உள்ளடக்கத்துக்குச் செல்

பெத்த வெங்கட ராயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூன்றாம் வேங்கடன் எனப்பட்ட பெத்த வேங்கட ராயன் (Peda Venkata Raya) (கி.பி. 1632-1642) விஜய நகரப் பேரரசை ஆண்ட மன்னராவார். இவர் அலிய ராமராயனின் பேரனாவார். [1] அலிய ராம ராயன் தெலுங்கு இனத்தை சேர்ந்தவர்.[2] அரவிடு மரபினர் ஆந்திரா மாநிலம் பெனுகொண்டாவைத் தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தனர்.[3]

மூன்றாம் வேங்கடன் எனப்பட்ட பெத்த வேங்கட ராயரின் தனது படைத் தளபதியாக இருந்த பெத்த கோனேடி நாயுடுவின் விசுவாசத்தின் காரணமாக தனது மகள் உத்லம்பா தேவியை அவனுக்கு திருமணம் செய்து வைத்தார். மேலும் கோனேடி நாயுடுவுக்கு மகா இராஜா இராஜா சிறி என்ற பட்டத்தை அளித்து, பெனுகொண்டாவை ஆளும் உரிமையை வழங்கினார்.[4]

பெத்த வேங்கட ராயரின் சகோதரிகளை தமர்லா வெங்கடப்ப நாயக்கர் திருமணம் செய்தார்.[5]

தெலுங்கு இனத்தவர்கள் அரவிடு மரபினர் ஆட்சி காலத்தில் தென்னிந்தியாவில் அதிகாரம் மிக்கவர்களாக இருந்தனர்.[6]

விசயநகரப் பேரரசு
சங்கம மரபு
அரிகர ராயன் I 1336-1356
புக்க ராயன் 1356-1377
அரிகர ராயன் II 1377-1404
விருபாட்ச ராயன் 1404-1405
புக்க ராயன் II 1405-1406
தேவ ராயன் I 1406-1422
ராமச்சந்திர ராயன் 1422
வீரவிஜய புக்கா ராயன் 1422-1424
தேவ ராயன் II 1424-1446
மல்லிகார்ஜுன ராயன் 1446-1465
விருபாட்ச ராயன் II 1465-1485
பிரவுட ராயன் 1485
சாளுவ மரபு
சாளுவ நரசிம்ம தேவ ராயன் 1485-1491
திம்ம பூபாலன் 1491
நரசிம்ம ராயன் II 1491-1505
துளுவ மரபு
துளுவ நரச நாயக்கர் 1491-1503
வீரநரசிம்ம ராயன் 1503-1509
கிருஷ்ணதேவராயன் 1509-1529
அச்சுத தேவ ராயன் 1529-1542
சதாசிவ ராயன் 1542-1570
அரவிடு மரபு
அலிய ராம ராயன் 1542-1565
திருமலை தேவ ராயன் 1565-1572
ஸ்ரீரங்கன் I 1572-1586
வேங்கடன் II 1586-1614
ஸ்ரீரங்கன் II 1614-1614
ராம தேவ ராயன் 1617-1632
வேங்கடன் III 1632-1642
ஸ்ரீரங்கன் III 1642-1646
பெத்த வெங்கட ராயன் தமிழ் கல்வெட்டு, கி.பி 1605, தொல்லியல் அருங்காட்சியகம், வேலூர்க் கோட்டை

[7]

திம்ம ராயன்

[தொகு]

வேங்கட ராயனுக்குச் சிறிய தந்தையும், இரண்டாம் ஸ்ரீரங்காவின் சகோதரனுமான திம்ம ராயன் என்பவன் தனக்கே அரசுரிமை உண்டு கருதி வேலூர்க் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டான். இதனால் பெத்த வேங்கட ராயன், தனது சொந்த இடமான ஆனகொண்டாவிலேயே இருக்க வேண்டியதாயிற்று. செஞ்சி, தஞ்சை, மதுரை நாயக்கர்கள் வேங்கட ராயனுக்கே தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

எவரிடமிருந்தும் ஆதரவு கிடைக்காத போதிலும், திம்ம ராயன் குழப்பங்களை ஏற்படுத்தினான். இது அவன் 1635 ஆம் ஆண்டில் இறக்கும்வரை தொடர்ந்தது. தொடக்கத்தில் திம்மராயனின் கை ஓங்கியிருப்பதாகவே தெரிந்தது. அரசன் பேடா வேங்கட ராயனின் மருமகனான மூன்றாம் ஸ்ரீரங்கா களத்தில் குதித்தபோது நிலைமை மாறியது. இவன், பழவேற்காட்டில் இருந்த ஒல்லாந்தரின் துணையுடன் திம்ம ராயனைத் தோற்கடித்து, அவனை வேங்கட ராயனின் ஆட்சியை ஏற்க வைத்தான். திம்மராயனின் கட்டுப்பாட்டின்கீழ் சில நிலப்பகுதிகள் விடப்பட்டன. எனினும் மீண்டும் திம்ம ராயன் குழப்பம் விளைவித்தபோது, 1635 ஆம் ஆண்டில் செஞ்சி நாயக்கனால் அவன் கொல்லப்பட்டான்.

