புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வி எனும் இக்கட்டுரை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தின் கல்வி நிலையைப் பற்றிக் கூறுகிறது.புதுக்கோட்டை மாவட்டத்தின் கல்வியறிவு வீதம் 2011 கணக்கெடுப்பின்படி 77.76% ஆகும்[1].இது 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருத்து 6.64% அதிகரித்துள்ளது 2001 தேசிய மக்கள் தொகை கணக்கீட்டின் படி புதுக்கோட்டை மாவட்ட கல்வியறிவு விதம் 71.12% ஆகும்) . இவ்வீதம் மாநில சராசரியை (80.33%) விட குறைவாகும்.
கல்வி நிறுவனங்களில் மாணவர் ஆசிரியர் எண்ணிக்கை
[தொகு]2015-2016 ஆண்டு நிலவரப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு வகையான கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் பணியாற்றும் ஆசிரியர்கள் விவரம் பின்வருமாறு[2]
வரிசை எண் | கல்வி நிறுவனங்கள் | மாணவர்கள் | மாணவிகள் | மொத்தம் | ஆண் ஆசிரியர்கள் | பெண் ஆசிரியர்கள் | மொத்தம் |
---|---|---|---|---|---|---|---|
1 | கலை அறிவியல் கல்லூரிகள் | 5404 | 12479 | 17883 | 295 | 437 | 732 |
2 | பொறியியற் கல்லூரிகள் | 9460 | 4273 | 13669 | 619 | 418 | 1037 |
3 | பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் | 11608 | 965 | 12255 | 641 | 279 | 920 |
4 | கல்வியியல் கல்லூரிகள் | 404 | 1189 | 1593 | 148 | 105 | 263 |
5 | வேளாண் கல்லூரிகள் | 87 | 92 | 179 | 12 | 9 | 21 |
6 | ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் | 32 | 449 | 481 | 45 | 25 | 70 |
7 | செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் | 33 | 199 | 232 | 2 | 14 | 16 |
8 | தொடக்கப்பள்ளிகள் | 30070 | 29469 | 59539 | 1176 | 1688 | 2864 |
9 | நடுநிலைப்பள்ளிகள் | 24086 | 22359 | 46445 | 1093 | 1166 | 2259 |
10 | உயர்நிலைப்பள்ளிகள் | 33358 | 32025 | 65383 | 1152 | 2067 | 3219 |
11 | மேல்நிலைப்பள்ளிகள் | 24086 | 22359 | 46445 | 1093 | 1166 | 2259 |
12 | சிறப்புப் பள்ளிகள் | 50 | 35 | 85 | 5 | 14 | 19 |
13 | தொழிற்பயிற்சி நிலையங்கள் | 1160 | 172 | 1332 | 104 | 16 | 120 |
மாவட்டத்தில் | மொத்தம் | 139838 | 126065 | 265521 | 6385 | 7404 | 13799 |
கல்லூரிக்கல்வி நிறுவனங்களின் விவரம்
[தொகு]வரிசை எண் | கல்வி நிறுவனங்கள் | எண்ணிக்கை |
---|---|---|
1 | கலை அறிவியல் கல்லூரிகள் | 11 |
2 | பொறியியற் கல்லூரிகள் | 11 |
3 | பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் | 22 |
4 | கல்வியியல் கல்லூரிகள் | 19 |
5 | வேளாண் கல்லூரிகள் | 2 |
6 | ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் | 9 |
7 | செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் | 5 |
பள்ளிக்கல்வி
[தொகு]தொடக்கக்கல்வி நிறுவனங்கள்
[தொகு]2015-2016 ஆண்டு நிலவரப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 1103 தொடக்ப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் விரம் பின்வருமாறு
வ.எண் | தொடக்க்கல்வி நிலையங்கள் | எண்ணிக்கை | மாணவர்கள் எண்ணிக்கை | ஆசிரியர்கள் எண்ணிக்கை | ஆசிரியர் மாணவர் விகிதம் |
---|---|---|---|---|---|
1 | அரசுத் தொடக்கப்பள்ளிகள் | 4 | 383 | 13 | 1-29 |
2 | ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள் | 1019 | 50582 | 2521 | 1-20 |
3 | ஆதி-திராவிடர் தொடக்கப்பள்ளிகள் | 10 | 447 | 27 | 1-17 |
4 | நகராட்சி தொடக்கப்பள்ளிகள் | 9 | 1169 | 44 | 1-27 |
5 | உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள் | 58 | 6823 | 247 | 1-28 |
6 | அரசுதவி பெறா தொடக்கப்பள்ளிகள் | 2 | 73 | 10 | 1-7 |
