உள்ளடக்கத்துக்குச் செல்

புலியூர் சுப்ரமணியம் நாராயணசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலியூர் சுப்ரமணியம் நாராயணசுவாமி
பு. சு. நாராயணசுவாமி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்புலியூர் சுப்ரமணியம் நாராயணசுவாமி
பிறப்பு(1934-02-24)24 பெப்ரவரி 1934
கோனேரிராஜபுரம், தஞ்சாவூர்,
சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு16 அக்டோபர் 2020(2020-10-16) (அகவை 86)
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)இசைக் கலைஞர்

புலியூர் சுப்பிரமணியம் நாராயணசுவாமி (Puliyur Subramaniam Narayanaswamy)(24 பிப்ரவரி 1934 - 16 அக்டோபர் 2020) என்பவர் கருநாடக இசைப் பாடகர் ஆவார்.

தொழில்

[தொகு]

நாராயணசுவாமி, திருப்பாம்புரம் சோமசுந்தரம் பிள்ளை, த. மா. தியாகராஜன் ஆகியோரிடமும், பின்னர் செம்மங்குடி சீனிவாச ஐயரிடமும் இசை கற்றார். இவர் மிகவும் பாராட்டப்பட்ட ஆசிரியராகவும் இருந்தார்.[1]

தனது 12 வயதில் பாலகான கலா ரத்தினம் பட்டம் பெற்றார். பின்னர் அனைத்திந்திய வானொலியில் பணிபுரிந்தார்.[2] 1999ஆம் ஆண்டில், இசை அகாதமி இவருக்கு 'சங்கீத கலா ஆச்சார்யா' என்ற பட்டத்தினை வழங்கியது.[3] 2003-ல் இந்திய அரசால் இவருக்கு ’பத்ம பூசண்' விருதினை வழங்கியது.[1][4][5][6] ரஞ்சனி காயத்ரி, அபிசேக் ரகுராம், காயத்ரி வெங்கடராகவன், அமிர்தா முரளி, குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணா மற்றும் அக்கரை சகோதரிகள் இவரது நன்கு அறியப்பட்ட சீடர்கள் ஆவர்.

நாராயணசுவாமி, 16 அக்டோபர் 2020 அன்று காலமானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Saluting a great teacher". The Hindu. 20 February 2014. பார்க்கப்பட்ட நாள் 26 August 2015.
  2. "Musician-teacher par excellence". தி இந்து. 13 June 2003. Archived from the original on 19 November 2004. பார்க்கப்பட்ட நாள் 26 August 2015.
  3. "Sangita Kala Acharya". The Music Academy. பார்க்கப்பட்ட நாள் 25 February 2019.
  4. "Kalam presents Padma awards". Rediff. 3 April 2003. பார்க்கப்பட்ட நாள் 26 August 2015.
  5. "Words of wisdom from a vidwan!". Narayana Vishwanath. New Indian Express. 10 December 2011. பார்க்கப்பட்ட நாள் 26 August 2015.
  6. "Vocalist, dance exponent honoured". தி இந்து. 15 December 2005. பார்க்கப்பட்ட நாள் 26 August 2015.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]