இதன் பின் அமைதி நிலை நாட்டப்பட்டு பெத்த வேங்கட ராயன் வேலூருக்குச் சென்று ஆட்சியைப் பொறுப்பேற்றான்.

மூன்றாம் ஸ்ரீரங்காவின் கிளர்ச்சி

[தொகு]

அரசனின் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்த அவனது மருமகனான ஸ்ரீரங்கா ஏதோ காரணத்தால் அரசனுக்கு எதிராகத் திரும்பினான். 1638 ஆம் ஆண்டின் பீஜப்பூரில் இருந்து படையெடுப்பு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்தான். பீஜப்பூர்-மூன்றாம் ஸ்ரீரங்கா கூட்டுப் படைகள் முதலில் பெங்களூரைத் தாக்கின. அப்போது அரசன் பெருமளவு விட்டுக்கொடுப்புக்களுடன் சமாதானம் செய்துகொண்டான். எனினும் அதே கூட்டணி மீண்டும் தாக்குதலைத் தொடங்கி வேலூர்க் கோட்டைக்கு 12 மைல் தூரம் வரை வந்துவிட்டன. எனினும், அரசன் நாயக்கர்களின் துணையுடன் கூட்டுப் படையின் முகாம்களைத் தாக்கினான்.

கோல்கொண்டாப் படைகள்

[தொகு]

அடுத்த ஆண்டில் (1641), கோல்கொண்டா சுல்தான் விஜயநகரத்தின் குழப்பநிலையைச் சாதகமாக்கிக் கொண்டு கிழக்குக் கரையூடாகப் பெரும் படையை அனுப்பினான். கோல்கொண்டாப் படைகள் மதராசுக்கு அருகே, மூன்றாம் வேங்கடனின் படைகள், செஞ்சி நாயக்கன், மதராஸ், பூனமலைத் தலைவனான தர்மால வேங்கடபதி ஆகியோரின் துணையுடன் நடத்திய தாக்குதல்களை முறியடித்து வேலூர்க் கோட்டையை நோக்கி முன்னேறின. எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய மூன்றாம் வேங்கடன் சித்தூர்க் காட்டுப் பகுதிக்குப் பின்வாங்கினான். அங்கே 1642 ஆம் ஆண்டு அக்டோபரில் காலமானான்.

மூன்றாம் வேங்கடனுக்கு மகன்கள் இல்லை. இதனால், பீஜப்பூர் முகாமை விட்டுவிட்டு வேலூருக்கு வந்த மூன்றாம் ஸ்ரீரங்கா அரசனானான்.

மேற்கோள்கள்

[தொகு]
    • Books International, Ajit Mani (2018). The Nawab’s Tears (in ஆங்கிலம்). p. 266.
    • DS, deepak s (2016). Indian civilization (in ஆங்கிலம்). p. 266.
    • V.R. Acarya, ed. (1954). Sri Prasanna Venkatesvara Vilasamu. Bulletin of the Government Oriental Manuscripts Library, Madras. p. 49. The above said Peda Kōnēti Nṛpati ( Nayak ) First , king of Penukonda . ( 1635 A.D. ) then of Kundurti ( 1652 A.D. ) and of Rayadurga ( 1661 A.D. ) was a Balija by caste , having the surname Vānarāsi . His father Kastūri Nāyak and grand father bencama Nayak had enjoyed high favour with the fallen kings of Vijayanagar who were ruling at Chandragiri. Kōnēti Nayak himself had married the daughter of ( apparently the fruit of left handed marriage ) Āraviti Vīra Venkatapati Rāyalu of Vijayanagar family.
    • K. A. Nilakanta Sastri, ed. (1946). Further Sources of Vijayanagara History. University of Madras. p. 302. A description of the way in which Venkatapatiraya of Raya-Veluru granted the government of Penugonda to the Raya-dalavayi Pedakoneti Nayadu. On Sravana ba. 10 of Yuva of 146 years ago corresponding to S. S. 1558, (the Raya) granted the government of Penugonda to Koneti Nayadu, the son. of Kastuiri Nayadu, the son of Akkapa Nayadu, who was the son of Canca(ma) Nayadu of Candragiri, a member of the Vasarasi family of the Balija caste. The ayakat of the territories of Rajaraja Sri Raya-dalavayi who ruled the forts of Penugonda, Kundurpi, Rayadurgam..... great prosperity.
  1. *Popular Prakashan, M. H. Rāma Sharma (1978). The history of the Vijayanagar Empire (in ஆங்கிலம்). p. 203.
  2. B.G.Paul & co., Henry Heras (1927). The Aravidu dynasty of Vijayanagara (in ஆங்கிலம்). p. 12.
  3. Books International, Ajit Mani (2018). [https:// false The Nawab’s Tears] (in ஆங்கிலம்). p. 266. {{cite book}}: Check |url= value (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்த_வெங்கட_ராயன்&oldid=4085695" இலிருந்து மீள்விக்கப்பட்டது