பிளாட்டீயா சமர்
பிளாட்டீயா சமர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பு பகுதி | |||||||||
பாரசீகர்களும் எசுபார்டான்களும் பிளாட்டியாவில் சண்டையிடுகிறார்கள். 19 ஆம் நூற்றாண்டு சித்தரிப்பு. |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
கிரேக்க நகர அரசுகள் | பாரசீகப் பேரரசு | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
பாசேனியஸ் Arimnestos Amompharetus † அரிசுடடைடீசு | மார்தோனியசு † Masistius † Artabazos |
||||||||
பலம் | |||||||||
110,000 (எரோடோட்டசு) 100,000 (Diodorus) 100,000 (Trogus)[சான்று தேவை] ~80,000 (நவீன ஒருமித்த கருத்து) | 300,000 (எரோடோட்டசு) மேலும் 50,000 (எரோடோட்டசுவின் கணக்கீடு) கிரேக்க கூட்டணி 500,000 (டயோடோரஸ்) 70,000–120,000 (நவீன ஒருமித்த கருத்து) |
||||||||
இழப்புகள் | |||||||||
10,000+ (Ephorus மற்றும் Diodorus) 1,360 (புளூட்டாக்) 159 (எரோடோட்டசு) | 257,000 (எரோடோட்டசு) 100,000 (Diodorus) 50,000–90,000 (நவீன ஒருமித்த கருத்து) |
||||||||
கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பில் பிளாட்டீயா சமர் என்பது இறுதி தரைப் போர் ஆகும். இது கிமு 479 இல் போயோடியாவில் உள்ள பிளாட்டீயா நகருக்கு அருகில் நடந்தது. இப்போரில் கிரேக்க நகர அரசுகள் ( எசுபார்த்தா, ஏதென்சு, கொரிந்த், மெகாரா உட்பட) மற்றும் பாரசீகப் பேரரசான செர்க்செஸ் (கிரேக்கத்தின் போயோடியன்கள், தெசலியர்கள், மாசிடோனியர்கள் ஆகியோரிடன் இணைந்து) தலைமையிலான பாரசீகப் படைகளுக்கு இடையில் நடந்த போர் ஆகும்.
முந்தைய ஆண்டு, பாரசீக மன்னரின் நேரடி தலைமையில் நடந்த பாரசீக படையெடுப்பில் பாரசீகப் படைகள் தெர்மோபைலே மற்றும் ஆர்ட்டெமிசியம் போர்களில் வெற்றிகளை ஈட்டியது. மேலும் தெசலி, ஃபோசிஸ், போயோட்டியா, யூபோயா, அட்டிகா போன்றவற்றைக் கைப்பற்றியது. இருப்பினும், அதற்கடுத்து நடந்த சலாமிஸ் போரில், நேச நாட்டு கிரேக்கக் கடற்படை சாத்தியமில்லாததாக இருந்தாலும் பெரும் வெற்றியைப் பெற்றது. இது பாரசீகர்கள் பெலோபொன்னீசை வெற்றி கொள்வதைத் தடுத்தது. இதன்பிறகு செர்க்செஸ் தனது இராணுவத்தின் பெரும்பகுதியுடன் பின்வாங்கினார். ஆனால் அடுத்த ஆண்டு கிரேக்கர்களை வெற்றிகொள்ள அவரது தளபதி மார்தோனியசு தலைமையில் ஒரு பெரும்படையை விட்டுச் சென்றார்.
கி.மு. 479 கோடையில் கிரேக்கர்கள் ஒரு பெரிய படையைத் திரட்டி, பெலோபொன்னெசஸிலிருந்து புறப்பட்டனர். பாரசீகர்கள் போயோட்டியாவிற்கு பின்வாங்கி, பிளாட்டியாவிற்கு அருகில் ஒரு அரண்கள் அமைக்கபட்ட ஒரு முகாமை அமைத்தனர். இருப்பினும், கிரேக்கர்கள் பாரசீக முகாமைச் சுற்றியுள்ள பிரதான குதிரைப்படை தந்திரங்கள் கொண்ட பகுதியில் நுழையாமல் இருந்தனர். இதன் விளைவாக போரில் 11 நாட்கள் தேக்கநிலை ஏற்பட்டது. கிரேக்கப் படைகளுக்கான விநியோக பாதைகள் சீர்குலைந்ததால் அவர்கள் பின்வாங்க முயற்சித்த போது, கிரேக்க போர் வரிசை துண்டு துண்டானது. இதைக்கண்டு கிரேக்கர்கள் முழுவதுமாக பின்வாங்குவதாக நினைத்து, மார்டோனியஸ் தனது படைகளை அவர்களைப் பின்தொடரும்படி கட்டளையிட்டார். ஆனால் கிரேக்கர்கள் (குறிப்பாக எசுபார்டான்கள், டெஜியன்கள், ஏதெனியர்கள்) இலகுரக ஆயுதங்களை ஏந்தி வந்த பாரசீக காலாட் படையை வழிமறித்து படைத்தலைவரான மார்தோனியசைக் கொன்றனர்.
பாரசீக இராணுவத்தின் பெரும்பகுதி அந்த முகாமில் சிக்கி படுகொலை செய்யப்பட்டது. இந்த இராணுவத்தின் அழிவு மற்றும் பாரசீக கடற்படையின் எஞ்சியவை அதே நாளில் நடந்த மைக்கேல் போரில், முறியடிக்கபட்டு தீர்க்கமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. பிளாட்டியா மற்றும் மைக்கேல் போர்களுக்குப் பிறகு கிரேக்க கூட்டாளிகள் பாரசீகர்களுக்கு எதிரான வெற்றிகரமான தாக்குதலை மேற்கொண்டு விரட்டியடித்தனர். இது கிரேக்க பாரசீகப் போர்களின் புதிய கட்டத்தைக் குறிக்கும்.