பூசனிக்காய் விளையாட்டு

பூசனிக்காய் விளையாட்டு சிறுமியர் விளையாட்டு.
ஆடும் முறை
[தொகு]ஆட்டக்காரர்களில் ஒருவர் அரசன்; மற்றொருவர் அரசனின் சேவகன். மற்றவர்கள் படர்ந்திருக்கும் பூசனிக்கொடி.
அரசன் பூசனிக்காய் வாங்கிவரச் சொல்வான். சேவகன் கொடியில் காய்த்திருக்கும் பூசனிக்காயைப் பறிப்பான். இதுதான் விளையாட்டு. பூசனி வேராக இருக்கும் சிறுமி தன் இரு கால்களையும் பரப்பிக்கொண்டு தன் கைகளை வலிமையாகத் தரையில் ஊன்றிகொண்டு அமர்ந்திருப்பாள். அந்த அணியிலுள்ள மற்றவர்கள் அவளது இடுப்பைப் பலமாகப் பிடித்துக்கொண்டு ஒருவர் பின் ஒருவராக அமர்ந்திருப்பர்.
இந்தத் தொடர் பூசனிக்கொடி. தொடரின் பின்புறம் கடைசியில் உள்ளவர் பூசனிக்காய். சேவகன் அந்தப் பூசனிக்காய்ச் சிறுமியின் இடுப்பைப் பிடித்து இழுப்பான். தொடர் அறுபட்டால் பூசனிக்காய் பறிக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ளப்படும்.
பின் வேறொருவர் அரசன், சேவகன் என வைக்கப்பட்டு அடுத்த ஆட்டம் தொடரும்.
இவற்றையும் பார்க்க
[தொகு]கருவிநூல்
[தொகு]- இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
- கி. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல் வெளியீடு, 1982.