உள்ளடக்கத்துக்குச் செல்

பெஜவாடா வில்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெஜவாடா வில்சன்
பிறப்பு1966
பணிமனித உரிமை செயற்பாட்டாளர்
விருதுகள்ரமோன் மக்சேசே விருது

பெஜவாடா வில்சன், ( Bezwada Wilson பிறப்பு: 1966) இந்தியாவின், கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் கழிப்பிடங்களை துப்புரவு செய்யும் ரசேல் பெஜவாடா - ஜேகோப் இணையருக்கு மூன்றாம் மகவாகப் பிறந்தவர். அரசியல் அறிவியல் பட்டம் பெற்ற வில்சன், பின்னர் மனிதக் கழிவை மனிதனே அகற்றும் முறைக்கு எதிராக தொடர்ந்து போராடியதன் விளைவாக, தற்போது இம்முறை இந்திய அளவில் மனிதக் கழிவை மனிதன் அகற்றும் முறை நிறுத்தப்பட்டுள்ளது.

சமுதாயப் பணி

[தொகு]

மனிதக் கழிவை அகற்றும் குழந்தைகளுக்கு கல்வி கற்க வைத்தார்.[1] மனித கழிவை மனிதனே அள்ளுவதை எதிர்த்துப் போராடினார். 1993ம் ஆண்டில் மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதை தடுக்கும் சட்டத்தை இந்திய அரசு இயற்றியது.

இதன் பிறகும் மனிதக் கழிவை மனிதர்கள் அகற்றுவதை புகைப்படங்கள் எடுத்து மாநில, மத்திய அரசுகளுக்கு அனுப்பியும், ஊடகங்களிலும் வெளிப்படுத்தினார். மனிதக் கழிவை மனிதனே அகற்றும் நிலையை ஒழிக்கும் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் ஆந்திராவிலும் மனிதக் கழிவை மனிதனே அகற்றும் செயலுக்கு எதிராக போராடினார்.

2003இல் வில்சன், மனிதக் கழிவை மனிதன் அகற்றுவதை தடுக்க, உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து 2010இல் மனிதக் கழிவை மனிதனே அகற்றும் சட்டம் நடைமுறைக்கு வந்தது. 2010ஆம் ஆண்டில் மனிதக் கழிவை மனிதனே அகற்றுவது தேசிய அவமானம் என அறிவிக்குமாறு இந்திய அரசை வற்புறுத்தினார். இவரது தொடர் போராட்டத்தின் விளைவாக இன்று இந்தியாவில் மனிதக் கழிவை மனிதன் அள்ளும் முறை ஒழிக்கப்பட்டுள்ளது.

விருதுகளும் பாராட்டுகளும்

[தொகு]
  • மனிதக் கழிவை மனிதனே அள்ளுவதற்கு எதிரான மனித உரிமைகளை காக்கும் இயக்கமான சஃபை ஊழியர்கள் இயக்கத்தின் (Safai Karmachari Andolan (SKA) தேசியத் தலைவராகவும், செயற்பாட்டாளராகவும் செயல்படுகிறார். மேலும் இவரது மனித உரிமைகளை காக்கும் போராட்டத்தைப் பாராட்டி, அசோகா அறக்கட்டளை , (Ashoka Foundation) தனது அறக்கட்டளையின் மூத்த உறுப்பினராக இணைத்துக் கொண்டுள்ளது.[2]
  • ஒடுக்கப்பட்ட மக்களின் விழிப்புணர்வுக்காகப் போராடிய பெஜவாடா வில்சன் 27 சூலை 2016 அன்று ரமோன் மக்சேசே விருது வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

[3].[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. How Bezwada Wilson Liberated Lakhs Of Manual Scavengers In India
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-07-11. பார்க்கப்பட்ட நாள் 2016-07-27.
  3. Bezwada Wilson, TM Krishna win Ramon Magsaysay Award for 2016
  4. "Ramon Magsaysay Award". New Indian Express. 27 July 2016. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெஜவாடா_வில்சன்&oldid=3565271" இலிருந்து மீள்விக்கப்பட்டது