புரோடி சண்டை
புரோடி சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையின் பகுதி | |||||||
புரோடி சண்டையின் போது 11வது பான்சர் டிவிசனின் அசைவுகள் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஜெர்மனி | சோவியத் ஒன்றியம் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
பவுல் வோன் கிளீஸ்ட் | கர்னல் ஜெனரல் மிக்கைல் கிர்போனோஸ் | ||||||
பலம் | |||||||
800 டாங்குகள்[1][2] | 2500 டாங்குகள்[1] |
புரோடி சண்டை (Battle of Brody) என்பது இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் சோவியத் படைகளுக்கும் நாசி ஜெர்மனியின் படைகளுக்கும் இடையே நடைபெற்ற ஒரு கவச படைமோதல். இது சோவியத் ஒன்றியத்தின் மீது ஜெர்மானியப் படையெடுப்பான பர்பரோசா நடவடிக்கையின் தொடக்ககட்ட சண்டைகளில் ஒன்றாகும்.
இது டப்னா சண்டை, ரோவ்னி சண்டை, ரோவ்னி-டப்னா சண்டை போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்த மூன்று ஜெர்மானிய ஆர்மி குரூப்புகளில் ஒன்றான தெற்கு ஆர்மி குரூப் உக்ரெய்னைத் தாக்கியது. அதன் ஒரு பகுதியான முதலாவது பான்சர் (கவச) பிரிவின் 48வது விசையூர்தி கோரும் சோவியத் 5வது மற்றும் 6வது ஆர்மிகளும் ஜூன் 22-30, 1941 காலகட்டத்தில் மோதின. இம்மோதல் உக்ரெய்னில் டப்னோ, லட்ஸ்க், புரோடி ஆகிய மூன்று நகரங்களுக்கு இடையேயிருந்த முக்கோணப் பகுதியில் நடைபெற்றது. சோவியத் டாங்குப் படைப்பிரிவுகள் ஜெர்மானிய டாங்குப் படைப்பிரிவுகளுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தின. ஆனால் அவற்றின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியவில்லை. பர்பரோசா நடவடிக்கையின் முதல் கட்ட மோதல்களில் மிகவும் கடுமையானவற்றுள் இது ஒன்றாகும். அது வரை உலகில் நிகழ்திருந்த மாபெரும் டாங்கு மோதலாகவும் இது அமைந்தது.
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Попель Н.К. В тяжкую пору. — М.-СПб.: Terra Fantastica, 2001. 2001 г. — 480 стр., стр 414. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-17-005626-5, 5-7921-0392-5
- ↑ Mark Sołonin (2007). 22 czerwca 1941 czyli Jak zaczęła się Wielka Wojna ojczyźniana (in Polish) (1 ed.). Poznań, Poland: Dom Wydawniczy Rebis. pp. 528–529. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788375101300.
{{cite book}}
: Unknown parameter|translation=
ignored (help)CS1 maint: unrecognized language (link) (the only English translations of Solonin's works seem to be, as of June 2011, these online chapters)
மேற்கோள்கள்
[தொகு]- Bergström, Christer (2007). Barbarossa - The Air Battle: July–December 1941. London: Chervron/Ian Allen. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-8578-0-270-2.
- Deichman, Paul, Spearhead for Blitzkrieg:Luftwaffe operations in support of the Army 1939-1945, Alfred Price ed., Ivy Books, New York, 1999
- Haupt, Werner (1997). Army Group Centre: The Wehrmacht in Russia 1941-1945. Schiffer Military History. Atglen. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7643-0-266-3
- Lieutenant General D.I. Ryabyshev. On the role of the 8th Mechanized Corps in the June 1941 counteroffensive mounted by the South-Western Front. Archived from the original on 2015-04-13. பார்க்கப்பட்ட நாள் 2012-03-08.