உள்ளடக்கத்துக்குச் செல்

பீட்டர் வெஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பீட்டர் அந்தோனி வெஸ்ட் (12 ஆகத்து 1920 – 2 செப்டம்பர் 2003)[1] பிபிசி-யில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். இவர் குறிப்பாக கிரிக்கெட், டென்னிஸ் மற்றும் ரக்பி போன்ற விளையாட்டுகளைப்பற்றி தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர். அவ்வப்போது ஹாக்கி குறித்தும் வர்ணனை வழ்ங்கியுள்ளார். அவர் தொலைக்காட்சியில் வாழ்க்கை முழுதும் விமர்சனம் வழங்குவதில் தனித்து விளங்கினார்.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

வெஸ்ட் க்ரான்புரூக் என்ற நகரில் பிறந்தார். இவரது தந்தை ஒரு விவசாயி ஆவார். இவர் முதல் உலகப்போருக்கு பிறகு அந்த நகரத்திலேயே தொழில் தொடங்கி பணம் ஈட்டினார். பிறகு 1924-இல் க்ரான்புரூக்கில் சொந்தமாக ஒரு கோழிப்பண்ணை உருவாக்கினார்.

கல்வி

[தொகு]

இவர் சக வர்ணணையாளர்களான பாரி டேவிஸ் மற்றும் பிரையன் மூர் ஆகியோருடன் க்ரான்புரூக்கில் உள்ள பள்ளியில் படித்தார். இவர் பள்ளியில் கிரிக்கெட் வீரராக 11 ஆண்டுகளும் மற்றும் தலைவராக மூன்று ஆண்டுகளும் இருந்தார். இவர் தான் படித்த பள்ளிக்காக ரக்பி மற்றும் ஹாக்கி நான்கு ஆண்டுகள் விளையாடினார். கடைசி இரண்டு பருவங்களில் ரக்பி மற்றும் ஹாக்கியின் தலைவராக இருந்துள்ளார். ரக்பியில் சிறந்த முன்னணி வீரராக திகழ்ந்தார். க்ரான்புரூக்கில் தனது வாழ்க்கையை பள்ளியின் தலைவராக முடித்தார்.

போர் சேவை

[தொகு]

பள்ளிப்படிப்பிற்கு பிறகு இவர் ராயல் மிலிடரி அகாடமி சேன்ட் ஹார்ட்க்கு சென்று சிறப்பாக பணியாற்றினார். ரக்பியில் சிறந்து விளங்கினார். ஆனால் 1944-ஆம் ஆண்டில் ஸ்பான்டிலிடிஸ் என்ற நோய் கண்டறியப்பட்டு இராணுவத்திலிருந்து வெளியேறினார்.

தொழில்

[தொகு]

இவர் போருக்குபின் 1952-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஒரு தொலைக்காட்சியில் வர்ணனையாளராக ஆனார். 1986-ஆம் ஆண்டு வரை வானொலியிலும் மற்றும் தொலைக்காட்சியிலும் கிரிக்கெட் வர்ணணையாளராக இருந்தார். மேலும் 1955 முதல் 1982 வரையான காலங்களில் பிபிசி தொலைக்காட்சியின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டான் மஸ்கெல் என்பவருடன் நடித்தார். இவர் சி.பி. ஃப்ரையின் பரிந்துரையின் பேரில் பிபிசியில் இணைந்தார். கிட்டதட்ட 40 ஆண்டுகாலம் பிபிசி-யில் தொடர்ந்து பணியாற்றினார். 1986-இல் பிபிசி-யிலிருந்து பணி ஓய்வு பெற்றார்.

விளையாட்டு வீரர்களுடன் நேர்காணலின்பொழுது பழக்கமில்லாத வார்த்தைகளை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இவர் 1946-ல் பவுலின் பைக் என்ற பெண்ணை மணந்தார். இவர்கள் செல்லின்ஹாமில் வாழ்ந்தனர். இவர்களுக்கு ஜாக்குலின் என்ற ஒரு மகளும் சீமோன் மற்றும் ஸ்டீபன் என்ற இரு மகன்களும் இருந்தனர். இவர் தனது 83-வது வயதில் இறந்துபோனார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_வெஸ்ட்&oldid=3592797" இலிருந்து மீள்விக்கப்பட்டது