பீட்டர் கோல்சு
பீட்டர் கோல்சு | |
---|---|
பிறப்பு | 4 சூன் 1963 (அகவை 61) |
படித்த இடங்கள் | University of Sussex |
பணி | வானியற்பியலாளர் |
இணையம் | https://telescoper.wordpress.com/ |
அறிவியல் வாழ்க்கைப் போக்கு | |
துறைகள் | அண்டவியல் |
நிறுவனங்கள் | |
ஆய்வு நெறியாளர் | ஜான் டி. பாரோ |
முனைவர் பட்ட மாணவர்கள் | Lung-Yih Chiang, Patrick Dineen, Pan Jun, Emma J. King, Christopher James Short, Andrew Gareth Davies, Evaggelos Kolokotronis, Russell Charles Pearson, Catherine Spencer |
பீட்டர் கோல்சு (Peter Coles)(பிறப்பு: 1963[1]) மெய்நூத் பல்கலைக்கழகத்தின் ஒரு கோட்பாட்டு அண்டவியலாளர் ஆவார்.[2] நமது அண்டப் பேரியல் கட்டமைப்பை அவர் ஆய்வு செய்கிறார்.
1985 - 88 இல் முனைவர் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் சுசெக்சில் முதுமுனைவர் ஆராய்ச்சியாளராக ஆனார். பின்னர் ராணி மேரியில் விரிவுரையாளராக ஆனார். 2007 ஆம் ஆண்டு தொடங்கி கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த இவர் , 2013 முதல் சுசசெக்சு பல்கலைக்கழகத்தில் கணித, இயற்பியல் அறிவியல் பள்ளியின் தலைவராக இருந்தார். 2017 ஆம் ஆண்டில் இவர் மெய்நூத் பல்கலைக்கழகத்தில் பணியாற்றத் தொடங்கினார் , 2019 ஆம் ஆண்டில் கோட்பாட்டு இயற்பியல் துறையின் தலைவராக ஆனார்.
இளமையும் கல்வியும்
[தொகு]அவர் நியூகேசில் அபான் தைனில் பிறந்தார். அரசு இலக்கணப் பள்ளியில் கல்வி பயின்றார்.[3]
அவர் தனது முதல் பட்டத்தை கேம்பிரிட்ஜ் மாக்டலீன் கல்லூரியில் இயற்கை அறிவியலில் கோட்பாட்டு இயற்பியல் புலமையோடு பெற்றார்.[4] 1985 ஆம் ஆண்டில்[5] ஜான் டி. பாரோவின் மேற்பார்வையில் சுசெக்சு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் , மேலும் 1988 ஆம் ஆண்டில் தனது முதுமுனைவர் ஆய்வறிக்கையை முடித்தார்.[4]
எல்ஜிபிடி அறிவியலாளர்கள் தங்கள் பாலியல் நோக்குநிலை தங்கள் வாழ்க்கையைத் தாக்கும் என்று அதிகமாக கவலைப்பட வேண்டாம் என்று கோல்சு அறிவுறுத்துகிறார்.[6] அவர் பரந்த அளவிலான இசையை , குறிப்பாக செவ்வியல், ஜாசு இசையை விரும்புகிறார் , மேலும் அவர் வானொலி-3 ஐக் கேட்கிறார் , ஆனால் ஆர்ப்ஸிகார்ட்சால்ஔருவாகும் ஒலியை அவர் விரும்பவில்லை.[7]
தொழில் வாழ்க்கை
[தொகு]கோல்சு 1985 இல் இருந்தே அண்டவியலாளராகவும் கோட்பாட்டு வானியற்பியலாளராகவும் உள்ளார்.[8] இவர்1988 இல் இருந்து 1990 வரைசுசெக்சு பல்கலைக்கழகத்தில் முதுமுனவர் ஆய்வாளராக இருந்தார். பிறகு, இலண்டன் பல்கலைக்கழக அரசி மேரி, வெசுட்டுபீல்டு கல்லூரியில் கணிதவியல் துறையில், 1990 முதல் 1999 வரையில், முதலில் தற்காலிக விரிவுரையாளராகவும் பின்னர் PPARC உயர் ஆய்வுறுப்பினராக 1993 முதல்1998 வரையிலும் 1994 இல் காத்திருப்பு விரிவுரையாளராகவும் 1997 இல் காத்திருப்பு உயர்விரிவுரையாளராகவும் பணியாற்ரினார். பிறகு, இவர் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் 1999 முதல் 2007 வரை வானியர்பியல் பேராசிரியராகவும் இருந்தார். இங்கே இவர் ஒரு வானியல் குழுவை அமைத்தார்.
