உள்ளடக்கத்துக்குச் செல்

பிறீடெகார்ட் கிளாற்சிலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிறீடெகார்ட் கிளாற்சிலே
பிறப்பு(1920-11-24)24 நவம்பர் 1920
Stuttgart, Germany
இறப்புவார்ப்புரு:Death
தொழில்கலைஞர்

பிறீடெகார்ட் கிளாற்சிலே (Fridegart Glatzle, 24 நவம்பர், 1920 - 14 மார்ச், 2015) யெர்மனிய செரமிக் பெண் கலைஞர் ஆவார். இவர் யெர்மனியின் ஸ்ருட்கார்ட் (Stuttgart) நகரைப் பிறப்பிடமாகவும், யெர்மனியின் கார்ள்ஸ்றூகே (Karlsruhe) நகரை வதிவிடமாகவும் கொண்டவர்.

கலை

[தொகு]

இவர் அறுபதுகளில் பல் வேறு பொருட்களைப் பாவித்து, புதிய கலவைகளுடன் செரமிக்குக்கு ஒரு புதியபாதையைக் கண்டு பிடித்தார்.[1]. இவர் 1951 இலிருந்து 1979 ஆண்டு காலப்பகுதிக்குள் தான் கடமையாற்றிய மயோலிக்கா (majolika ) என்ற செரமிக் (Ceramic) நிறுவனத்தில் உற்பத்தி செய்த செரமிக் வடிவங்களில் 1222 வடிவங்கள் தொடர் உற்பத்தி வடிவங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவரால் செய்யப்பெற்ற பூச்சாடிகளும், கோப்பைகளும், சட்டிகளும், சுவர் ஓடுகளும் இன்றும் விற்பனையில் உள்ளன. குறிப்பிட்ட சில அருங்காட்சியகத்தில் வைக்கப் பெற்றுள்ளன.

கல்வி

[தொகு]

இவர் சிறுவயதில் தான் ஒரு பாடகியாக வரவேண்டும் என்றே ஆசை கொண்டிருந்தார். இரண்டாவது உலகயுத்தமும், அதைத் தொடர்ந்த கடினமான வாழ்க்கையும் அவரது ஆசைக்குத் தடையாகி விட்டன. அதன் பின் அவரது தொழிற்கல்வி அவரை செரமிக் கலைஞராக்கியது. ஆனாலும் அவரது பாடவேண்டும் என்ற ஆர்வத்தால் ஒய்வு நேரங்களிலும், ஓய்வுக் காலங்களிலும் தேவாலயங்களில் பாடினார்.

குடும்பமும் வாழ்க்கையும்

[தொகு]

இவர் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது நகரில் அகதிகள் முகாம் ஒன்று இருந்தது. அங்கு தானாகவே சென்று பல உதவிகள் செய்தார். அகதிகளாக இருந்த இலங்கைத் தமிழரும், ஆபிரிக்கரும் இவரை மம்மா (அம்மா) என்றும், கிராண்ட்மா (அம்மம்மா) என்றும் அன்போடு அழைத்தார்கள்.

பரிசுகள்

[தொகு]

இவரது தனித்துவமான தயாரிப்புகளுக்காக 1959 இல் சிறந்த கைவினையாளர்களுக்கான தேசியப் பரிசு வழங்கப் பெற்றது.[1][2][3]

இவரது கைவினை பற்றிய தகவல்கள் அடங்கிய நூல்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 http://camara-de-maravillas.blogspot.de/2013/02/el-objeto-de-la-semana-azulejo-disenado.html
  2. http://www.bing.com/images/search?q=staatspreis+1959&qpvt=staatspreis+1959&FORM=IGRE#view=detail&id=F1CEAB930BB01273F448AADE5C192DC765EDFAC2&selectedIndex=0
  3. Staatspreis Gestaltung Kunst Handwerk