புனித மேரி தேவாலயம், சென்னை
Appearance
புனித மேரி தேவாலயம், புனித ஜார்ஜ் கோட்டை | |
---|---|
அமைவிடம் | சென்னை, இந்தியா |
புனித மேரி கிறித்தவ ஆலயம் இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தென்பகுதியில் காணப்படும் மிகத் தொன்மையான கிறித்தவ ஆலயம் ஆகும். ஆங்கிலத் திருச்சபையினருக்குரிய ஆலயங்களில் இந்தியாவில் முதன்முதலில் எழுப்பப்பட்ட ஆலயமாகும்.[1] பொ.ஊ. 1680 இல் கிழக்கிந்திய கம்பெனியாரால் இவ்வாலயம் எழுப்பப்பட்டது. இவ்வாலயத்தில் இறந்த பல ஆங்கிலேயர்களின் நினைவாகப் பல பதிப்புக் கற்பலகைகள் உள்ளன.
புனித மேரி ஆலயத்தினுள் இங்கிலாந்து நாட்டுச் சிற்பிகளின் கைவண்ணத்தைக் காட்டும் பல சலவைக்கல் சிற்பங்கள் உள்ளன. இவை அரிய கலைப்படைப்புகளாகும். இவ்வாலயத்தில் தான் இராபர்ட் கிளைவ் மற்றும் ஆளுநர் எலிஹுஹேல் என்பவர்களின் திருமணம் நடைபெற்றது.[1][2]
மேற்கோள்களும் குறிப்புகளும்
[தொகு]- ↑ 1.0 1.1 வி. கந்தசாமி (2011 (மூன்றாம் பதிப்பு)). தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும். சென்னை: பழனியப்பா பிரதர்ஸ். pp. 32 மற்றும் 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8379-008-6.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ (சுவர் சொல்லும் கதைகள் ). சென்னை: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். 2012. p. 139.