உள்ளடக்கத்துக்குச் செல்

பெட்டன் நாகனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெட்டன் நாகனார் சங்ககால இசையமைப்பாளர்களில் ஒருவர். கடுவன் இளவெயினனார் என்னும் புலவர் பாடிய இரண்டு பரிபாடல்களுக்கு [1] இவர் இசையமைத்துப் பாடியுள்ளார்.திருமாலைப் போற்றும் இந்த இரு பாடல்களுக்கும் பாலைபண் கூட்டிப் பாலையாழ் இசையோடு பாடியிருக்கிறார்.

  • பெட்டன் என்னும் சொல் பெரிதும் விரும்பத் தக்கவன் என்னும் பொருளைத் தரும்.[2] நாகன் என்னும் சொல்லுக்கு இளமைநலம் மிக்கவன் என்பது பொருள்.
இப் பாடல்களிலுள்ள இசையின்பப் பகுதிகளுக்கு எடுத்துக்காட்டு

1

மாஅயோயே! மாஅயோயே!
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
மணி திகழ் உருபின் மாஅயோயே! (பரிபாடல் 3 அடி 1,2, 3)

2

செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே!
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்,
படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்,
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித்
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்,
நின் உருபுடன் உண்டி;
பிறர் உடம்படுவாரா
நின்னொடு புரைய
அந்தணர் காணும் வரவு. (பரிபாடல் 2 அடி 60 முதல் 63)

திருமாலின் உருவமும், உணவும், வெளிப்பாடும் இவற்றில் கூறப்பட்டுள்ளன.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. பரிபாடல் 2, 3
  2. பிணையும் பேணும் பெட்பின் பொருள. (தொல்காப்பியம் உரியியல் 40)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்டன்_நாகனார்&oldid=2715310" இலிருந்து மீள்விக்கப்பட்டது