உள்ளடக்கத்துக்குச் செல்

புவியீர்ப்பு விளக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புவியீர்ப்பு விளக்கு (GravityLight) என்பது புவியீர்ப்பு விசையைக் கொண்டு இயங்கும் விளக்கு ஆகும். இது டிசிவாட் (Deciwatt) என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு வளர்ந்துவரும் நாடுகள் அல்லது மூன்றாம் உலக நாடுகளில் மண்ணெய் விளக்குக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. இந்த விளக்கு ஆறு அடி உயரத்தில் பொருத்தப்படும். அதோடு சேர்ந்து இழுக்க ஒரு சக்கமும் அதில் கயிறும் கட்டப்படும். இதன் அடியில் இரு பைகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்தப் பையில் சுமார் 12 கிலோ எடை உள்ள பொருட்களை வைக்க வேண்டும். இதில் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளதால், அதன் உதவியுடன் எடையை மேலே இழுக்கலாம். எடை மேலே சென்றதும், விளக்கு எரியும். எடை மேலே இருக்கும்வரை சுமார் 30 நிமிடங்கள் விளக்கு தொடர்ந்து எரியும்.[1][2][3][4][5][6]

நிதி மற்றும் அபிவிருத்தி

[தொகு]

புவியீர்ப்பு விளக்கு முதன் முதலில் இண்டிகோகோவின் (IndieGoGo) பிரச்சாரத்துடன் 2013 சனவரி 15 இல் $ 399,590 நிதி மூலம் 6219 பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது.[7]

இரண்டாவது இண்டிகோகோ பிரச்சாரமான புவியீர்ப்பு விளக்குக 2; ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டு 2015 சூலை 18 நிறைவுற்றது.[8] இதை கென்யாவில் உற்பத்தி செய்வதற்காக மேம்பட்ட வடிவமைப்பைக் கொண்டிருந்தது.

மார்டின் ரிட்ஃபர்டு மற்றும் ஜிம் ரீவ்ஸ் ஆகியோர் நான்கு ஆண்டுகள் புவியீர்ப்பு விளக்கு திட்டத்தில் பணிபுரிந்தனர்.[9]

இயக்கம்

[தொகு]

இதை பயன்படுத்துவதற்கான செலவு என்பது ஒரு முறை செலவு மட்டும் ஆகும். பின்னர் இதைப் பயன்படுத்த எந்த எரிபொருள் செலவும் இல்லை. உயரத்தில் பொருத்தப்பட்டுள்ள புவியீர்ப்பு விளக்கோடு சேர்ந்து இழுக்க ஒரு சக்கரத்தையும் கயிறையும் கட்டி, இதன் அடியில் இரு பைகள் பொருத்தப்பட்டிருக்கும்.[10] இந்தப் பையில் சுமார் 20 பவுண்டுகள் ( 10 கிலோ கிராம்) எடை உள்ள பொருட்களை வைக்க வேண்டும். இதில் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளதால், அதன் உதவியுடன் எடையை மேலே இழுக்கலாம். எடை மேலே சென்றதும், எடையானது மெதுவாக கீழே இறங்கத் தொடங்கும் இது இறங்க எடுத்துக்கொள்ளும் நேரமான 25 நிமிடம்வரை அதன் சக்கர அமைப்பில் பொருந்தியுள்ள மின்னாக்கியில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் உதவியுடன் எல்ஈடி விளக்கு எரியும்.[11] எடை கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி வந்ததும் விளக்கு அணைந்துவிடும். எடையை மீண்டும் மேலே இழுத்தால் விளக்கு மேலும் 25 நிமிடங்களுக்கு எரியும்.

ஊடகங்களில்

[தொகு]

டைம் பத்திரிகையானது 2013 ஆம் ஆண்டின் 25 சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாக புவியீர்ப்பு விளக்கைக் குறிப்பிட்டுள்ளது. [12]

மேலும் படிக்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "How does it work?". Gravity Light Foundation. Archived from the original on 2016-08-13. பார்க்கப்பட்ட நாள் 2016-08-28.
  2. "GravityLight: gravity lighting without battery". Ghacks.net. Archived from the original on 2012-12-19. பார்க்கப்பட்ட நாள் 2012-12-22.
  3. Divulgação. "Nova lâmpada é movida a gravidade - EXAME.com". Exame.abril.com.br. பார்க்கப்பட்ட நாள் 2012-12-22.
  4. "Soon, lamps powered by gravity - The Times of India". The Times of India. Archived from the original on 2013-01-26. பார்க்கப்பட்ட நாள் 2012-12-22.
  5. "Schwerkraft-Lampe Gravity Light, Android-Konsole Esfere - SPIEGEL ONLINE". Spiegel.de. 2012-12-13. பார்க்கப்பட்ட நாள் 2012-12-22.
  6. Warr, Philippa (2012-12-18). "Innovative £3 light powered by sand and gravity". Wired.co.uk. Archived from the original on 2013-01-15. பார்க்கப்பட்ட நாள் 2013-01-02.
  7. "GravityLight: lighting for developing countries". Indiegogo. பார்க்கப்பட்ட நாள் 16 February 2014.
  8. "GravityLight 2: Made in Africa". Indiegogo. பார்க்கப்பட்ட நாள் 16 December 2016.
  9. Joann Pan (2012-11-28). "This $5 Lamp Is Powered Solely by Gravity". Mashable.com. பார்க்கப்பட்ட நாள் 2012-12-22.
  10. "A $5 Lamp Can Change The World - GravityLight". Forbes. பார்க்கப்பட்ட நாள் 16 February 2014.
  11. "Deciwatt GravityLight". PopSci. Archived from the original on 10 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 16 February 2014.
  12. "The 25 Best Inventions of the Year 2013". Time Magazine. பார்க்கப்பட்ட நாள் 16 February 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவியீர்ப்பு_விளக்கு&oldid=3564347" இலிருந்து மீள்விக்கப்பட்டது