பூலாவுடையார் சமணர் படுகை
பூலாவுடையார் சமணர் படுகை என்பது திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியிலுள்ள சமணர் படுகையாகும். இப்படுகையில் சமண முனிவர்கள் படுப்பதற்கேற்ப கல்லில் படுக்கை செய்யப்பட்டுளது. மழை பெய்யும் போது மழைநீர் சமண முனிவர்கள் மேல் படாமல் இருக்க அதில் காடிகள் வெட்டப்பட்டுள்ளன. மேலும் இதில் தமிழ் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது.
கல்வெட்டு
[தொகு]இப்படுகையில் காணப்படும் கல்வெட்டில் வெண் காசிபன் கொடுபித கல் கஞ்சனம் என்று தமிழ் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுளது. இதன் எழுத்துக்களைக் கொண்டு இதன் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என நிறுவியுள்ளனர்.
கவனிப்பு
[தொகு]தமிழக அரசு வெளியிட்ட பன்னிரெண்டாம் நிதியறிக்கையில் இந்த படுகையையும் சேர்த்து மொத்தம் 40 இடங்களுக்கு 7.8 கோடி ரூபாய் பராமரிப்பு பணம் ஒதுக்கப்பட்டுளது. அதில் இப்படுகைக்கான 2.65 லட்ச ரூபாயும் அடக்கம்.[1]
மூலம்
[தொகு]- பூலாவுடையார் சமணர் படுகை அறிவிப்புப் பலகை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக அரசின் பனிரெண்டாம் நிதியறிக்கை" (PDF). 2006. pp. >20. பார்க்கப்பட்ட நாள் மே 16, 2012.