கோல்ஸ் 2007 முதல் 2013 வரை கார்டிப் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு வானியற்பியல் பேராசிரியராகவும் , இயற்பியல், வானியல் பள்ளியின் துணைத் தலைவராகவும் இருந்தார்.
பிப்ரவரி 2013 இல் சுசசெக்சு பல்கலைக்கழகத்தில் கணித, இயற்பியல் பள்ளியின் தலைவராக ஆனார். அவர் 2016 ஆம் ஆண்டில் சுசெக்சு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி , கார்டிப் திரும்புவதற்காக இயற்பியல், வானியல் பள்ளி, தரவு கண்டுபிடிப்பு ஆராய்ச்சி நிறுவனத்துடன் கூட்டு பதவியை வகித்தார். 2017 டிசம்பர் 1 அன்று அவர் மெய்நூத் பல்கலைக்கழகம், கார்டிப் பல்கலைக்கழகம்ஆகிய இரண்டிலும் பகுதிநேர வேலை செய்யத் தொடங்கினார். [9] ஜூலை 2018 இல் முழுநேரமாக மெய்நூத்திற்கு சென்றார். [10] அவர் 2019 செப்டம்பர் 1 அன்று கோட்பாட்டு இயற்பியல் துறையின் தலைவராக ஆனார்.[10]
அவர் அரசு வானியல் கழக, இயற்பியல் நிறுவன உறுப்பினராகவும் உள்ளார்.[11] அரசு வானியல் கழகத்தின் மன்றத்திலும் பணியாற்றியுள்ளார்.[12]
அவர் தற்போது மேனூத்தில் வாழ்கிறார். அவர் முன்பு வாழ்ந்த இடங்களில் நாட்டிங்காம்சயரில் உள்ள பிரைட்டன் பீசுட்டன் , இலண்டனில் உள்ள பெத்னல் கிரீன், கார்டிஃப் ஆகியவை அடங்கும்.[13][14][15][16]
ஆராய்ச்சி
[தொகு]அவரது முதன்மை ஆராய்ச்சி ஆர்வம் அண்டவியலிலும் அண்டப் பேரியல் கட்டமைப்பிலும் உள்ளது , குறிப்பாக அண்ட நுண்ணலைப் பின்னணி, பால்வெளிக் கொத்துகள் உள்ளிட்ட கட்புல அண்டத்தின் இயல்புகளை கணக்கிட முயற்சிக்கும் கோட்பாட்டுப் படிமங்கள் காந்தப்புலங்கள் - காசியலற்ற, சமச்சீரற்ற தன்மையைக் கொண்ட அண்டவியல் படிமங்களையும் , வானியலிலும் இயற்பியலிலும் நிகழ்தகவு, புள்ளியியலின் பயன்பாட்டையும் பற்றி இவர் ஆராய்ச்சி செய்கிறார்.
கணித, வானியல் இளங்கலை படிப்புகளைக் கற்பித்துள்ளார். பிரான்செசுக்கோ உலூச்சனுடன் இணைந்து அவர் " அண்டவியல், அண்ட கட்டமைப்பின் தோற்றமும் படிமலர்ச்சியும் " (ISBN 0 - 471 - 48909 - 2) என்ற பாடப்புத்தகத்தை எழுதினார் , அதன் இரண்டாவது பதிப்பு ஜான் வில்லி & சன்சு நிறுவனத்தால் ஜூலை 2002 இல் வெளியிடப்பட்டது.[17]
அவர் யூக்ளிடு (விண்கலம்) ஒத்துழைப்பில் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரே உறுப்பினர் ஆவார் , அங்கு அவர் பால்வெளிகளின் கொத்தாக்கம் பற்றி ஆய்வு செய்கிறார்.
