பூர்ணிமா வர்மா
பூர்ணிமா வர்மா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | மோகன்லால்கஞ்ச் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 நவம்பர் 1960 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தொழில் | அரசியல்வாதி, சமூகசேவகர் |
பூர்ணிமா வர்மா (Purnima Verma)(பிறப்பு 25 நவம்பர் 1960) ஓர் அரசியல் மற்றும் சமூக சேவகர் ஆவார். இவர் இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள மோகன்லால்கஞ்ச் மக்களவைத் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]பூர்ணிமா நவம்பர் 25, 1960 அன்று கான்பூரில் (உத்தரப் பிரதேசம்) பிறந்தார். இவர் சிறீபால் வர்மாவை 10 மே 1973-இல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.[1]
கல்வி
[தொகு]பூர்ணிமா பரேலியில் உள்ள ரோகில்கண்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவர் 1996-இல் 11வது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
ஆர்வங்கள் மற்றும் சமூக நடவடிக்கைகள்
[தொகு]பூர்ணிமா சமூக சேவை, பெண்கள் நலன், குழந்தைகள் மற்றும் இளைஞர் மேம்பாடு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் கல்வி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார். தொகுதியில் வளர்ச்சிப் பணிகள், அரசியல் செயல்பாடுகளில் பங்கேற்பதுடன் புத்தகங்கள் படிப்பதிலும், சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலும் தனது நேரத்தைச் செலவிடுகிறார்[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Biographical Sketch Member of Parliament 11th Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 9 March 2014.
- ↑ "Mohanlalganj Partywise Comparison". eci.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2014-03-09.