7 | சமூக நலத்துறை தொடக்கப்பள்ளிகள் | 1 | 62 | 2 | 1-31 |
மொத்தம் | 1103 | 59539 | 2864 | 1-21 |
உயர் தொடக்கக்கல்வி நிறுவனங்கள்
[தொகு]2015-2016 ஆண்டு நிலவரப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 324 நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் விரம் பின்வருமாறு
வ.எண் | தொடக்க்கல்வி நிலையங்கள் | எண்ணிக்கை | மாணவர்கள் எண்ணிக்கை | ஆசிரியர்கள் எண்ணிக்கை | ஆசிரியர் மாணவர் விகிதம் |
---|---|---|---|---|---|
1 | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் | 290 | 38176 | 1977 | 1-19 |
2 | நகராட்சி நடுநிலைப்பள்ளிகள் | 9 | 1269 | 56 | 1-23 |
3 | உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள் | 24 | 6956 | 217 | 1-32 |
4 | அரசுதவி பெறா நடுநிலைப்பள்ளிகள் | 1 | 44 | 9 | 1-5 |
மொத்தம் | 324 | 46445 | 2259 | 1-21 |
உயர்நிலைக்கல்வி நிறுவனங்கள்
[தொகு]2015-2016 ஆண்டு நிலவரப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 168 உயர்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் விரம் பின்வருமாறு
வ.எண் | உயர்நிலைப்பள்ளிகள் | எண்ணிக்கை | மாணவர்கள் எண்ணிக்கை | ஆசிரியர்கள் எண்ணிக்கை | ஆசிரியர் மாணவர் விகிதம் |
---|---|---|---|---|---|
1 | அரசு உயர்நிலைப்பள்ளிகள் | 102 | 22559 | 1149 | 1-20 |
2 | மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகள் | 2 | 832 | 48 | 1-17 |
3 | உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள் | 15 | 6463 | 246 | 1-26 |
4 | அரசுதவி பெறா உயர்நிலைப்பள்ளிகள் | 6 | 1460 | 46 | 1-38 |
5 | ஆதி-திராவிடர் உயர்நிலைப்பள்ளிகள் | 2 | 234 | 12 | 1-20 |
6 | மெட்ரிக் உயர்நிலைப்பள்ளிகள் (1-10 வகுப்புகள்) | 40 | 33835 | 1718 | 1-20 |
மொத்தம் | 168 | 65383 | 3219 | 1-20 |
மேல்நிலைக்கல்லி நிறுவனங்கள்
[தொகு]2015-2016 ஆண்டு நிலவரப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 155 மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் விரம் பின்வருமாறு
வ.எண் | மேல்நிலைப்பள்ளிகள் | எண்ணிக்கை | மாணவர்கள் எண்ணிக்கை | ஆசிரியர்கள் எண்ணிக்கை | ஆசிரியர்-மாணவர் விகிதம் |
---|---|---|---|---|---|
1 | அரசு மேல்நிலைப்பள்ளிகள் | 98 | 71002 | 1962 | 1-36 |
3 | உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் | 17 | 16726 | 304 | 1-55 |
4 | அரசுதவி பெறா மேல்நிலைப்பள்ளிகள் | 4 | 3159 | 181 | 1-18 |
5 | ஆதி-திராவிடர் மேல்நிலைப்பள்ளிகள் | 1 | 742 | 24 | 1-31 |
6 | மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் | 35 | 20776 | 1599 | 1- 13 |
மொத்தம் | 155 | 112405 | 4070 | 1-28 |
சிறப்புக்கல்வி நிறுவனங்கள்
[தொகு]புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டையில் சிறப்புக் கல்வி பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் மூன்று உள்ளன.அவையாவன
- அரசு செவித்திறன் குறைபாடுடையோர் நடுநிலைப்பள்ளி, புதுக்கோட்டை.
- அரசு இசைப்பள்ளி, புதுக்கோட்டை.
- அரசு கண்பார்வையற்றோருக்கான சிறப்புப்பள்ளி, புதுக்கோட்டை.
அரசு பொதுத்தேர்வுகளில் புதுக்கோட்டை மாவட்டம்
[தொகு]வருடந்தோறும் மாநில அரசால் நடத்தப்படுகிறது. அவ்வகையில் 2015-2016 ஆம் கல்வியாண்டில் நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் புதுக்கோட்டை மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் பின்வருமாறு
வகுப்பு | தேர்ச்சி சதவீதம் | மாநிலத்தில் இடம் |
---|---|---|
பத்தாம் வகுப்பு | 94.46 | 19 |
பன்னிரெண்டாம் வகுப்பு | 93.01 | 16 |