உள்ளடக்கத்துக்குச் செல்

புதிர்வெட்டுக் கட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Like most modern sets, this wooden tangram is stored in the square configuration.

டான்கிராம் (Tangram) என்பது கணிதத்துடன் தொடர்புடைய ஏழு வேவேறு வடிவத் துண்டுகளைக் கொண்ட ஒரு புதிர் பலகை ஆகும். இது தற்போது புதிர் பலகை எளிய வடிவில் ஐந்து துண்டுகளையும் கொண்டுள்ளது. இது பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் சிந்தனையை தூண்டக் கூடிய விளையாட்டாகவும் விளங்குகிறது. இந்தப் பலகையில் உள்ள ஏழு அல்லது ஐந்து வடிவங்களை வெவ்வேறு முறையில் பொருத்தி பல்வேறு உருவங்களை உருவாக்க முடியும்.

வரலாறு[தொகு]

மேற்கத்திய நாடுகளுக்கு பரவுதல்[தொகு]

இந்த விளையாட்டு சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது சாங் வம்ச ஆட்சியின்போது தான் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்விளையாட்டு சீனாவிலிருந்து கடல் வணிகம் மூலம் கப்பல் வழியே ஐரோப்பாவிற்கு பரவியது. அதன்பின்னர் முதலாம் உலகப்போர் நிகழ்ந்த காலகட்டத்தில் இந்த விளையாட்டு ஐரோப்பாவின் மிகச் சிறந்த புதிர் விளையாட்டாக மாறியது.

ஜெர்மன் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு பரவுதல்[தொகு]

நீண்ட காலமாக சீனாவில் விளையாடப்பட்டு வந்த விளையாட்டான டான்கிராமை அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அறிமுகப் படுத்தியவர் கப்பல் மாலிமியும் கடல் வணிகருமான எம்.டொனால்ட்சன் என்பவர் தான். டான்கிராம் பற்றிய புத்தகத்தையும் இவர் வெளியிட்டார்.

1891-ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஃப்ரெடெரிக் அடால்ஃப் ரிக்டர் என்பவர் ஜெர்மன் நாட்டில் முதன் முறையாக டான்கிராமை அறிமுகப் படுத்தினார்.

சொற்பிறப்பு[தொகு]

டான்கிராம் என்ற வார்தையின் வேர்ச்சொல் என்னவென்று தெளிவாக தெரியவில்லை. Gram என்றால் கிரேக்கத்தில் கடிதம் என்று பொருள்படும்படியாக உள்ளது. ஆனால் tan என்பதற்கு நீட்டிக்க அல்லது தொடர என்றும் பல்வேறு பொருள் படும் என்று அனுமானிக்கப்படுகிறது.

விதிமுறைகள்[தொகு]

ஏழு துண்டுகள் இருந்தால் ஏழையும் பயன்படுத்த வேண்டும். ஐந்து துண்டுகள் இருந்தால் ஐந்தையும் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு துண்டுகளின் பக்கங்களும் அடுத்த துண்டின் பக்கத்தை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஒன்றின் மேல் ஒன்று இருக்கக் கூடாது. The two monks paradox – two similar shapes but one missing a foot.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிர்வெட்டுக்_கட்டம்&oldid=2574713" இலிருந்து மீள்விக்கப்பட்டது