புதுக்குடித்தனம்
புதுக்குடித்தனம் | |
---|---|
இயக்கம் | ஆர். ரகுவாசன் |
தயாரிப்பு | பி. என். வி. திருவேங்கடம் |
கதை | ஆர். ரகுவாசன் |
இசை | தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | வி. ராஜாராவ் |
படத்தொகுப்பு | ஏ. பி. மணிவண்ணன் |
கலையகம் | ஆழ்வார் அம்மாள் மூவி மேக்கர்ஸ் |
வெளியீடு | நவம்பர் 7, 1999 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புதுக்குடித்தனம் (Pudhu Kudithanam) 1999 ஆம் ஆண்டு விக்னேஷ் மற்றும் ராசி(மந்த்ரா) நடிப்பில், தேவா இசையில், ஆர். ரகுவாசன் இயக்கத்தில், பி. என். வி. திருவேங்கடம் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3][4][5][6]
கதைச்சுருக்கம்
[தொகு]சீதாலட்சுமி (லதா) துணி விற்பனை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர். அனைவரிடமும் கடுமையாகவும் அதிகாரத்தோடும் நடப்பவர். கோகுலகிருஷ்ணன் (மணிவண்ணன்) தன் மனைவி சீதாலெட்சுமியின் சொல்லை மீறாத கணவர். இவர்களது மகன் அசோக் (விக்னேஷ்) வேறொரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரும் தன் தாய்க்கு அடங்கிய பிள்ளை.
தன் மகனுக்கு மணப்பெண் தேடும் சீதாலட்சுமி தன் சொல்லுக்குக் கட்டுப்படும் பெண்ணே தனக்கு மருமகளாக வேண்டும் என்று எண்ணுகிறார். ஆனால் கோகுலகிருஷ்ணனோ தன் மகன் விரும்பும் பெண்ணையே அவன் காதலித்துத் திருமணம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறார். அவரது விருப்பப்படியே அசோக், நிலாவைக் (ராசி) காதலிக்கிறான். நிலா சீதாலெட்சுமியின் நிறுவனத்தில் வேலை செய்பவள். அவளும் அசோக்கின் குடும்பப்பின்னணி தெரியாமல் அவனைக் காதலிக்கிறாள். பெற்றோர்கள் இல்லாததால் தன் பாட்டி வீட்டில் வளர்கிறாள் நிலா. சீதாலெட்சுமிக்குத் தெரியாமல் இவர்களுக்குத் திருமணம் செய்துவைக்கிறார் கோகுலகிருஷ்ணன். இருவரும் தனி வீட்டில் தம்பதிகளாகக் குடியேறுகிறார்கள். ஆனாலும் இரவில் மட்டும் மனைவியுடன் தங்குகிறான் அசோக். தன் நிறுவனத்தில் வேலைசெய்யும் நிலா தன் மருமகள் என்று தெரியாமல் அவளுடன் பழகும் சீதாலட்சுமிக்கு உண்மை தெரியவரும்போது என்ன நடந்தது? நிலாவை மருமகளாக ஏற்றுக்கொண்டாளா? என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்
[தொகு]- விக்னேஷ் - அசோக்
- ராசி - நிலா
- லதா - சீதாலட்சுமி
- மணிவண்ணன் - கோகுலகிருஷ்ணன்
- செந்தில் - அழகு
- கோவை சரளா - சரசு
- சண்முகசுந்தரி
- குமரிமுத்து
- வெண்ணிற ஆடை மூர்த்தி - கல்யாணசுந்தரம்
- கிங்காங் - அருவா வேலு
- திருப்பூர் ராமசாமி - திருமணத் தரகர்
- பயில்வான் ரங்கநாதன்
- ராம்ஜி
- பாபிலோனா
- சிங்கமுத்து
- ஓமக்குச்சி நரசிம்மன்
இசை
[தொகு]படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர்கள் அறிவுமதி, பழனிபாரதி, பொன்னியின் செல்வன், தாமரை மற்றும் ஆர். ரகுவாசன் (இயக்குனர்).[7]
வ. எண் | பாடல் | பாடகர்கள் | காலநீளம் |
---|---|---|---|
1 | அடி சம்மதம் | பி. உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் | 5:14 |
2 | சிலோன் லைலா | சபேஷ், மாதவன் | 4:51 |
3 | மே மாசம் | தேவா | 5:00 |
4 | நிலா நிலா | மனோ | 5:30 |
5 | நிலவுக்கு என்னடி | உன்னிமேனன், ஹரிணி | 4:30 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "புதுக்குடித்தனம்".
- ↑ "புதுக்குடித்தனம்". Archived from the original on 2018-01-18. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.
- ↑ "புதுக்குடித்தனம்". Archived from the original on 2004-08-13. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "புதுக்குடித்தனம்". Archived from the original on 2010-02-01. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "புதுக்குடித்தனம்".
- ↑ "புதுக்குடித்தனம்". Archived from the original on 2013-04-24. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "பாடல்கள்". Archived from the original on 2018-10-01. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.
வெளி இணைப்புகள்
[தொகு]- அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்
- இந்திய நகைச்சுவைத் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- 1999 தமிழ்த் திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- கோவை சரளா நடித்த திரைப்படங்கள்
- சிங்கமுத்து நடித்த திரைப்படங்கள்
- குமரிமுத்து நடித்த திரைப்படங்கள்
- வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்