பிலிப்பீன்சு வன ஈப்பிடிப்பான்
பிலிப்பீன்சு வன ஈப்பிடிப்பான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சையோரினிசு
|
இனம்: | சை. உரூபிகாடா
|
இருசொற் பெயரீடு | |
சையோரினிசு உரூபிகாடா சார்ப்பி, 1877 | |
வேறு பெயர்கள் | |
ரைனோமையாசு உரூபிகாடா |
பிலிப்பீன்சு வன ஈப்பிடிப்பான் (Philippine jungle flycatcher)(சையோரினிசு உரூபிகாடா) என்பது பழைய உலகப் பறக்கும் பறவை குடும்பமான முயுசிகாபிடேயில் உள்ள ஒரு பாஸரின் பறவை சிற்றினமாகும். இது பிலிப்பீன்சு தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
இந்த சிற்றினம் முன்பு ரைனோமியாஸ் பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டது. ஆனால் 2010ஆம் ஆண்டு மூலக்கூறு தொகுதிபிரிப்பாய்வின் முடிவுகளின் அடிப்படையில் சையோரினிசுக்கு மாற்றப்பட்டது.[2][3] சுலா தீவுக்கூட்டத்தில் காணப்படும் சுலா வன ஈப்பிடிப்பான் (சை. ஓகுலரிசு) மற்றும் போர்னியோவைச் சேர்ந்த குரோக்கர் வன ஈப்பிடிப்பான் (சை. ரூபிகிரிசா) ஆகியவை 2021-ல் பன்னாட்டு பறவையியல் மாநாட்டில் தனித்தனி சிற்றினங்களாகப் பிரிக்கப்பட்டன. இந்த சிற்றினம் சிவப்பு வால் வன ஈப்பிடிப்பான் என்பதிலிருந்து பிலிப்பீன்சு வன ஈப்பிடிப்பான் என மறுபெயரிடப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Cyornis ruficauda". IUCN Red List of Threatened Species 2018: e.T22709161A131951473. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22709161A131951473.en. https://www.iucnredlist.org/species/22709161/131951473. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ Sangster, G.; Alström, P.; Forsmark, E.; Olsson, U. (2010). "Multi-locus phylogenetic analysis of Old World chats and flycatchers reveals extensive paraphyly at family, subfamily and genus level (Aves: Muscicapidae)". Molecular Phylogenetics and Evolution 57 (1): 380–392. doi:10.1016/j.ympev.2010.07.008. பப்மெட்:20656044.
- ↑ 3.0 3.1 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2021). "Chats, Old World flycatchers". IOC World Bird List Version 11.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 28 July 2021.