உள்ளடக்கத்துக்குச் செல்

பீம்குண்டு

ஆள்கூறுகள்: 24°26′18″N 79°22′34″E / 24.438335°N 79.37608°E / 24.438335; 79.37608
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The water shines blue in Bhimkund cave.

பீம்குண்டு (Bhimkund) அல்லது நீலகுண்டு எனப்படுவது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓர் இயற்கை நீர் நிலையாகும். இது புனித இடமாகக் கருதப்படுகிறது. பீம்குண்டு மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பஜ்னா கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இது புந்தேல்கண்ட் பிராந்தியத்தில் சத்தர்பூரிலிருந்து 77 கி. மீ. தொலைவில் உள்ளது.[1]

பீம்குண்ட் ஓர் இயற்கை நீர் ஆதாரமாகவும், மகாபாரதச் சகாப்தத்திலிருந்து ஒரு புனித இடமாகவும் உள்ளது. குண்ட் என்பது நீர்த் தொட்டி எனப் பொருள்படும். இந்த நீர் நிலையின் நீர் மிகவும் சுத்தமாகவும் தெளிவானதாகவும் இருப்பதால், மீன் தண்ணீரில் நீந்துவதைத் தெளிவாகக் காணலாம். இந்த நீர் நிலையின் வாயிலிலிருந்து சுமார் 3 மீட்டர் தொலைவில் ஒரு குகை அமைந்துள்ளது. நுழைவாயிலின் இடதுபுறத்தில் சிறிய சிவலிங்கம் ஒன்றுள்ளது. இந்தக் குளம் அடர் நீல நிறத்தில் உள்ளது. இது சிவப்புக் கல் சுவர்களுக்கு மாறாக உள்ளது.

மகாபாரதத்தின் ஒரு கதை பீம்குண்டை பாண்டவர்களுடன் தொடர்பு படுத்துகிறது. கொதிக்கும் சூரியனின் கீழ் சோர்வடைந்த திரௌபதி தாகத்தால் மயங்கி விழுந்தார். ஐந்து சகோதரர்களில் வலிமையானவரான பீம், தாகம் தனிக்கத் தனது கதையிலிருந்து நீரை வெளியேற்றி தரையில் விழச்செய்து உருவாக்கிய குளமானது இது என்பதாகும்.கதையிலிருந்து நீர் வெளியே வந்து குளம் உருவானது என்பது இதன் விளக்கமாகும்.


குகையின் மேற்பகுதியில் குளத்திற்குச் சற்று மேலே ஒரு சிறிய திறப்பு உள்ளது. இந்த இடத்தில்தான் பீம் தனது கதாவினால் அடித்ததாகக் கூறப்படுகிறது.

மற்றொரு புராணக்கதை, வேத முனிவர் நாரதர் விஷ்ணுவினப் புகழ்ந்து கந்தர்வ கானம் (பரமப் பாடல்) நிகழ்த்தினார் என்று கூறுகிறது. அவரது பக்தியால் மகிழ்ச்சி அடைந்த விஷ்ணு, குளத்திலிருந்து வெளிப்பட்டார். விஷ்ணுவின் கருமையான நிறம் காரணமாக நீர் நீல நிறமாக மாறியது என்பதாகும்.[1]

இந்தக் குளம் நீல் குண்ட் (நீல குளம்) நாரதா குண்டு (நிஜயா குளம்) என்றும் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bhimkund · Madhya Pradesh 471311, India".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீம்குண்டு&oldid=4143407" இலிருந்து மீள்விக்கப்பட்டது