உள்ளடக்கத்துக்குச் செல்

பி. காளியம்மாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பி. காளியம்மாள்
பி. காளியம்மாள்
பி. காளியம்மாள்
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
பதவியில்
14 திசம்பர் 2019 – 24 பிப்ரவரி 2025
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நட்சத்திரப் பேச்சாளர்
பதவியில்
5 பிப்ரவரி 2019 – 24 பிப்ரவரி 2025
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநாகப்பட்டினம், தமிழ்நாடு, இந்தியா
துணைவர்பிரகாஷ்
பிள்ளைகள்2 (மகன் 1, மகள் 1)

பி. காளியம்மாள் (P.Kaliyammal) என்பவர் தமிழக அரசியல்வாதியும், தமிழ் தேசிய போராளியும், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரும் ஆவார்.[1] இவர் நாம் தமிழர் கட்சியில் இணைவதற்கு முன்பே பல சமூக செயல்பாடுகள் செய்துவந்துள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டின் 15 கடலோர மாவட்டங்களிலும் பல வித மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்டதோடு, பல மக்கள் போராட்டங்களை இவரே முன்னெடுத்துள்ளார். சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி அனல் மின் நிலைய விரிவாகத்திற்கு எதிராக போராடியுள்ளார், பரங்கிப்பேட்டை IL&FS அனல் மின் நிலையத்திற்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தி வழக்கு வாங்கியதில் அவரால் தன்னுடைய IAS படிப்பை தொடர முடியாத சூழல் உண்டானது. ராமநாதபுரம் உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிராக போராடி, வழக்கு தொடர்ந்து ஆலையை மூட செய்தார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் நடந்த புகழ்பெற்ற நிகழ்ச்சியான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியின் மூன்றாம் சீசனில் நடிகர் அரவிந்த் சாமி தொகுத்து வழங்கிய அந்த போட்டியில் கலந்துகொண்டு 25 லட்சம் வென்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், இளங்கலை வணிகவியல் மற்றும் முதுகலை மேலாண்மைப் பட்டம் பெற்றவராவார். இவர் மயிலாடுதுறை மாவட்டம் ( முன்பு நாகப்பட்டினம் ) சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் என்ற கடற்கரை கிராமத்தில் பிறந்தார். இவருக்கு ஒரு உடன்பிறந்த சகோதரியும், சகோதரரும் உள்ளனர். மேலும் அப்பகுதியில் இவரின் குடும்பம் பெரிய குடும்பம். அவர் பள்ளிபடிப்பு அக்கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்தார். கல்லூரி படிப்பை சீர்காழியில் உள்ள கலை கல்லூரியில் படித்தார். சுனாமிக்கு பிறகு அவர் தனியார் தொண்டு நிறுவனத்தில் இணைந்து வேலை பார்த்தது முதல் இவரில் சமூக செயல்பாடுகள் தொடங்கியது.2010ல் இவருக்கு திருமணம் ஆகிய பின்பு நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையில் வசித்து வருகிறார். 2018ல் ஏற்பட்ட கஜா புயலில் மக்களுக்கு உதவியது, மீனவர்களுக்கான இவரது பணிகளை பார்த்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இவரை நாம் தமிழர் கட்சிக்கு 2019ல் அழைத்து வந்தார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

நாகபட்டினத்தில் ஒரு சமூகப் போராளியாகப் பணியாற்றி வந்த இவர், கசா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார். அப்போது இவருக்கு நாம் தமிழர் கட்சியின் அறிமுகம் கிடைத்தது. இதன் பின் இக்கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இக்கட்சியில் சேர்ந்தார்.

தேர்தலில் போட்டி

[தொகு]
தேர்தல் தொகுதி கட்சி முடிவு பெற்ற வாக்குகள் எதிர்த்துப் போட்டியிட்டவர் எதிர்த்துப் போட்டியிட்டவர் கட்சி எதிர்த்துப் போட்டியிட்டவர் பெற்ற வாக்குகள்
2019 இந்தியப் பொதுத் தேர்தல்[2][3][4][5] வட சென்னை மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி தோல்வி 60,515 (6.33%) கலாநிதி வீராசாமி திமுக 5,90,986 (61.85%)
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்[6] பூம்புகார் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி தோல்வி 14,823 (7.16%) நிவேதா எம். முருகன் திமுக 96,102 (46.40%)
2024 இந்தியப் பொதுத் தேர்தல் மயிலாடுதுறை நாம் தமிழர் கட்சி தோல்வி 1,27,642 (11.73%) ஆர்.சுதா காங்கிரஸ் 5,18,459 (47.67%)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பூம்புகார் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பி. காளியம்மாள் நேற்று பரப்புரைசெய்தார்".
  2. "Naam Tamilar Katchi (NTK) Candidate List 2019 for Tamil Nadu Lok Sabha Election". www.elections.in. Retrieved 2022-01-28.
  3. CHENNAI NORTH Lokshaba Constituency
  4. '60,000 பேரின் நம்பிக்கையைப் பெற்றதே மகிழ்ச்சிதான்!' 'நாம் தமிழர்' காளியம்மாள்
  5. "NTK's North Chennai candidate hitting all right notes". Archived from the original on 2021-04-16. Retrieved 2021-04-16.
  6. P KALIYAMMAL, POOMPUHAR (NAGAPATTINAM)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._காளியம்மாள்&oldid=4245892" இலிருந்து மீள்விக்கப்பட்டது