புலியூர் முருகேசன்
புலியூர் முருகேசன் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் முகவராகப் பணியாற்றி வருகின்றார். பல சிறு புதினங்களை எழுதியுள்ளார். இவர் தற்போது கரூர் அண்மையில் உள்ள புலியூர் என்றவிடத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார்.[1]
இவரது சிறுகதைகளின் தொகுப்பு 2014ஆம் ஆண்டு திசம்பரில் பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இதிலுள்ள கதை ஒன்றில் திருநங்கையின் வாழ்க்கை வரலாற்றை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மையமாக வைத்துக்கொண்டு எழுதியுள்ளார். இதனால் இந்நூலைத் தடை செய்யவும் முருகேசன் மீது நடவடிக்கை எடுக்கப்படவும் கோரிக்கையும் போராட்டங்களும் எழுந்துள்ளன. இவ்வாறு பேச்சுரிமைகளில் குறுக்கிடுவதற்கு கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டியக்கம் என்ற கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.[2]
சான்றடைவுகள்
[தொகு]- ↑ "எழுத்தாளர் புலியூர் முருகேசன் மீது 5 பிரிவுகளில் போலீஸார் வழக்கு". தினமணி. 28 மார்ச் 2015. Retrieved 1 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "எழுத்தாளர் புலியூர் முருகேசன் விவகாரம்: திராவிட, கம்யூ. இயக்கங்களுக்கு கொமதேக கண்டனம் - எழுத்தாளருக்கு ஆதரவாக கோவையில் மார்ச் 4-ல் ஆர்ப்பாட்டம்". தி இந்து தமிழ். 28 மார்ச் 2015. Retrieved 1 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)