உள்ளடக்கத்துக்குச் செல்

பெண்டாமெத்தில்மாலிப்டினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண்டாமெத்தில்மாலிப்டினம்
இனங்காட்டிகள்
287715-39-3
ChemSpider 63001354
InChI
  • InChI=1S/5CH3.Mo/h5*1H3;/q5*-1;+5
    Key: ILRMVGULUOSRQX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15520647
  • C[Mo](C)(C)(C)C
பண்புகள்
C5H15Mo
வாய்ப்பாட்டு எடை 171.13 g·mol−1
தோற்றம் நீலப்பச்சை வண்ண படிகங்கள்
கொதிநிலை −10° செல்சியசில் சிதைவடையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணகம்
புறவெளித் தொகுதி I4
Lattice constant a = 7.680, b = 7.680, c = 6.490
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பெண்டாமெத்தில்மாலிப்டினம் (Pentamethylmolybdenum) C5H15Mo என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமமாலிப்டினம் சேர்மமாகும். இச்சேர்மத்தில் ஐந்து மெத்தில் குழுக்கள் மையத்திலுள்ள மாலிப்டினம் அணுவுடன் இணைந்துள்ளன. [1] இம்மூலக்கூறு சதுரப் பட்டைக்கூம்பு வடிவத்திலுள்ளது. [2] பெண்டாமெத்தில் டங்சுட்டனும் இதுவும் வடிவம் மற்றும் பண்புகளில் ஒரே மாதியாக உள்ளன.[2]

தயாரிப்பு[தொகு]

மாலிப்டினம் பெண்டாகுளோரைடையும் இருமெத்தில் துத்தநாகத்தையும் -70 முதல் -20 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்து பெண்டாமெத்தில்மாலிப்டினம் தயாரிக்கப்படுகிறது. மாலிப்டினம் ஆக்சிகுளோரைடிலிருந்து தயாரிப்பது மற்றொரு தயாரிப்பு பாதையாகும். [1] ஒரு இணையா எலக்ட்ரான்கள் உடன் பெண்டாமெத்தில்மாலிப்டினம் ஓர் இணைகாந்தமாக செயல்படுகிறது. மூன்றில் இரண்டு பாகம் 4dz2, ஒரு பாகம் 4dx2−y2 இவ்வெலக்ட்ரானின் பண்பாகும்

பண்புகள்[தொகு]

நிலைப்புத்தன்மையற்ற பெண்டாமெத்தில்மாலிப்டினம் ஒர் ஆக்சிசன் உணரியாகும். காற்றில் வெளிப்பட நேர்ந்தால் அல்லது -10 பாகை செல்சியசு அளவுக்கு சூடுபடுத்தினால் இது கருப்பாக மாறுகிறது. இராமன் நிறமாலையில் 1181, 960, 90, 882, 783, 672, 620, 565, 523, 507, 451, 366, 308, 267 மற்றும் 167 செ.மீ−1 அளவுகளில் அதிர்வுகளை உண்டாக்குகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Roessler, Beatrice; Kleinhenz, Sven; Seppelt, Konrad (2000). "Pentamethylmolybdenum". Chemical Communications (12): 1039–1040. doi:10.1039/b000987n. 
  2. 2.0 2.1 பாண்டியர் செப்பேடுகள் பத்துWerner, Helmut (2008). Landmarks in Organo-Transition Metal Chemistry: A Personal View (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 309. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780387098487.