அவர் இன் தி டார்க் என்ற பெயரில் ஒரு வலைப்பதிவைக் கொண்டுள்ளார் , அங்கு அவர் டெலஸ்கோப்பர் என்ற பெயரில் எழுதுகிறார் ( இது வானியல் அறிவியல் நிதி , ஓபரா ஜாசு இரக்பி, குறுக்கெழுத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய அவரது பெயரின் சுருக்கவரை ஆகும். 1999 ஆம் ஆண்டில் இது டெய்லி டெலிகிராப் இதழ் பட்டியலிட்ட ஐந்து சிறந்த இயற்பியல் வலைப்பதிவுகளில் ஒன்றாகும்.[18]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Coles, Peter; Lucchin, Francesco (30 May 1995). Cosmology: the origin and evolution of cosmic structure (in ஆங்கிலம்). John Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780471954736.
- ↑ Coles, Peter; Lucchin, Francesco (30 May 1995). Cosmology: the origin and evolution of cosmic structure (in ஆங்கிலம்). John Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780471954736.
- ↑ Coles, Peter (26 October 2008). "A Friend of Dorothy". In The Dark. Wordpress. பார்க்கப்பட்ட நாள் 28 March 2017.
- ↑ 4.0 4.1 "New Head of Mathematical and Physical Sciences appointed". The University of Sussex. 16 October 2012.
- ↑ "Prof Peter Coles". University of Cardiff. பார்க்கப்பட்ட நாள் 19 March 2017.
- ↑ Arney, Kat (6 August 2004). "It's Great if You're Straight?". Science Magazine.
- ↑ "Wikipedia Update". In the Dark. 18 March 2017.
- ↑ Duke, Seán. "Space mission hopes to solve the riddle of 'missing' matter" (in en). The Irish Times. https://www.irishtimes.com/news/science/space-mission-hopes-to-solve-the-riddle-of-missing-matter-1.4757906.
- ↑ "A Message from Maynooth". In the Dark. 1 December 2017.
- ↑ 10.0 10.1 "About Me". 15 September 2008. பார்க்கப்பட்ட நாள் 2020-01-15.
- ↑ Coles, Peter (13 June 2013). "Hawking at BAFTA". In The Dark. Wordpress. பார்க்கப்பட்ட நாள் 28 March 2017. (About Fellowship of the Institute of Physics.)
- ↑ "Election results: new President and Council". Royal Astronomical Society. 2013. பார்க்கப்பட்ட நாள் 28 March 2017.
- ↑ Coles, Peter (10 January 2017). "The "Pont" in Pontcanna". In The Dark. Wordpress. பார்க்கப்பட்ட நாள் 28 March 2017. (About residence in Cardiff.)
- ↑ Coles, Peter (30 October 2008). "In the Dark". Wordpress. பார்க்கப்பட்ட நாள் 28 March 2017. (About residence near Nottingham.)
- ↑ Coles, Peter (5 August 2016). "Last Day in Brighton". In The Dark. Wordpress. பார்க்கப்பட்ட நாள் 28 March 2017. (About residence in Brighton.)
- ↑ Coles, Peter (23 March 2017). "London looking back". In The Dark. Wordpress. பார்க்கப்பட்ட நாள் 28 March 2017. (About residence in Bethnal Green, London.)
- ↑ "Cosmology: The Origin and Evolution of Cosmic Structure, 2nd Edition". Wiley. பார்க்கப்பட்ட நாள் 19 March 2017.
- ↑ "Five great physics blogs" இம் மூலத்தில் இருந்து 3 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303225925/http://blogs.telegraph.co.uk/technology/iandouglas/9288497/five_great_physics_blogs/.
வெளி இணைப்புகள்
[தொகு]- கணித மரபியல் திட்டத்தில் பீட்டர் கோல்சு
- Coles' blog