு]
பெருபாலம் கடற்கரையில் இரண்டு நாட்கள் நடைபெறும் கடற்கரை திருவிழாவில் மொகல்தூர் கடற்கரை மற்றும் அதை ஒட்டிய மண்டலங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொள்கின்றனர்.[3]
பெரும்பாலம் கடற்கரை திருவிழா முதன்முதலில் மாநில அரசால் இங்கு நடத்தப்பட்டது. மொகல்தூர் மண்டலத்தில் உள்ள பெரும்பாலம் கிராமம் இந்த நிகழ்ச்சிக்காக அலங்கரிக்கப்பட்டு பெண்கள் பாரம்பரிய மற்றும் ஆந்திர பாரம்பரிய உணவு வகைகளைக் கண்காட்சியில் வைக்கின்றனர்.<ref group="பெரு">
அனுகல்[தொகு]
பெரும்பாலம் கடற்கரைக்குச் செல்ல பேருந்து அல்லது தொடருந்து மூலம் நர்சாபூருக்குச் சென்று அங்கிருந்து பயணிக்கலாம். ஆந்திராவின் பல முக்கிய நகரங்களுடன் நரசபுரம் தொடர்பு கொண்டுள்ளது. நரசாபுரத்திலிருந்து வாடகை வண்டிகள் மூலம் பெரும்பாலம் கடற்கரைக்குச் செல்லலாம்.
மேலும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Sujath Varma, P (23 February 2014). "For a beach well within your reach". Vijayawada. http://www.thehindu.com/news/cities/Vijayawada/for-a-beach-well-within-your-reach/article5718867.ece. பார்த்த நாள்: 15 February 2016.
- ↑ "APTDC proposes to develop eight beach resorts in state". Hyderabad. 23 May 2013. http://www.newindianexpress.com/cities/hyderabad/APTDC-proposes-to-develop-eight-beach-resorts-in-state/2013/05/23/article1601966.ece. பார்த்த நாள்: 15 February 2016.
- ↑ admin (2020-12-26). "Perupalem Beach - Resort, Church, Festival, Timings, Location, Photos - Vihara Darshani". www.viharadarshani.in (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-29.