உள்ளடக்கத்துக்குச் செல்

பெரிய உருண்டை சப்பாத்திக் கள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரிய உருண்டை சப்பாத்திக் கள்ளி (Enhinocactus grandis) என்ற இத்தாவரம் காக்டேசீயீ குடும்பத்தைச் சார்ந்தது. இத்தாவரம் பீப்பாய் சப்பாத்திக் கள்ளி, இராட்சத பீப்பாய் சப்பாத்திக் கள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பூர்வீக வாழிடம் மெக்சிகோவின் பியூப்லாவில் காணப்படும் சுண்ணாம்புப்பாறைக் குன்றுகளாகும். இது எக்கினோகாக்டஸின் மிகப் பெரிய இனங்களில் ஒன்றாகும். இது பியூப்லாவின் பாலைவனங்களில் காணப்படும் மிகவும் சிறப்பியல்பு கொண்ட, கவனத்தைக் கவர்கின்ற தாவரமாகும்.[1]

செடியின் அமைவு

[தொகு]

இச்சப்பாத்திக் கள்ளி உருண்டை வடிவமாக பீப்பாய் போன்று இருக்கும். இது 10 அடி உயரமும், 10 அடி சுற்றளவும் கொண்டது. இதன் உருளை வடிவத் தண்டு கீற்று கீற்றாக நீளவாக்கில் இருக்கும். இவ்வரம்புகளில் முள் வட்டங்கள் இருக்கும். இவை 5 செ.மீ. நீளம் உடையன. தண்டின் மேல் உச்சிப் பகுதியில் முட்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்திலும், இதனிடையே ரோமம் போன்ற முட்களும் உள்ளன. இந்தச் சப்பாத்திக் கள்ளியில் 5 செ.மீ. நீளமுடைய மஞ்சள் நிறப்பூக்கள் உண்டாகின்றன. இதன் கனியில் ரோமம் போன்ற முட்கள் உள்ளன. சப்பாத்திக் கள்ளியின் தண்டுப்பகுதியில் நீர் சேமித்து வைக்கப்படுகிறது. இதன் தண்டுகள் பச்சை நிறமாக உள்ளன. இது உணவைத் தயாரிக்கப் பயன்படுகிறது. இதன் இலைகள் முட்களாக மாறிவிடுகின்றன. ஆகவே, இவற்றில் இலைகள் இருப்பதில்லை.[2]

காணப்படும் பகுதிகள்

[தொகு]

இது தெற்கு மெக்ஸிகோ பகுதிகளில் வளர்கிறது. சப்பாத்திக் கள்ளிக் குடும்பத்தில் 25 சாதிகளும், 1500 இனங்களும் உண்டு.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Echinocactus grandis". LLIFLE ENCYCLOPEDIAS. LLIFLE. பார்க்கப்பட்ட நாள் 27 July 2024.
  2. "Echinocactus grandis". LLIFLE ENCYCLOPEDIAS. LLIFLE. பார்க்கப்பட்ட நாள் 27 July 2024.