உள்ளடக்கத்துக்குச் செல்

பி. சத்யன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. சத்யன்

பி. சத்யன் (B. Satyan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கேரள மாநிலத்தின் அட்டிங்கல் தொகுதியில் போட்டியிட்டு வென்று 13 ஆவது சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினராகப் பணிபுரிந்தார். இந்திய பொதுவுடமைக் கட்சியின் மார்க்சிய பிரிவைச் சேர்ந்த இவர் அக்க்ட்சியின் தலைவராகவும் இருந்தார். மாணவர் இயக்கத்தின் மூலம் அரசியலுக்கு வந்தார். திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரித் தலைவராகவும், கேரளப் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். திருவாடானை மாவட்ட பஞ்சாயத்து தலைவராகவும், திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலராகவும் பணியாற்றியுள்ளார். 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அட்டிங்கல் தொகுதியில் இருந்து கேரள சட்டசபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]

சத்யனின் தந்தை பெயர் பாசுகரன் ஆகும். தாயார் பெயர் தங்கம்மா. இவருக்கு லீனா தாமசு என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Members - Kerala Legislature". Archived from the original on 27 May 2016. பார்க்கப்பட்ட நாள் 8 May 2016.
  2. "Kerala Assembly Election Results in 2011". Archived from the original on 2020-09-24. பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சத்யன்&oldid=3631354" இலிருந்து மீள்விக்கப்பட்டது