புல்லாட்டுகுன்னல் கோயில், எளம்குளம்
Appearance
புல்லட்டுகுன்னல் கோயில் என்பது இந்தியாவின் கேரளா கோட்டயம் மாவட்டத்தில் எளம்குளம் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும்.
மூலவர்[தொகு]
இதன் மூலவர் சாஸ்தா ஆவார். இங்கு 10 யானைகளுடன் கொண்டாடப்படுகின்ற கஜமேளம் எனப்படும் ஆண்டு விழா மிகவும் புகழ்பெற்றது. இதைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். எளம்குளத்தில் சாஸ்தா இருப்பதை உணர்த்தும் வகையில் இவ்விழா இங்கு கொண்டாடப்படுகிறது. [1]