உள்ளடக்கத்துக்குச் செல்

பெரிச்சிகோயில் சுகந்தவனேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
[[]] பாடல் பெற்ற
பெரிச்சிகோயில் சுகந்தவனேசுவரர் கோயில்
பெயர்
பெயர்:பெரிச்சிகோயில் சுகந்தவனேசுவரர் கோயில்
அமைவிடம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
பாடல்
பாடல் வகை:[[]]

பெரிச்சிகோயில் சுகந்தவனேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.[1]

அமைவிடம்

[தொகு]

இக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் கண்டிரமாணிக்கம் அருகில் பெரிச்சிகோயில் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[2] கடல் மட்டத்திலிருந்து சுமார் 104 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 10°01'56.5"N, 78°37'35.8"E (அதாவது, 10.032363°N, 78.626606°E) ஆகும்.

இறைவன், இறைவி

[தொகு]

இக்கோயிலின் மூலவராக சுகந்தவனேசுவரர் உள்ளார். மூலவர் சிறிய அளவில் உள்ளார். இறைவி சமீபவல்லி ஆவார். கோயிலின் தல மரம் வன்னி ஆகும். கோயிலில் தல தீர்த்தமாக கிணறு உள்ளது. ஆனித்திருவிழா இரண்டு நாள்கள், சிவராத்திரி, கார்த்திகை உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயில் நடைபெறுகின்றன.[2]

அமைப்பு

[தொகு]

திருச்சுற்றில் நான்கு விநாயகர்கள் உள்ளனர். தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. இத்தல விநாயகர் மகா கணபதி ஆவார். தனி விமானத்துடன் கூடிய சன்னதியில் காசி பைரவர் உள்ளார். இவ்ர் நவபாஷாணத்தால் செய்யப்பட்டவர் என்றும், இவரை போகர் அமைத்ததாகவும் கூறுவர்.பைரவர் எட்டு கைகளிலும் ஆயுதத்தை ஏந்திய நிலையில் கையில் கபாலத்துடன் உள்ளார். அருகில் மூவர் வணங்கிய நிலையில் உள்ளனர். இங்குள்ள சனீசுவரரை பைரவரின் சீடராகக் கருதி வழிபடுகின்றனர். இவர் பைரவர் சன்னதியின் பின்புறம் வன்னி மரத்தடியில் உள்ளார். இவர் எப்போதும் பைரவருக்கு பின்புறம் உள்ள மற்றொரு முகத்தைத் தரிசித்தபடி உள்ளதாகவும் அந்த முகத்தை பக்தர்கள் காணமுடியாது என்றும் கூறுகின்றனர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]