புல்கன் மாகாணம்
புல்கன் (மொங்கோலியம்: Булган) என்பது மங்கோலியாவின் 21 ஐமக்குகளில் ஒன்றாகும். இது வடக்கு மங்கோலியாவில் உள்ளது. இதன் தலைநகரத்தின் பெயரும் புல்கன் ஆகும்.[1]
புவியியல்
[தொகு]இந்த ஐமக்கிற்கு வடக்கே உருசியாவின் புர்யத்தியா மாகாணமும், வடமேற்கே மங்கோலியாவின் கோவுசுகல், தென்மேற்கே ஆர்க்கன்காய், தெற்கே ஒவர்கன்காய், தென்கிழக்கே டோவ் மற்றும்வடகிழக்கே செலங்கே ஆகியவையும் சுற்றி அமைந்துள்ளன. சிறிய ஒர்கான் ஐமக் ஆனது செலங்கேயின் எல்லையில் இந்த ஐமக்கிற்கு ஒரு இணைப்பாக உள்ளது.
இந்த ஐமக்கிற்கு வடக்கு பகுதியில் அல்பைன் காடுகள் உள்ளன. அவை படிப்படியாக மங்கோலிய உயர்நில பகுதியிலுள்ள வறண்ட புல்வெளி சமவெளிப் பகுதிகளுடன் இணைகின்றன. இங்குள்ள முக்கியமான ஆறுகள் ஒர்கான் மற்றும் செலங்கே ஆகும். இந்த இரண்டு ஆறுகளும் ஒவர்கன்காய் ஐமக்கிலிருந்து இங்கு நுழைகின்றன. இதன் காரணமாக மங்கோலியாவில் உள்ள விவசாயம் செய்யக்கூடிய சில பகுதிகளில் தெற்கு புல்கனும் ஒன்றாக உள்ளது.
போக்குவரத்து
[தொகு]இந்த ஐமக்கின் தலைநகரான புல்கன்னில் ஒரு வானூர்தி நிலையம் உள்ளது. இங்கிருந்து உலான் பத்தூர், கோவ்ட் மற்றும் முருன் ஆகிய இடங்களுக்கு வானூர்திகள் இயக்கப்படுகின்றன.
உசாத்துணை
[தொகு]- ↑ Rural Poverty Reduction Programme official site பரணிடப்பட்டது செப்டெம்பர் 28, 2007 at the வந்தவழி இயந்திரம்