புரோமோ(டெட்ரா ஐதரோதயோபீன்) தங்கம்(I)
![]() | |
இனங்காட்டிகள் | |
---|---|
39929-22-1 ![]() | |
ChemSpider | 57434281 பிழையானது |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 85808834 PubChem in error |
| |
பண்புகள் | |
C4H8AuBrS | |
வாய்ப்பாட்டு எடை | 365.04 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புரோமோ(டெட்ரா ஐதரோதயோபீன்) தங்கம்(I)(Bromo(tetrahydrothiophene)gold(I)) என்பது C4H8AuBrS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். இது தங்கத்தின் ஒருங்கிணைப்பு சேர்மமாகும். பொதுவாக பயன்படுத்தப்படும் குளோரோ (டெட்ரா ஐதரோதயோபீன்) தங்கம்(I) சேர்மத்துடன் இது தொடர்பு கொண்டுள்ளது. இதேபோல், டெட்ரா ஐதரோதயோபீன் ஈந்தணைவி நிலையற்றதாகும். மற்ற வலுவான ஈந்தணைவிகளுடன் உடனடியாக பதிலீடு செய்யப்பட்டு நேரியல் தங்க புரோமைடு அணைவுச் சேர்மத்தை வழங்குகிறது.
டெட்ராபுரோமோ ஆரிக் அமிலத்துடன் டெட்ரா ஐதரோதயோபீனைச் சேர்த்து வினைபுரியச் செய்து புரோமோ(டெட்ரா ஐதரோதயோபீன்) தங்கம்(I) தயாரிக்கப்படுகிறது. இவ்வினைக்குத் தேவையான டெட்ராபுரோமோ ஆரிக் அமிலமானது டெட்ராகுளோரோ ஆரிக் அமிலத்துடன் ஐதரோபுரோமிக் அமிலத்தை வினைபுரியச் செய்து தயாரித்துக் கொள்ளப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Eiter, Lauren C.; Hall, Nathan W.; Day, Cynthia S.; Saluta, Gilda; Kucera, Gregory L.; Bierbach, Ulrich (2009). "Gold(I) Analogues of a Platinum–Acridine Antitumor Agent are only Moderately Cytotoxic but Show Potent Activity Against Mycobacterium Tuberculosis". Journal of Medicinal Chemistry 52 (21): 6519–22. doi:10.1021/jm9012856. பப்மெட்:19803526.