உள்ளடக்கத்துக்குச் செல்

பூழி நாடு (பாண்டிய நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த அகநாடுகளுள் ஒன்று. 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு பாண்டிய மன்னனால் வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர் என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்ட நாடே இந்த பூழிநாடு. ஆரம்ப காலத்தில் இதன் தலைநகரம் ஆவுடையார் புரம்.

நாயக்கர் காலம்

நாயக்கர் காலத்தில் (1529-64) பாண்டி நாடு 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, பூழி நாட்டின் பகுதிகள் அதனுள் அடங்கின. அதன் பிறகு சில வருடங்கள் கழித்து அதன் தலைநகரம் நெற்கட்டாஞ்செவ்வலுக்கு மாற்றப்பட்டது. நாயக்கர் கால வீழ்ச்சியின் போது பாளையங்கள் சுயவுரிமை பெறத்தொடங்கின.

பட்டியல்[1]

தலைமுறை பெயர் ஆட்சியாண்டுகள்
1 வரகுண சிந்தாமணி பூலித்தேவன் 1378 - 1424
2 வடக்காத்தான் பூலித்தேவன் 1424 - 1458
3 வரகுண சிந்தாமணி வடக்காத்தான் பூலித்தேவன் 1513 -1548
4 சமசதி பூலித்தேவன் 1548 - 1572
5 முதலாம் காத்தப்ப பூலித்தேவன் 1572 - 1600
6 இரண்டாம் காத்தப்ப பூலித்தேவன் 1600 - 1610
7 முதலாம் சித்திரபுத்திரத்தேவன் 1610 - 1638
8 மூன்றாம் காத்தப்ப பூலித்தேவன் 1638 - 1663
9 இரண்டாம் சித்திரபுத்திரத்தேவன் 1663 - 1726
10 நான்காம் காத்தப்ப பூலித்தேவன் 1726 - 1767

வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூழித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவரார். இவருக்கு பிறந்த பூலித்தேவன் என்பவரே இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு காரணமாயிருந்த பாளையக்காரர் போர்களின் முன்னோடி.

மூலம்

  • ஜனனி (10 திசம்பர் 2010). "பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் வைகோவின் உரை". 18 திசம்பர் 2008. www.usetamil.com. பார்க்கப்பட்ட நாள் சூலை 17, 2012.

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. மெக்கன்சி. "File:பூழி நாட்டரசர்களின் வரலாறு.JPG". விக்கி பொது. pp. பட்டியல் டி3134 ஆர் 7992. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 31, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூழி_நாடு_(பாண்டிய_நாடு)&oldid=1837435" இலிருந்து மீள்விக்கப்பட்டது