புவேர்ட்டோ ரிக்கோ விடுதலைக் கட்சி
Appearance
புவேர்ட்டோ ரிக்கோ விடுதலைக் கட்சி Partido Independentista Puertorriqueño PIP - Puerto Rican Independence Party | |
---|---|
தலைவர் | ரூபென் மார்ட்டினெஸ் (PIP தலைவர்); ஜூவான் டால்மா (செயலாளர் நாயகம்); பெர்னாண்டோ மார்ட்டின் (நிர்வாக தலைவர்), விக்டர் கார்சியா சான் இனொசென்சியோ (பக்களவைப் பிரதிநிதி) |
தொடக்கம் | அக்டோபர் 20, 1946 |
தலைமையகம் | சான் ஜுவான், புவேர்ட்டோ ரிக்கோ |
கொள்கை | தேசிய விடுதலை இயக்கம், சோசியால் லிபரலிசம், சமூக மக்களாட்சி |
பன்னாட்டு சார்பு | Socialist International (SI) |
நிறங்கள் | பச்சை மற்றும் வெள்ளை |
இணையதளம் | |
www.independencia.net/ingles/welcome.html |
புவேர்ட்டோ ரிக்கோ விடுதலைக் கட்சி (Puerto Rican Independence Party, ஸ்பானிய மொழி: Partido Independentista Puertorriqueño, PIP) என்பது புவேர்ட்டோ ரிக்கோ நாட்டின் ஓர் அரசியல் கட்சியாகும். இது ஐக்கிய அமெரிக்காவிலிருந்து புவேர்ட்டோ ரிக்கோ நாட்டின் விடுதலைக்காகப் போராடி வருகிறது[1]. புவேர்ட்டோ ரிக்கோவில் உள்ள மூன்று பெரும் அரசியல் கட்சிகளில் இதுவும் ஒன்றாகும். அத்துடன் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் இது இரண்டாவது பழமையானதுமாகும்[2],[3].
வரலாறு
[தொகு]இக்கட்சி அக்டோபர் 20, 1946 இல் கில்பேர்ட்டோ டெ கிராசியா என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. நாட்டின் விடுதலையை வேண்டி ஆரம்பிக்கப்பட்ட பிரபல்யமான மக்களாட்சிக் கட்சி பின்னர் விடுதலைக் கோரிக்கையை விட்டுக் கொடுத்தமையால் கிராசியா புதிய கட்சியை ஆரம்பித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Berrios-Martinez, Ruben; “Puerto rico—Lithuania in Reverse?”; The Washington Post, Pg. A23; May 23, 1990.
- ↑ The New York Times; Mar 18, 1949, pg. 13.
- ↑ "Puerto Rico State Electoral Commission (CEE)". Archived from the original on 2008-01-02. பார்க்கப்பட்ட நாள் 2008-01-23.
வெளி இணைப்புகள்
[தொகு]- www.independencia.net/ingles/welcome.html கட்சியின் அதிகாரபூர்வ இணையத்தளம்