புரோப்பியோபீனோன்
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-பீனைல்புரோப்பேன்-1-ஒன் | |
வேறு பெயர்கள்
எத்தில் பீனைல் கீட்டோன்,
| |
இனங்காட்டிகள் | |
93-55-0 | |
ChEBI | CHEBI:425902 |
ChEMBL | ChEMBL193446 |
ChemSpider | 6881 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7148 |
| |
UNII | E599A8OKQH |
பண்புகள் | |
C9H10O | |
வாய்ப்பாட்டு எடை | 134.18 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.0087 கி/மி.லி |
உருகுநிலை | 18.6 °C (65.5 °F; 291.8 K) |
கொதிநிலை | 218 °C (424 °F; 491 K) |
கரையாது | |
-83.73·10−6செ.மீ3/மோல் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புரோப்பியோபீனோன் (Propiophenone) C9H10O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். அரைல் கீட்டோன் என்று வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் பென்சாயில் ஈத்தேன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. நிறமற்றதாகவும் இனிப்பு மணம் கொண்ட நீர்மமாகவும் பண்புகளைக் கொண்டுள்ள இது இது தண்ணீரில் கரையாது. ஆனால் கரிம கரைப்பான்களுடன் கலக்கும். மற்ற சேர்மங்கள் தயாரிப்பில் புரோப்பியோபீனோன் பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]புரோப்பனாயில் குளோரைடுடன் பென்சீன் வினைபுரியும் பிரீடல் கிராப்டு வினையின் மூலம் புரோப்பியோபீனோன் தயாரிக்கப்படுகிறது. பென்சாயிக் அமிலத்தையும் புரோப்பியோனிக் அமிலத்தையும் கால்சியம் அசிட்டேட்டு மற்றும் அலுமினா முன்னிலையில் 450-550 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைப்படுத்தி இச்சேர்மம் வர்த்தக முறையிலும் தயாரிக்கப்படுகிறது. :[1]
- C6H5CO2H + CH3CH2CO2H → C6H5C(O)CH2CH3 + CO2 + H2O
α-மெத்தாக்சி இசுடைரின் சேர்மத்தை 300 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் புரோப்பியோபீனோன் உருவாகிறது என இலுத்விக் கிளெய்சன் கண்டுபிடித்தார்.[2][3]
பயன்கள்
[தொகு]மருந்துகள் மற்றும் கரிம சேர்மங்களின் தொகுப்பு வினையில் இது ஓர் இடைநிலையாகப் பயன்படுகிறது. [4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Siegel, H.; Eggersdorfer, M. (2005), "Ketones", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a15_077
- ↑ Claisen, Ludwig (1896). "Ueber eine eigenthümliche Umlagerung". Berichte der Deutschen Chemischen Gesellschaft 29 (3): 2931–2933. doi:10.1002/cber.189602903102. https://zenodo.org/record/1425844.
- ↑ Spielman, M. A.; Mortenson, C. W. (1940). "The Condensation of α-Methoxystyrene with Halogen Compounds". Journal of the American Chemical Society 62 (6): 1609–1610. doi:10.1021/ja01863a076.
- ↑ "propiophenone". Merriam-Webster.com. Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் 2 June 2012.
- ↑ Hartung, Walter H.; Crossley, Frank (1936). "Isonitrosopropiophenone". Organic Syntheses 16: 44. doi:10.15227/orgsyn.016.0044. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv2p0363.; Collective Volume, vol. 2, p. 363