பூதப்பாண்டியன் தேவியார்
பூதப்பாண்டியன்தேவியார் - பெருங்கோப்பெண்டு
[தொகு]புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது ஒலியமங்கலம் என்று வழங்கப்படும் ஊரானது, பண்டை நாளில் ஒல்லையூர் நாடாக விளங்கியது. அந்நாட்டை ஆண்ட மன்னனான பூதப்பாண்டியன் இற்நதபோது, மிகவும் வருந்திய அவனுடைய மனைவி பாடிய பாடலொன்று புறநானுற்றில் இடம் பெற்றுள்ளது. இவருடைய இயற்பெயரினை அறிய இயலவில்லை. கணவன் இறந்ததும், சமூக ரீதியில் பெண் அடையும் துயரங்களைவிடத் தீக்குளிப்பது மேலானது என்ற கருத்தமைந்த பாடலைப் பாடியுள்ளார். இப்பாடல் பன்முக வாசிப்பினுக்கு இடம் தரக்கூடியது.[1]
பல்சான் றீரே! பல்சான் றீரே!
'செல்க' எனச் சொல்லாது, ஒழிக' என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட ..........
திணை - பொதுவியல்: துறை - ஆனந்தப்பையுள்.
'கணவனுடன் செல்க' எனச் சொல்லாமல் தடுக்கும் பொல்லாது சூழ்ச்சி செய்யும் சான்றோர் பலரே! அணிலுடைய வரி போன்ற வரிகளை உடைய வளைந்த வெள்ளரிப் பழத்தின் விதை போன்ற நல்ல மணமான நெய் கலவாத நீர்ச்சோறு, எள் துவையல், புளிசேர்த்த வேளைக்கீரை ஆகியவற்றை உண்டும், பாய் இல்லாமல் பருக்கைக் கல் மேல்படுத்தும், கைம்மை நோய்பியற்றும் பெண்டிர் அல்லேன் நான். புறங்காட்டில் உருவாக்கப்பட்ட கரிய முருட்டால் அடுக்கப்பட்ட ஈமப்படுக்கை உமக்கு அரிதாக விளங்கலாம். பெரிய தோளுயுடைய என் கணவன் மாய்ந்தமையால், அந்த ஈமத்தீயே எமக்கு இதழ் மலர்ந்த தாமரையின் தண்ணீர் பொய்கை நீர் போல் இன்பம் அளிப்பதாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ந.முருகேசபாண்டியன்,அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், டிசம்பர் - 2008