உள்ளடக்கத்துக்குச் செல்

புழையுடலி குழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புழையுடலி குழி (Spongocoel) பாராகாசுடர் (அல்லது பாராகாசுட்ரிக் குழி) என்றும் அழைக்கப்படுகிறது. இது புழையுடலிகளின் பெரிய, மைய குழி ஆகும்.[1] நீரானது நூற்றுக்கணக்கான சிறிய துளைகள் வழியாக புழையுடலி குழிக்குள் நுழைகிறது (ஆசுடியா-உள் செல் துளை). உள்ளே நுழைந்த நீரானது பஞ்சுயிரியின் மேற்பகுதியில் காணப்படும் பெரிய திறப்பு (ஆசுகுலம்) வழியாக வெளியேறும். கடற்பாசி உடல் அமைப்பினைப் பொறுத்து (இது அஸ்கோனாய்டு, சைக்கோனாய்டு அல்லது லுகோனாய்டு), புழையுடலி குழி கடற்பாசியின் எளிய உட்புறப் பகுதியாகவோ அல்லது ஒரு சிக்கலான கிளைகளுடன் கூடிய உள் கட்டமைப்பாகவோ இருக்கலாம். உடல் திட்டம் அல்லது வகுப்பைப் பொருட்படுத்தாமல், புழையுடலி குழி வரிசையாக அமைந்த கொயனோ உயிரணுக்களால் சூழப்பட்டுள்ளது. இவை கசையிழையினைக் கொண்டுள்ளன. இவை புழையுடலி குழியினுள் நுழையும் நீரைத் தள்ளி, நீரோட்டத்தை உருவாக்குகின்றன.

புழையுடலி குழி பல்வேறு வகையான உயிரணு வகைகளால் வரிசையாகச் சூழப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான செயல்பாட்டைக் கொண்டுள்ளன.[2]

  • துளை உயிரணுக்கள்- கடற்பாசியின் துளைகளை வரிசைப்படுத்தி, உயிரினத்திற்குள் நீர் செல்ல வழிவகுக்கும் கட்டமைப்பாகும்
  • கொயனோசைட்டுகள் -கடற்பாசியின் நிலையான வடிகட்டி உணவளிக்கும் பொறிமுறைக்கு உள்நோக்கி நீரோட்டங்களை உருவாக்கும் கசையிழைகளுடன் கூடிய அமைப்பாகும்
  • அமீபா உயிரணுக்கள் - உணவைக் கொண்டு செல்வதன் மூலமும்/அல்லது சேமிப்பதன் மூலமும் கழிவுகளை வெளியேற்றுவதன் மூலமும் கடற்பாசிக்குள் பல்வேறு செரிமானச் செயல்பாடுகளைச் செய்யும் இயக்க உயிரணுக்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Spongocoel". Dictionary.com Unabridged. Random House. பார்க்கப்பட்ட நாள் 2016-01-24.
  2. "The Phylum Porifera". people.eku.edu. பார்க்கப்பட்ட நாள் 2017-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புழையுடலி_குழி&oldid=4012167" இலிருந்து மீள்விக்கப்பட்டது